மொழிபெயர்

இலங்கை கோள்மண்டலம்

இலங்கை கோள்மண்டலம் (Sri Lanka Planetarium) என்பது கொழும்பில் அமைந்துள்ள பொதுக் கோள் மண்டலம் ஆகும். இது இலங்கையிலுள்ள முதலாவதும் ஒரேயொரு கோள் மண்டலமாகும். இதனை இலங்கை விஞ்ஞான, தொழில் நுட்ப, ஆராய்ச்சி அமைச்சு பராமரிக்கின்றது. மேலியிருந்து பார்க்கும்போது கட்டட அமைப்பு விரிந்த தாமரைப்பூ அமைப்பில் உள்ளது. கிட்டத்தட்ட 100 உயரமிக்க இக்கட்டடத்தில் (தாமரை இதழுக்கு ஒப்பான) 32 தூண்கள் உள்ளன.

இலங்கை கோள்மண்டலம்
இலங்கை கோள்மண்டலம்

இது 1 பெப்ருவரி 1965 அன்று அவ்வருடம் நடைபெற்ற இலங்கை தொழிற்சாலைக் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் உருவாக்கப்பட்டது. இதனை அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைமைப் பொறியியலாளர் ஏ. என். எஸ். குணசிங்க வடிவமைக்க, ஜெர்மனியப் பொறியியலாளர்களால் கட்டப்பட்டது. இக்கட்டடத்தின் அடிப்படைகள் லிவர்பூல் தலைநகரப் பேராலயத்திலிருந்தும் பிரேசிலியா பேராலயத்திலிருந்தும் எடுக்கப்பட்டன. இக்கட்டத்தின் தரை மண் சிமிட்டிக் கலவையால் வலிவூட்டப்பட்டும், மடிக்கப்பட்ட தகட்டுக் கூரைகள் முன் பொருந்திய மண் சிமிட்டிக் கலவையாலும் அமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டடத்திற்கான நிதி உதவியை இலங்கைக்கு அன்பளிப்பான ஜெர்மனிய ஜனநாயகக் குடியரசினால் வழங்கப்பட்டது.


570 பேருக்கான இருக்கைகள் கொண்ட கேட்போர் மண்டபத்தின் மேல் காவிகைமாடத் திரையில் செயற்கை ஆகாயம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவியாக கட்டடத்தின் நடுப்படுதியில் அண்ட ஔிவீச்சு இயந்திரம் அமைந்துள்ளது. இக்கருவி கிழக்கு ஜெர்மனியின் கார்ல் ஸெய்ஸ் ஏஜியால் உருவாக்கப்பட்டது.

இலங்கைக் கோள்மண்டலம் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் கலை/சட்ட திணைக்களத்தில் அமைந்திருந்தாலும், சுதந்திர சதுக்கத்தின் பின்புற வாயிலுக்கு எதிரில் தனியான நுளைவாயிலைக் கொண்டுள்ளது. இது அமைந்துள்ள முகவரி பேராசிரியர் ஸ்டான்லி விஜேசுந்தரன் மாவத்தை, கொழும்பு 7. இதன் தொலைபேசி எண் 0112586499. காட்சிக்கான நேரம் 10.00 மு.ப முதல் 2.00 பி.ப வரையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக