மொழிபெயர்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகள் என்பது இராணுவ, புலனாய்வு, வெளிநாட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் (த.வி.பு) பிரிவுகளைக் குறிக்கும். நான்காம் ஈழப்போரின்போது இவற்றில் பல அழிக்கப்பட்டுவிட்டன. புலனாய்வு, நிதி பிரிவுகளில் சில வெளிநாடுகளில் எஞ்சியுள்ளன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரிவுகள்

இராணுவப் பிரிவு / தரைப்படைகள்

சார்ல்ஸ் அன்ரனி படையணி 

சார்ல்ஸ் அன்ரனி படையணி 10 ஏப்ரல் 1991 அன்று த.வி.புலிகளினால் முதலாவது சிறப்பு மரபுவழிச் சண்டை படையணியாக உருவாக்கப்பட்டது. இது தொடர்ந்து பிரதான சண்டைப் பிரிவாக விடுதலைப் புலிகளில் இருந்து, பிரதான சண்டைகளான ஜெயசிக்குறு நடவடிக்கை, 1996 முல்லைத்தீவுச் சமர், கிளிநொச்சிப் போர் (2008-2009), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் (2000), ஓயாத அலைகள் நடவடிக்கை 1, 2, 3, 4 ஆகியவற்றில் பங்கு பற்றியது. விடுதலைப் புலிகளின் ஆரம்ப காலத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வலது கரமாக விளங்கிய சீலன் எனப்பட்ட சார்ல்ஸ் லூக்காஸ் அன்ரனி என்பவரின் பெயர் இப்படையணிக்கு இடப்பட்டது. பால்ராஜ், அமுதாப், கோபித் போன்றோர் இப்படையணிக்குத் தலைமை தாங்கிய தளபதிகள் ஆவர். ஈழப்போரின் கடைசி நாட்களில் இப்படையணி முற்றாக அழிக்கப்பட்டது.

ஜெயந்தன் படையணி 



ஜெயந்தன் படையணி கிழக்கு மாகாண போராளிகளைக் கொண்டு காணப்பட்டது. சிறப்பு மரபுவழிச் சண்டைப் படையணியான இது பல சண்டைகளில், குறிப்பாக தவளைப் பாய்ச்சல் நடவடிக்கை (1993), ஜெயசிக்குறு நடவடிக்கை, 1996 முல்லைத்தீவுச் சமர், கிளிநொச்சிப் போர் (2008-2009), ஆனையிறவுப் படைத்தளத் தாக்குதல் (2000) ஆகியவற்றில் பங்கு பற்றியது. இப்படையணி ஜெயந்தன் என்ற போராளியின் நினைவாகப் பெயரிடப்பட்டது. இதற்குத் தலைமை தாங்கிய கீர்த்தியும், இணைத் தலைமை தாங்கிய நகேசும் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டனர். 

கரும்புலிகள் 

கரும்புலிகள் தற்கொலைத் தாக்குதலை நாட்டின் பல பகுதிகளில் நடத்திய விடுதலைப் புலிகளின் ஒரு சிறப்பு படைப்பிரிவாகும். படையணிகளில் இருந்து தெரிந்தெடுக்கப்பட்ட போராளிகளைக் கொண்டு இது அமைக்கப்பட்டது. இது யாழ்ப்பாணம் நெல்லியடி மகா வித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இலங்கை இராணுவத்தினர் மீது, வெடிமருந்து நிரப்பப்பட்ட பாரவூர்தியை ஓட்டிச் சென்று, கப்டன் மில்லர் என்ற வல்லிபுரம் வசந்தன் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, 5 யூலை 1987 இல் உருவாக்கப்பட்டது. இத்தாக்குதலில் கப்டன் மில்லரும் 128 படையினரும் இறந்தனர். இதுவே கரும்புலி ஒன்று தன்னைத்தானே வெடிக்க வைத்த முதலாவது சம்பவமாகும். விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் தலைவர் பொட்டு அம்மான் என்ற சண்முகலிங்கம் சிவசங்கர் இப்பிரிவை வழிநடத்தினார். விடுதலைப் புலிகளின் கூற்றின்படி, 5 யூலை 1987 முதல் 20 நவம்பர் 2008 வரை 378 கரும்புலிகள் (274 ஆண்களும் 104 பெண்களும்) தற்கொலைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

கரும்புலிகள் இலங்கையிலும் இலங்கைக்கு வெளியிலும் பல்வேறுதரப்பட்ட உயர் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மூன்று உலகத் தலைவர்கள் மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்திய ஒரே கிளர்ச்சிக் குழு இதுவாகும். முன்னைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி 21 மே 1991 அன்று படுகொலை செய்யப்ட்டது, முன்னைய இலங்கை சனாதிபதி ரணசிங்க பிரேமதாசா 1 மே 1993 இல் படுகொலை செய்யப்ட்டது, முன்னைய இலங்கை சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீது 18 டிசம்பர் 1999 அன்று தோல்வியில் முடிந்த, அவர் வலது கண்ணை இழந்த படுகொலைத் தாக்குதல் முயற்சி என்பன இத்தாக்குதல்களாகும்.

மரணமடைந்த கரும்புலிகள் மிகவும் கௌரவிக்கப்பட்டதுடன், அவர்களின் குடும்பத்தினர் “மகா வீரர் குடும்பம்” என்று கௌரவிக்கப்பட்டனர். வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அவ்வீரர்கள் இறுதி இரவுணவு உட்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்பட்டனர். இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வழங்கப்படும் அரிதான கௌரவிப்பாகும்.

சிறுத்தைப் படையணி 

சிறுத்தைப் படையணி சிறப்பு தாக்குதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. விடுதலைப் புலிகளின் தலைவரின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்டது. தற்காப்புப் பயிற்சி உட்பட பல சிறப்புப் பயிற்சிகள் பெற்ற அணியாக இது காணப்பட்டது.

ஈரூடக தாக்குதல் படையணி

ஈரூடக தாக்குதல் படையணி நீர் நிலையிலும் தரையிலும் தாக்குதல் நடத்ததுவதற்காக உருவாக்கப்பட்டது.

கடற்புலிகள்

கடற்புலிகள் 1984 இல் உருவாக்கப்பட்ட, விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவாகும். கடற்புலிகள் சிறிதளவான ஆனால் திறமையான தற்கொலைக் குண்டு கலங்களைக் கொண்டிருந்தனர். இது இலங்கைக் கடற்படையின் 29 சிறிய கரைக் கண்காணிப்பு படகுகளையும் ஒரு சரக்குக் கப்பலையும் மூழ்கடித்தனர். பிரதான முகாமை முல்லைத்தீவில் கொண்டிருந்த இதனை சூசை வழிநடத்தினார். 2008 இறுதிக்குப் பின்னரான காலப்பகுதியில் கடற்புலிகளின் சண்டையிடும் திறன், இலங்கை இராணுவம் கடற்புலிகளின் பல முகாம்களை கைப்பற்றியதாலும் இலங்கைக் கடற்படை வட கடலில் கடுமையாக காவலில் ஈடுபட்டதாலும் குறைவடையத் தொடங்கியது.

இப்படையணியில் அங்கயற்கண்ணி நீரடி நீச்சல் பிரிவு, சுலோஜன் ஆழ்கடல் நீரடி நீச்சல் அணி, நிறோயன் நீரடி நீர்ச்சல் பிரிவு, கடற்படை படகு கட்டுமான பிரிவு, கடற்கரும்புலிகள் அணி, கடற்சிறுத்தை சிறப்பு படையணி, சார்லஸ் சிறப்பு அணி, சங்கர் படையணி, வசந்தன் படையணி, சேரன் படையணி, பாக்கியன் ஆழ்கடல் தாக்கும் படையணி, கடல் வேவு அணி ஆகிய பிரிவுகள் காணப்பட்டன.

வான் புலிகள்


வான் புலிகள் விடுதலைப் புலிகளின் வான் படைப்பிரிவு ஆகும். விடுதலைப் புலிகளே உலகில் வானூர்திகளைக் கொண்டிருந்த ஒரே ஒரு இராணுவ இயக்கமாகும். இதன் இருப்பு பற்றி பல ஆண்டுகளாக ஊகிக்கப்பட்டது. ஆனால் மார்ச் 2007 இல் முதலாவது தாக்குதலை மூலம் இதன் இருப்பு வெளிப்பட்டது. வான் புலிகளின் உருவாக்கத்திற்கு காரண கர்த்தவாக கேணல் சங்கர் எனப்பட்ட வைத்தியலிங்கம் சொர்ணலிங்கத்தை விடுதலைப் புலிகள் குறிப்பிட்டனர். 27-28 நவம்பர் 1998 அன்று தமிழ்நெட், புலிகளின் குரல் வானொலி நிலையம் வருடாந்த மாவீரர் நிகழ்வின்போது “முல்லியாவளை மாவீரர் தின நிகழ்வின்போது விடுதலைப் புலிகளின் பிரிவான வான் புலிகளின் வானூர்தி பூத் தூவியது” எனக் குறிப்பிட்டதாக அறிக்கையிட்டது. இதனை இலங்கை வான்படை உறுதி செய்யாவிட்டாலும், சில அறிக்கைகள் முல்லைத்தீவு வானில் அடையாளந் தெரியாத வானூர்தி தென்பட்டதாக தெரிவித்தன. 11 ஆகஸ்ட் 2006 இல் யாழ்ப்பாண அடையாளமற்ற மூலங்களை மேற்கோள் காட்டிய தமிழ்நெட் “குறைந்தது ஒரு அடையாளந் தெரியாத வானூர்தி பலாலி இலங்கை இராணுவ முகாம் மேலாப் பறந்து படையினர் மீது ஏவுகணை தாக்குதல்” நடத்தியது எனக் குறிப்பிட்டது. ஆயினும், இந்த வானுர்திகள் முதன் முறையாக கட்டுநாயக்கா வான் படைத்தளம் மீது மார்ச் 2007 இல் தாக்குதல் நடத்தியபோது அடையாளம் காணப்பட்டன. அத்தாக்குதலுக்கு இரண்டு சிலின் இசட் 143 இலகு வானுர்திகள் பயன்படுத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து 8 மேலதிக தாக்குதல்கள் இராணுவ இலக்குகளின் மீது நடத்தப்பட்டன. இறுதியாக, பெப்ருவரி 2009 இல் கொழும்பிலுள்ள இலங்கை வான் படைத்தளத்தை இலக்கு வைத்து வான் தற்கொலை தாக்குதல் நடத்தப்பட்டது. வடக்கு தாக்குதலின்போது இலங்கை படைத்துறை விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான வானூர்தி ஓடுபாதைகளைக் கைப்பற்றியது.

இம்ரான் பாண்டியன் படையணி 

இம்ரான் பாண்டியன் படையணி வேலுப்பிள்ளை பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டது. அமுதன், கடாபி ஆகியோர் இதன் தலைவர்களாவர். மெய்ப்பாதுகாவலர்களைக் கொண்ட அணியினர் மே 2009 இல் கொல்லப்பட்டனர்.

ராதா வான் காப்புப் படையணி / ராதா விமான எதிர்ப்புப் படையணி

ராதா படையணி வான் காப்பிற்காகவும், விடுதலைப் புலிகளுக்குள் உளவு பார்ப்பதற்காகவும்,  பிரபாகரனின் தனிப்பட்ட பாதுகாப்பிற்காகவும்  நியமிக்கப்பட்டது. 2004 இல் உருவாக்கப்பட்ட இப்படையணி புதிய பிரிவாகவே காணப்பட்டது. இதன் கட்டளைத் தளபதி சிலம்பரசன் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட, துணைத் தலைவர் அன்பு பிடிபட்டார். 

கிட்டு பீரங்கிப் படையணி

கிட்டு பீரங்கிப் படையணி விடுதலைப் புலிகளின் பீரங்கிப் படையணியாகும். இதற்குத் தலைதாங்கிய மணிவண்ணன் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டார். இப்பிரிவின் கீழ் இருந்த முக்கிய ஆயுதங்கள் பின்வருமாறு:

கீர்த்தி சிறி சிறு பீரங்கிப் படையணி / குட்டிச்சிறி மோட்டார் படையணி

விடுதலைப் புலிகளின் சிறு பீரங்கிப் படையணியாக கீர்த்தி சிறி சிறு பீரங்கிப் படையணி செயற்பட்டது. இது 500 இற்கு மேற்பட்ட 82/81 மிமீ சிறு பீரங்கிகளையும், 150 இற்கு மேற்பட்ட 150 மிமீ சிறு பீரங்கிகளையும், நான்கு 140 மிமீ சிறு பீரங்கிகளையும் கொண்டிருந்தது. இப்படையணியின் கட்டளைத் தளபதி கோபால் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டார். 

விக்டர் கவச வாகன எதிர்ப்பு மற்றும் கவச வாகனப் படையணி

விக்டர் கவச வாகன எதிர்ப்புப் படையணி 1995 இல் உருவாக்கப்பட்டது. இது கவச வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தவும், கவச வாகனங்களைக் கொண்ட அணியாகவும் செயற்பட்டது. இதனிடம் 350 இற்கும் மேறபட்ட ஆர்.பீ.ஜி-7 ஆயுதங்கள் காணப்பட்டன. இப்படையணியில் 2001 இல் இலங்கை இராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரீ-55 பிரதான போர்க் கவச வாகனமம் உட்பட சில கவச வாகனங்களைக் கொண்டு காணப்பட்டது. இதனை இலங்கை இராணுவம் மீளவும் 2009 இல் புதுமாத்தளனில் இருந்து கைப்பற்றியது. 

அன்பரசி படையணி

அன்பரசி படையணி விடுதலைப் புலிகளின் வானூர்தி எதிர்ப்புப் படையணியாகச் செயற்பட்டது. இது நான்கு வெற்றிகரமான நில-வான் ஏவுகணைத் தாக்குதல்களை இலங்கை விமானப்படைக்கு எதிராகச் செயற்படுத்தியது. இதன் தாக்குதலில் இரு அவ்ரோ வானூர்திகள் (28, 29 ஏப்ரல் 1995), ஒரு அன்டனோவ் ஏஎன்-32 வானூர்தி (22 நவம்பர் 1995), 1 மில் எம்.ஐ.-17 உலங்கு வானூர்தி (22 ஜனவரி 1996) அழிக்கப்பட்டன. இந்த நான்கு தாக்குதல்களும் பலாலி விமானப் படைத்தளத்தில் இடம் பெற்று, 202 பேர் இறந்தனர். மேலும் பல தாக்குதல்களுக்கும் விடுதலைப் புலிகள் உரிமை கோரினர். அன்பரசி படையணி குறைந்தது ஐந்து இக்லா 1 ஏவுகணைச் செலுத்தியையும் 16 இற்கு மேற்பட்ட இக்லா 1 (எஸ்.ஏ 16) ஏவுகணைச் செலுத்திகளையும் கொண்டிருந்தது.

பொன்னம்மான் கண்ணிவெடிப் பிரிவு

விடுதலைப் புலிகளின் கண்ணிவெடிப் பிரிவான இதன் பொருப்பாளர் அஸ்மி ஆனந்தபுரச் சண்டையில் பிடிபட்டார். மனிதநேய குண்டு செயலிழப்பு அமைப்பின் அறிக்கைகளின்படி, விடுதலைப் புலிகள் சொந்தத் தயாரிப்புக்களை அதிகமாக முன்னரங்க பாதுகாப்பு மற்றும் முகாம் பகுதிகளில் பயன்படுத்தினர். இவர்களின் தயாரிப்பு தனிநபர் எதிர்ப்பு கண்ணிவெடிகளாக ஜொனி 95, ஜொனி 99, ரங்கன் 99, இதழ் கண்ணிவெடி, மட்பானைக் கண்ணிவெடி, இளவழுதி 1 (இ.ரீ.எம் 01), இளவழுதி 11 (இ.ரீ.எம் 01) என்பன காணப்பட்டன. இவர்கள் 1999 இற்குப் பின் பொதுவாக ஜொனி 99, ரங்கன் 99 என்பவற்றை தனிநபர் எதிர்ப்பு கண்ணிவெடிகளைப் பயன்படுத்தினர். இவை இரண்டும் ‘பிளாஸ்டிக்’ மூலம் மூடப்பட்ட அழுத்த இயக்க கண்ணிவெடிகளாகும். இதற்கான 90 – 110 கிராம் சி4 வெடிமருந்து பயன்படுத்தப்பட்டது. 

கைத்துப்பாக்கி குழு (பிஸ்டல் குழு)

கைத்துப்பாக்கி குழு அல்லது பிஸ்டல் குழு எனப்படுவது அரச முகவர்கள், பாதுகாப்புப் படையினர், படையினருக்கு தகவல் கொடுப்போர், மாற்றுக் கொள்கை உடையோர் மீது பல தாக்கிவிட்டு ஓடும் நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

துணைப் படைகள்

துணைப் படைகள் சிறப்பு அதிரடிப்படை என்ற சிறப்புப் பெயருடன் செயற்பட்ட குழுக்களாகும்.

எல்லைப் படை
எல்லைப் படை விடுதலைப் புலிகளினால் உள்வாங்கப்பட்ட பொதுமக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. இதில் கிட்டத்தட்ட 5000 பேர் குடிமக்கள் படைகளாக இருந்து பின்னர் தாக்குதல், தற்காப்பு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டனர். இதில் இருந்த அங்கத்தவர்களுக்கு சிறுதொகை சம்பளம் வழங்கப்பட்டது.

கிராமப் படை
கிராமப் படை விடுதலைப் புலிகளின் துணைப்படையாக செயற்பட்டது. இது விநியோக நடவடிக்கைக்காக தாக்குதல் நடவடிக்கை உட்பட்ட செயற்பாடுகளில் பயன்படுத்தப்பட்டனர். இதில் கிட்டத்தட்ட 5000 உறுப்பினர்கள் இருந்தனர். 

துணைப் படை
துணைப் படை விடுதலைப் புலிகளின் உதவிப் படையாகச் செயற்பட்டது.

பெண்கள் பிரிவு

விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவு இரண்டு படையணிகளைக் கொண்டு காணப்பட்டது. இவை தாக்குதல் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். 

மாலதி படையணி

விடுதலைப் புலிகளின் இரண்டு பெண் படையணிகளில் இது ஒன்றாகும். விடுதலைப் புலிகளில் முதலாவது கொல்லப்பட்ட பெண் போராளியின் பெயர் இதற்கு இடப்பட்டுள்ளது. மாலதி என்ற போராளி இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிரான நடவடிக்கையின்போது கொல்லப்பட்டார். இதனுடைய கட்டளைத் தளபதியாக விதுஷாவும், துணைத் தளபதியாக கமலினியும் ஏப்ரல் 2009 இல் ஆனந்தபுரச் சண்டையில் கொல்லப்பட்டார்.

சோதியா படையணி

சோதியா படையணி விடுதலைப் புலிகளின் மகளீர் படையணிகளில் ஒன்றாகும். 1989 இல் உருவாக்கப்பட்ட பெண் பிரிவின் முதலாவது தளபதியாகச் செயற்பட்ட சோதியா என்பவரின் பெயர் இதற்குப் பெயரிடப்பட்டது. இவர் 1990 இல் மூளையுறை அழற்சியினால் மரணமடைந்தார். இதன் கட்டளைத் தளபதி துர்காவும் துணைத் தளபதி மோகனாவும் ஆனந்தபுரச் சமரில் கொல்லப்பட்டார்.

புலனாய்வுப் பிரிவு (உளவுப் பிரிவு)

புலி இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை



புலி இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவை (TOSIS) என்பது 1983 இல் உருவாக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுச் சேவையாகும். இது பொட்டு அம்மானால் தலைமை தாங்கி நடத்தப்பட, இதன் துணைத் தலைவராக கபில் அம்மான் காணப்பட்டார். கரும்புலிகளின் தற்கொலைத் தாக்குதல்கள் உட்பட, புலிகளின் எல்லாத் தாக்குதல்களுக்கும் இது கருவியாகச் செயற்பட்டது. மாத்தையா எனப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா இந்தியாவின் புலனாய்வு அமைப்பான ‘றோ’விற்கு இரகசியங்களை தெரிவித்ததைத் கண்டுபிடித்ததில் மிக முக்கிய பங்காற்றியது. புலிகளின் புலனாய்வுப் பிரிவை நிர்வாகிக்க 1988 இல் பிரபாகரனால் பொட்டு அம்மான் நியமிக்கப்பட்டார். இதற்கு முன் இதனை 1987 இல் இயக்கத்தைவிட்டு வெளியேறிய வசந்தன் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இதன் உறுப்பினர்கள் பலர் மே 2009 இல் கொல்லப்பட்டனர். இதன் தற்போதைய நிலை தெரியாது. இதில் வெளியகப் புலனாய்வுப் பிரிவு, உள்ளகப் புலனாய்வுப் பிரிவு ஆகிய பிரிவுகள் இயங்கின. 

இராணுவப் புலனாய்வு / படைப் புலனாய்வுப் பிரிவு

புலி இயக்க பாதுகாப்புப் புலனாய்வுச் சேவையிலிருந்து புலிகளின் இராணுவப் புலனாய்வு வேறாக சார்ல்ஸ் எனப்பட்ட சண்முகம் ரவிசங்கர் என்பவரால் வழிநடத்தப்பட்டது. இவர் இலங்கை படைத்துறையின் ஆழ ஊடுருவித்தாக்கும் படையணியின் ‘கிளைமோர்’ தாக்குதலில் ஜனவரி 2008 இல் மன்னார் மாவட்டத்தின் பாலமடுவில் வைத்துக் கொல்லப்பட்டார்.  

அரசியல் பிரிவு

மக்கள் நிர்வாக விடயங்களுக்காக புலிகளின் வேறு ஒரு பிரிவாக அரசியல் பிரிவு செயற்பட்டது. சு. ப. தமிழ்ச்செல்வன் நவம்பர் 2007 இல் இறக்கும் வரை இதன் தலைவராகச் செயற்பட்டார். இவருக்கும் பின் பாலசிங்கம் நடேசன் தலைமைப் பொறுப்பை ஏற்று, இவர் 18 மே 2009 இல் இறக்கும் வரை அதன் தலைவராக இருந்தார். அரசியல் பிரிவு பல திணைக்களங்களை தன்னுள் கொண்டிருந்தது. இது ஈழப்போர் முடியும் வரை கிட்டத்தட்ட ஒரு தனிநாடாகச் செயலாற்றியது. ஆயினும் இலங்கை அரசாங்கத்துடனான சமாதானப் பேச்சு வார்த்தைகளின்போது, புலிகளின் ஆலோசகரும் தலைமைப் பேச்சாளருமான அன்ரன் பாலசிங்கம் மூலம் அரசியல் பிரிவு உள்வாங்களுடன் செயற்படுத்தப்பட்டது. ஆயினும் முக்கிய தீர்மானங்கள் பாலசிங்கத்தினாலும் புலிகளின் தலைவர் பிரபாகரனினாலும் எடுக்கப்பட்டன.

தமிழீழ பொருளாதார அபிவிருத்தி நிறுவனம்

தமிழீழ பொருளாதார அபிவிருத்தி நிறுவனம் (TEEDOR) விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் சகல அபிவிருத்தி மக்கள் செயற்பாடுகளைக் கவனித்தது. கல்வி, போக்குவரத்து, நிர்வாக சேவைகள், சுகாதார சேவை, வங்கி, வனப் பாதுகாப்பு, மீன்பிடி, தொற்சாலைகள், வரி சேகரித்தல், வருவாய் சேகரித்தல், பொதுக் கருவிகள், விவசாயம், நீர்ப்பாசனம், சுற்றாடல், வீதி அபிவிருத்தி, கட்டுமானம் என்பன இதனுள் உள்ளடங்கும். இதன் தலைமையகம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. ஈழ புரட்சிகர மாணவர் இயக்க (EROS) முன்னைய முக்கிய தலைவரான வி. பாலகுமாரன் இதற்குத் தலைமை தாங்கினார்.

சர்வதேச சமாதானச் செயலகம்

புலிகளின் சமாதானச் செயலகம் 2002 யுத்தத் தவிர்ப்பு ஒப்பந்தத்தின் பின் உருவாக்கப்பட்டு, இயக்கத்தின் சார்பில் வெளிநாட்டுத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இது தொடர்பான அறிக்கைகளை ஊடகங்களுக்கு தெரிவிப்பதிலும் செயற்பட்டது. இதன் இயக்குனராக புலித்தேவன் எனப்பட்ட சீவரெட்ணம் பிரபாகரன் செயற்பட்டார்.

விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி

முன்னர், மாத்தையா எனப்பட்ட கோபாலசாமி மகேந்திரராஜா விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற புலிகளின் அரசியற்கட்சிக்குத் தலைமை தாங்கினார். ஆயினும் அவர் இந்தியாவின் புலனாய்வுப் பிரிவுக்கு இரகசியங்களைக் கசியவிட்டதால், வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த அரசியற் கட்சியும் பின்னர் கைவிடப்பட்டது.

காவல்துறை / தமிழீழ காவல்துறை

புலிகளின் காவல் துறை 1992 இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் கிளிநொச்சியில் அமைந்திருந்தது. இதன் தலைவராக பாலசிங்கம் நடேசன் இயங்கினார். இதன் கீழ் குற்றதடுப்புபிரிவு, விசாரணை பிரிவு, வீதி போக்குவத்து கண்காணிப்பு பிரிவு, தமிழீழ காவல்துறை தாக்குதல் படையணி, குற்றப் புலனாய்வுப் பிரிவு என்பன இயங்கின.

விடுதலைப் புலிகளின் நீதிமன்றம்

விடுதலைப் புலிகள் தனியான நீதிமன்றத்தை கொண்டிருந்தனர். இது புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் பொதுமக்கள், குற்ற வழக்குகளைக் கையாண்டது. இதன் பிரதான நீதிமன்றம் கிளிநொச்சி நகரில் அமைக்கப்பட்டிருந்தது. சட்ட ஆக்க கழகம், தமிழீழ நீதி மன்றம் என்பன தமிழீழ நிதித்துறையின் கீழ் இயங்கின. நிதித்துறையின் ஒரு அலகாகச் செயற்பட்ட இதனைப்போன்று,  நிதித்துறையின் பிற அலகுகளாக தமிழீழ நிர்வாக நிதிபிரிவு, தமிழீழ வழங்கல் பிரிவு, கொள்முதல் பிரிவு, அனைத்துலகப் பிரிவு, தமிழீழ போக்குவரத்து கழகம், தமிழீழ சட்டக்கல்லூரி ஆகியன காணப்பட்டன.

தமிழீழ வைப்பகம்

தமிழீழ வைப்பகம் விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவின் கீழ் செயற்பட்ட உத்தியோகபூர்வமான அரசியல் பிரிவாகும். இது 1994 இல் ஆரம்பிக்கப்பட்டது. வன்னிப் பகுதியில் 11 கிளைகளைக் கொண்டு காணப்பட்டது. இது இலங்கையின் வட, கிழக்குப் பகுதியில் உள்ளவர்களுக்கு கடன் வசதிகளைச் செய்தது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் நிர்வாக தலைநகராகச் செயற்பட்ட கிளிநொச்சி இலங்கைப் படையினரால் 2 ஜனவரி 2009 அன்று கைப்பற்றப்பட்டதும் இதன் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டன.

புலிகளின் குரல்

புலிகளின் குரல் 1990 இல் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட புலிகளின் வானொலி நிலையமாகும். ஒவ்வொரு வருடமும் 27 நவம்பர் புலிகளின் தலைவரது மாவீரர் உரையினை ஒலிபரப்பியது. 27 நவம்பர் 2007 அன்று மாவீரர் தின உரை ஒலிபரப்பாகிக் கொண்டு இருந்தபோது இலங்கை விமானப்படையால் தாக்கப்பட்டது. இதனை இலங்கை விமானப்படையின் 23 தாக்குதல்களில் ஒன்று என புலிகள் குறிப்பிட்டனர்.

விளையாட்டுப் பிரிவு

விடுதலைப் புலிகளின் விளையாட்டுப் பிரிவு பாப்பா என்பவரால் தலைமை தாங்கி நடத்தப்பட்டது. இவர் மே 2009 இல் கைது செய்யப்பட்டு, தற்போது இலங்கை அரசின் புலனாய்வு சேவையில் இணைக்கப்பட்டுள்ளார்.

உலக வலையமைப்பு 

விடுதலைப் புலிகளின் பிரிவுகளில் உலக வலையமைப்பு பிரிவு பற்றி அரிதாக அறிந்து கொள்ளப்பட்டுள்ளது. இதன் முதன்மையான செயற்பாடுகளான கொள்கை பரப்புதல், நிதி திரட்டல், ஆயுத பெறுதலும் கொண்டு வருதலும் ஆகியன உள்ளன. புலிகளின் உச்ச காலகட்டத்தில் 42 அலுவலகங்கள் உலகம் பூராகவும் காணப்பட்டது.

கேபி கிளை

கேபி அல்லது செல்வராசா பத்மநாதன் எனப்பட்ட குமரன் பத்மநாதன் புலிகளின் பிரதான ஆயுத கொள்வனவாளரும் இதற்கான சர்வதேச தலைவராகவும் 1893 முதல் 2002 இல் நோர்வேயின் மத்தியஸ்தத்துடனான போர் தவிர்ப்பு ஒப்பந்தம் வரை செயற்பட்டார். கேபி 23 இற்கு மேற்பட்ட பெயர்களில் 200 இற்கு மேற்பட்ட கடவுச்சீட்டுக்களுடன் பல கருப்புச் சந்தைகளுக்கு பயணம் செய்தார். இவரின் தொடர்ச்சியான ஆயுத வழங்கல் முதலாம், இரண்டாம், மூன்றாம் ஈழப்போருக்கு உரமளித்தது. கேபி கிளையின் முக்கிய அடைவுகளில் முக்கியமாக, 1994 இல் 60 டன் வெடிமருந்துகளை (50 டன் டிஎன்டி, 10 ஆர்டிஎக்ஸ்) உக்ரைனில் இருந்து வங்காளதேச பாதுகாப்பு அமைச்சரின் பயனர் சான்றிதழை மோசடி செய்து தருவித்தது, இலங்கை இராணுவத்திற்காக தன்சானியாவிலிருந்து வாங்கப்பட்ட 81 மிமீ சிறு பீரங்கிக்கான 32,400 குண்டுகளை களவாடியது ஆகியவற்றைக் குறிப்பிடலாம். 2002 இல் கஸ்ரோவினாலும் தமிழ்ச்செல்வனானலும் ஊழல், போதிய செயற்பாடின்மை, பாலியல் ஒழுங்கின்மை போற்றவற்றுக்காக கேபி குற்றம் சுமத்தப்பட்டார். பின்னர் 2003 இல் கேபி ஒதுக்கப்பட்டு, தானாக ஓய்வுக்கு உட்படுத்தப்பட்டார். 2008 இல் படையினர் தொடர்ச்சியாக புலிகளை நிலைகுலையச் செய்தபோது பிரபாகரனால் மீளவும் இயக்கத்திற்கு அழைக்கப்பட்ட, ஜனவரி 2009 இல் இணைந்து கொண்டார். புதிதாக உருவாக்கப்பட்ட சர்வதேச தொடர்பாடல் திணைக்களத்திற்கு அவர் நியமிக்கப்பட்டார். இலங்கைப் புலனாய்வுப் பிரிவு மலேசிய அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் ஆகஸ்ட் 2009 இல் கோலாலம்பூரில் உள்ள டியூன் விடுதியில் அவரைக் கைது செய்தது. 

கஸ்ரோ கிளை

2002 முதல் கேபி கிளையிலிருந்து புலிகள் கஸ்ரோ எனப்பட்ட வீரக்கத்தி மணிவண்ணன் தலைமையில் ஆயுத வழங்கல் மற்றும் பிற வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான சர்வதேச செயலகத்தைச் சார்ந்து இருந்தனர். கஸ்ரோ கிளிநொச்சியில் இருந்தாலும் வெளிநாடுகளில் உள்ள கிளை வலையமைப்பு வழிநடத்தினார். இவரால் நியமிக்கப்பட்ட நெடியவன் எனப்பட்ட போரின்பநாயகம் சிவாபரன் நோர்வேயில் புலிகளின் தலைவராகச் செயற்பட்டார். கஸ்ரோ முல்லைத்தீவின் வெள்ளமுள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தின் இறுதித் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

ஐயண்ணா குழு

ஐயண்ணா எனப்பட்ட பொன்னையா ஆனந்தராஜா தலைமையிலான குழு புலிகளின் வட கொரிய அரசாங்கத்துடனான தொடர்புக்குப் பொறுப்பாகவிருந்தது. இவர் 1997 முதல் பேங்காக்கிலுள்ள வடகொரியத் தூதரகத்தில் வேலை செய்தார். இக்குழு புலிகளின் புலனாய்வு மற்றும் நிதி உதவி, வருவாய் செய்பாடுகளை கண்கானித்து, நிச்சயப்படுத்தும் பகுதியாகச் செயற்பட்டது. 1997 முதல் புலிகளின் பல ஆயுதக் கொள்வனவுகள் வடகொரியாவிலிருந்து வந்தது.

தொலைக்காட்சி நிலையங்கள்

புலிகளின் உலக வலையமைப்பு சில தொலைக்காட்சி அலைவரிசைகளை ஐரோப்பாவிலும் அவுஸ்திரேலியாவிலும் கொண்டிருந்தது. தரிசனம் ரீவி, தமிழ் தொலைக்காட்சி வலையமைப்பு, மக்கள் ரீவி, யூரோ ரீவி ஆகியன பிரதான கொள்கை பரப்பு ஊடகங்களாகும். தரிசனம் பிரான்ஸ், இஸ்ரேல், கொங்கொங் நிறுவனங்களூடாக ஒலிபரப்புச் செய்தது. இது பிரான்ஸ், இஸ்ரேல் செய்மதியான குளோப்காஸ்ட் என்பதை பயன்படுத்தியது. 2008 இல் தரிசனம் இஸ்ரேலால் தடை செய்யப்பட்டது. மே 2007 இல் தமிழ் தொலைக்காட்சி வலையமைப்பை பிரான்ஸ் தடை செய்தது. மே 2008 இல் இத்தாலி யூரோ ரீவியைத் தடை செய்தது. சென்னையில் புலி ஆதரவுக் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி உதவியுடன் ஒலிபரப்புச் செய்யப்பட்டது.

பன்னாட்டு வானொலி

இலண்டனை தளமாகக் கொண்ட சர்வதேச ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் வானொலி 1997 இல் ஆரம்பிக்கப்பட்டது.

பிரசுரங்கள்

எண்ணிம, அச்சு ஊடகங்கள் பல புலிகளின் உலக வலையமைப்பினால் செயற்படுத்தப்பட்டன. இவற்றில் தமிழ்நெட், பரிஸை தளமாகக் கொண்ட சங்கதி, ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட பதிவு குறிப்பிடத்தக்கனவாகும். பரிஸ், இலண்டன், கனடா, அவுஸ்ரேலியாவை தளமாகக் கொண்டு அச்சு ஊடகங்களில் அதிகம் பதிப்பிக்கப்பட்ட ஈழமுரசு வெளியாகியது.

பிற இராணுவப் பிரிவுகள்

சிறப்பு உந்துகணை செலுத்திப் படையணி, குறி பார்த்துச் சுடும் படையணி, ஆயுதக்களஞ்சிய சேர்க்கைப் பிரிவு, பாதுகாவலர் பிரிவு, முறியடிப்புப் பிரிவு, கப்டன் முகிலன் நீண்ட தூர விசேட வேவு காவல் அணி, ஆழ ஊடுருவும் படையணி, உந்துருளிப் படையணி, களமுனை முறியடிப்புப் பிரிவு, களமுனை மருத்துவப் பிரிவு ஆகிய பிரிவுகள் சிறப்புச் செயல்பாடுகளுக்காக இயங்கின.

பிற

வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு, கணிணி தொழில்நுட்ப பிரிவு, இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு, போர்கருவி தொழிற்சாலை (ஆயுத உற்பத்தி, வெடிபொருள் தொழில்நுட்ப பிரிவு), மின்னணுவியல் சிறப்பு உதவிப் பிரிவு (இலத்திரனியல் தொழில்நுட்ப பிரிவு), தமிழீழ படைத்துறைப் பள்ளி (தமிழீழ இராணுவ விஞ்ஞான கல்லூரி), பொறியியல் பிரிவு, விசேட வரைபடப் பிரிவு ஆகியன இராணுவ செயற்பாடுகளுக்கு உதவியாகச் செயற்பட்டன.

  • விடுதலைப்புலிகளின் ஆங்கில கல்லூரி
  • திரைப்படபுத்தக மொழிபெயர்ப்பு துறை
  • பொற்காலம் வண்ணக் கலையகம்
  • அருச்சுனா புகைப்படக் கலையகம்
  • ஒளிநிலா திரையரங்கு
  • தமிழீழ கல்வி மேம்பாட்டு கழகம்
  • தமிழீழ கலை பண்பாட்டு கழகம்
  • விடுதலைப்புலிகளின் சுகாதாரப் பிரிவு
  • சூழல் நல்லாட்சி ஆணையம்
  • தமிழீழ வனவள பாதுகாப்பு பிரிவு
  • பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம்
  • பொருண்மிய மதியுரைகம்
  • தமிழீழ காலநிலை அவதானிப்பு நிலையம்
  • ஓளிக்கலைப்பிரிவு, தமிழிழ தேசிய தெலைக்காட்சி, ஒளி வீச்சு ஒலிபரப்பு, புலிகளின் குரல் பத்திரிகை, ஈழநாதம் பத்திரிகை, சுதந்திரப் பறவைகள் பத்திரிகை, விடுதலைப்புலிகள் ஏடு
  • மருத்துவ பிரிவு, திலீபன் மருத்துவ சேவை 
  • நந்தவனம் - வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்புவோர்களுக்கான தொடர்பாடல் சேவை மையம், சுங்க வரித்துறை. 
  • தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் புனர்வாழ்வு அபிவிருத்திக் கழகம், சமூக பொருளாதார அபிவிருத்தி வங்கி, கிராமிய அபிவிருத்தி வங்கி
  • அரசறிவியற் கல்லூரி
  • வன வளத்துறை
  • கலை பண்பாட்டுக்கழகம்
  • ஆவணப்படுத்தல், பதிப்புத்துறை, வெளியிட்டுப் பிரிவு
  • போக்குவரத்து கண்காணிப்புப் பிரிவு
  • அனைத்துலக தொலைத்தொடர்பு செயலகம்
  • மீன்பிடி வளத்துறை
  • விழிப்புக்குழு (கிராமங்களுக்கான இரவுப் பாதுகாப்பு)
  • தொழில் நுட்பக் கல்லூரி
  • சூழல் நல்லாட்சி ஆணையம்
  • தமிழீழ பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சித்துறை
  • தமிழீழ போக்குவரவுக் கழகம்
  • மனிதவள செயலகம் (தமிழீழ கிராம சேவகர் பிரிவு)
  • வளங்கள் பகுதி
  • மக்கள் தொடர்பகம் (மக்கள் குறை நிறைகளை தலைவரிடம் கொண்டு செல்லும் பிரிவு)
  • விலங்கியல் பண்ணைகள்
  • விவசாயத் திணைக்களம்
  • தமிழ்மொழி காப்பகம்
  • தமிழீழ கல்விக் கழகம்
  • தமிழீழ கல்வி மேம்பாட்டுப் பேரவை
  • காந்தரூபன் அறிவுச்சோலை (ஆதரவற்ற ஆண் குழந்தைகளுக்கானது)
  • செஞ்சோலை (ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கானது)
  • செந்தளிர் (ஐந்து வயதிற்குட்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கானது)
  • வெற்றிமனை (வலுவிழந்தோருக்கானது)
  • அன்பு முதியோர் பேணலகம்
  • இனிய வாழ்வு இல்லம்
  • சந்தோசம் உளவள மையம் (மனநோயாளிகளுக்கானது)
  • நவம் அறிவுக்கூடம் (பார்வை இழந்த போராளிகளுக்கானது)
  • மயூரி இல்லம் (இடுப்பின் கீழ் வலுவிழந்த பெண் போராளிகளுக்கானது)
  • சீர்திருத்தப் பள்ளி
  • முரளி முன்பள்ளி (ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஆரம்பப் பள்ளி)
  • உதயதாரகை (விதவைகளுக்கானது)
  • பெண்கள் மறுவாழ்வு அபிவிருத்தி மையம்
  • பசுமை வேளாண் சேவை (விவசாயிகளுக்கானது)
  • எழுகை தையல் பயிற்சி மையம்
  • மாணவர் அமைப்பு
  • அறிவு அமுது புத்தகசாலை
  • ஒளிப்பட பதிவுப் பிரிவு திரைப்பட வெளியிட்டுப் பிரிவு
  • நிதர்சனம் (திரைப்படத் தயாரிப்பு)
  • தர்மேந்திரா கலையகம் (திரைப்பட கலைகள் சம்மந்தமானது)
  • தமிழீழ வானொலி
  • தமிழீழ தேசியத் தொலைக்காட்சி
  • தமிழீழ இசைக்குழு
  • காலணி (பாதணி உற்பத்தி மையம்)
  • சேரன் உற்பத்திப் பிரிவு
  • சேரன் வாணிபம்
  • சேரன் சுவையகம்
  • சேரன் வெதுப்பகம்
  • சேரன் அரைக்கும் ஆலை (அரிசி உற்பத்தி)
  • பாண்டியன் உற்பத்திப் பிரிவு
  • பாண்டியன் சுவையூற்று
  • பாண்டியன் பல்பொருள் வாணிபம்
  • சோழன் தயாரிப்புகள்
  • பொன்னம்மான் உரைவகை வாணிபம்
  • தென்றல் இலத்திரனியலகம்
  • தமிழ்மதி நகை மாடம்
  • தமிழ்நிலா நகை மாடம்
  • தமிழரசி நகை மாடம்
  • அந்திவானம் பதிப்பகம்
  • இளந்தென்றல் குடிவகைப் பிரிவு
  • இளவேனில் எரிபொருள் நிலையம்
  • இளந்தென்றல் தங்ககம் (தங்குமிடம்)
  • 1-9 தங்ககம் (தங்குமிடம்)
  • மருதம் வாணிபம்
  • மருதம் புலால் விற்பனை நிலையம் (மாமிசம்)
  • மரமடுவம் (காட்டுமரங்கள், விறகுகள் விற்பனைப் பகுதி)
  • கேடில்ஸ் தும்புத் தொழிற்சாலை
  • மாவீரர் அரங்குகள்
  • மாவீரர் நினைவு விளையாட்டு அரங்குகள்
  • மாவீரர் நினைவு வீதிகள்
  • மாவீரர் நினைவு குடியிருப்புத்திட்டங்கள்
  • மாவீரர் போராளிகள் குடும்பநலன் காப்பகம்
  • மாவீரர் நினைவுப் பூங்காக்கள்
  • மாவீரர் நினைவுப் படிப்பகங்கள்
  • மாவீரர் நினைவு நூலகங்கள்
  • மாவீரர் நினைவு விலங்கியல் காப்பகம்
  • மாவீரர் பணிமனை
  • இரணைமடு நகரில் புதிதாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருந்த தமிழீழ பல்கலைக் கழகம் இறுதி யுத்தத்தினால் கைவிடப்பட்டது.


நிதி, நிர்வாக, நீதி, இராணுவ, பிரச்சார, கலை, கலாச்சார அலகுகள் பல காணப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக