மொழிபெயர்

உலகில் வேகமான விலங்குகள்

உலகில் வேகமான விலங்குகள் அல்லது உயிரினங்கள் எவை என்பதை சில வகுப்பு பிரிப்புக்களின் அடிப்படையில் நோக்குவது சிறப்பானது. உலகில் வேகமான நிலவாழ் விலங்கு வேங்கை (சிவிங்கிப்புலி) ஆகும். இதன் வேகம் மணிக்கு 109.4–120.7 கி.மீ. (68.0–75.0 மைல்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உலகின் வேகமான பறவையும், விலங்குத் திணையின் (kingdom) வேகமான உயிரினமுமாக பொரி வல்லூறு காணப்படுகின்றது. இது இறையைப் பிடிப்பதற்காக, கீழே வேகமாக இறங்கும் வேகமானது மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) ஆகும். உலகின் வேகமான கடல் விலங்கு கருப்பு மர்லின் என்ற மீன் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதியப்பட்டுள்ளது.

உலகில் வேகமான விலங்கு

உலகில் வேகமான விலங்குகள்

அதிகபட்ச வேகம், விலங்கு வகுப்பு அல்லது வகை என்பவற்றின் அடிப்படையில் உலகில் வேகமான விலங்கு (பறக்கும் வேகம், ஓட்ட வேகம், நீச்சல் வேகம்) பட்டியல் பின்வருமாறு:



விலங்கு வேகம் (கிமீ/மணி) வகுப்பு
பொரி வல்லூறு 389 பறவை
பொன்னாங் கழுகு 320 பறவை
வெள்ளைத் தொண்டை ஊசிவால் உழவாரன் 169 பறவை
ஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 பறவை
கப்பற்பறவை 153 பறவை
மாடப்புறா 148.9 பறவை
தூண்டு-இறக்கை வாத்து 142 பறவை
கருப்பு மர்லின் 129 மீன்
கிர் வல்லூறு 128 பறவை
சாம்பல் தலை கடற்பறவை 127 பறவை
வேங்கை 120.7 பாலூட்டி
துடுப்பு மீன் 109.19 மீன்
அனா ஓசனிச்சிட்டு 98.27 பறவை
கத்தி மீன் 97 மீன்
முட்கொம்பு மறிமான் 88.5 பாலூட்டி
துள்ளும் மறிமான் 88 பாலூட்டி
நீல எருது மான் 80.5 பாலூட்டி
சிங்கம் 80.5 பாலூட்டி
கலைமான் 80.5 பாலூட்டி

உலகில் வேகமான பறவைகள்

அதிகபட்ச பறக்கும் வேகம் அடிப்படையில் உலகில் வேகமான பறவைகள் பட்டியல் பின்வருமாறு: (தீக்கோழி ஓட்ட வேகத்தின் அடிப்படையில் இங்கு சேர்க்கப்பட்டுள்ளது.)

விலங்கு வேகம் (கிமீ/மணி) வகுப்பு
பொரி வல்லூறு 389 பறவை
பொன்னாங் கழுகு 320 பறவை
வெள்ளைத் தொண்டை ஊசிவால் உழவாரன் 169 பறவை
ஐரோவாசிய ஹாபி வல்லூறு 160 பறவை
கப்பற்பறவை 153 பறவை
மாடப்புறா 148.9 பறவை
தூண்டு-இறக்கை வாத்து 142 பறவை
கருப்பு மர்லின் 129 மீன்
கிர் வல்லூறு 128 பறவை
சாம்பல் தலை கடற்பறவை 127 பறவை
வேங்கை 120.7 பாலூட்டி
துடுப்பு மீன் 109.19 மீன்
அனா ஓசனிச்சிட்டு 98.27 பறவை
கத்தி மீன் 97 மீன்
முட்கொம்பு மறிமான் 88.5 பாலூட்டி
துள்ளும் மறிமான் 88 பாலூட்டி
நீல எருது மான் 80.5 பாலூட்டி
சிங்கம் 80.5 பாலூட்டி
கலைமான் 80.5 பாலூட்டி

உலகில் வேகமான ஊர்வன

அதிகபட்ச வேகம் அடிப்படையில் உலகில் வேகமான  ஊர்வனவற்றின் பட்டியல் பின்வருமாறு:

விலங்கு வேகம் (கிமீ/மணி)
நடுத்தாடி பல்லியோந்தி 40
தோல் முதுகு ஆமை 35.28
பச்சைப் பேரோந்தி 35
கருப்பு மாம்பா பாம்பு 23
கொமோடோ உடும்பு 21

உலகில் வேகமான மீன்கள்

அதிகபட்ச நீச்சல் வேகம் அடிப்படையில் உலகில் வேகமான மீன்களின் பட்டியல் பின்வருமாறு:

விலங்கு வேகம் (கிமீ/மணி)
கருப்பு மர்லின் 129
துடுப்பு மீன் 109.19
கத்தி மீன் 97
மஞ்சள் வால் சூரை 76
குறுந்துடுப்பு சுறா 72

உலகில் வேகமான பாலூட்டிகள்

அதிகபட்ச வேகம் அடிப்படையில் உலகில் வேகமான பாலூட்டிகளின் பட்டியல் பின்வருமாறு: (இதில் மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் பறத்தல் அடிப்படையிலும், ஓங்கில் நீச்சல் வேகத்தின் அடிப்படையிலும் சேர்க்கப்பட்டுள்ளன.)

விலங்கு வேகம் (கிமீ/மணி)
மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் 160
வேங்கை 120.7
முட்கொம்பு மறிமான் 88.5
துள்ளும் மறிமான் 88
நீல எருது மான் 80.5
சிங்கம் 80.5
கலைமான் 80.5
முயல் 80
சாம்பல் வேட்டை நாய் 74
கருப்பு வால் குழி முயல் 72
ஆப்பிரிக்க காட்டு நாய் 71
கங்காரு 71
குதிரை 70.76
ஆசியக் காட்டுக் கழுதை 70
தொம்சன் சிறுமான் 70
கயோட்டி கோநாய் 65
ஓங்கில் 65
வரிக்குதிரை 64
புலி 64
கழுதைப்புலி 60
மனிதன் 45
ஆபிரிக்க யானை 24.9

1 கருத்து: