வரலாறு மற்றும் தற்கால தமிழர் வாழ்வியல் சூழலுடன் தொடர்புபட்ட கொடிகளை
தமிழர் கொடிகள் (
Flags of Tamils) என அழைக்கலாம். இக்கொடிகள் தமிழர் தங்களை அடையாளம், பிரதிநிதித்துவம் ஆகியவற்றை வெளிப்படுத்த இவற்றைப் பயன்படுத்தினர். இவற்றில் தமிழர்களை ஆட்சி செய்த அரசுகளின் கொடிகள் இடம்பெறவில்லை. அவற்றை தமிழர் தங்கள் அடையாளங்களாகக் கருதவில்லை. ஆனால் தமிழர்களை அவர்களின் ஒத்துழைப்புடன் ஆட்சிசெய்த அரசுகளின் கொடிகளும் தமிழர் வாழ்வியலுடன் நெருங்கிய தொடர்பு கொண்டன.
தமிழ்நாடு மாநில அரசு முக்கியத்துவமிக்க சமகால அரசு என்றாலும், தமிழ்நாட்டிற்கென கொடி எதுவுமில்லை.
வரலாற்று தமிழர் கொடிகள்
சேர நாடு
|
அம்பு வில்லு |
சேர அரசர்கள் வில்லவர் கோன் என்ற பெயரைக் கொண்டிருந்தனர். பண்டைய சேர நாட்டில் வில்லவர் குலம் காணப்பட்டது.
சோழ நாடு
|
பாயும் புலி |
பெரியபுராணம் சோழரின் புலிக்கொடி பற்றி குறிப்பிடுகின்றது.
பாண்டிய நாடு
|
இரட்டை மீன்கள் |
புராணக்கதையின்படி, பாண்டிய மன்னனின் மகளாக இந்து கடவுளான மீனாட்சி மகளாக பிறந்தார். அவளுடைய கண்கள் மீன் போன்ற வடிவமுடையதும், பாண்டிய மரபில் இது சின்னமாகவும் கொடியாகவும் அமைந்தது.
பல்லவ நாடு
|
சிங்கம் |
பல்லவ அரச குல சின்னமாக சிங்கமும் எருதும் (நந்தி) காணப்பட்டன. நரசிம்மவர்மன் சிங்கத்தையும், நந்திவர்மன் நந்தியையும், பரமேஸ்வரவர்மன் மண்டையோடு கதாயுதத்தையும் பயன்படுத்தினர்.
ஆய் நாடு
|
யானை |
ஆய் நாடு வெற்றி கொள்ளப்பட்டதன் பின்னர் சேரரால் யானை எடுக்கப்பட்டது.
யாழ்ப்பாண அரசு
|
நந்தி |
நந்தி, சங்கு, குடை, சூரியன், சந்திரன் என்பன ஆரியச்சக்கரவர்த்திகளின் அடையாளங்களாகும். கலிங்க சோடாகங்கை அரச குலம் ஆரியச்சக்கரவர்த்திகளுடன் தொடர்புடையதால், அவை இரண்டும் ஒத்த அரச இலச்சணைகளைக் கொண்டிருந்தன.
வன்னி நாடு
|
குறுக்கான வாள்கள் |
வன்னிமையின் கடைசி தமிழ் அரசன் பண்டார வன்னியன் குறுக்கான வாள்களை சின்னமாகக் கொண்டிருந்தனர். வன்னியர் குலத்தினர் குறுக்கான வாள்கள், அக்னி குண்டம் ஆகியவற்றை தங்கள் அடையாளமாகக் கொண்டிருந்தனர்.
புதுக்கோட்டை
|
சிங்கம் |
அனுமான் கொடியை வலது முன் கையால் சிங்கம் பிடித்தவாறு, பச்சை பின்புல இருப்பது புதுக்கோட்டை அரச கொடியாகும்.
தற்கால தமிழர் கொடிகள்
இலங்கைத் தமிழர்
|
சிவப்பு, மஞ்சள் |
புலம்பெயர் இலங்கைத் தமிழரும் இதனையும், விடுதலைப்புலிகளின் கொடியினையும் பயன்படுத்துகின்றனர். இக்கொடி தமிமீழக் கொடியின் நிறத்தினைக் கொண்டு உருவாக்கப்பட்டது.
தமிழீழ விடுதலைப் புலிகள் / தமிழீழம்
|
புலி |
புலிக் கொடி அல்லது தமிழீழக் கொடி இலங்கைத் தமிழர் வாழ்வியலோடு நெருங்கிய தொடர்பு கொண்டது. 1977 இல் வடிவமைக்கப்பட்ட கொடி 1990 இல் தமிழீழ தேசியக் கொடியாக அறிவிக்கப்பட்டது. இதில் வரலாற்றுடன் தொடர்பு கொண்ட வன்னிமை, சோழர் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக, முறையே குறுக்கான கத்திகள், புலி என்பன காணப்படுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக