இலங்கை ஜனாதிபதிகள் பற்றிய குறிப்பு அல்லது இலங்கை ஜனாதிபதிகளின் பட்டியல் இங்கு தரப்பட்டுள்ளது. 1972 ஆம் ஆண்டு இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த ஜனாதிபதி / குடியரசுத் தலைவர் மற்றும் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிகள் / அரசுத் தலைவர்கள்அல்லது அதிபர்களின் முக்கியமான, சுருக்கமாக விபரங்கள் / தரவுகள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
இல |
பெயர் (பிறப்பு/இறப்பு) |
படம் |
கட்சி |
பதவி ஏற்பு/விலகல் காலம் |
1 |
வில்லியம் கொபல்லாவ |
|
கட்சி இல்லை |
22 மே 1972 |
4 பெப்ரவரி 1978 |
||||
1972 இல் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட பின்னர் பதவிக்கு வந்த முதலாவது ஜனாதிபதி (நிறைவேற்றதிகாரம் அற்ற) ஆவார். |
5 ஆண்டுகள், 8 மாதங்கள், 13 நாட்கள் |
|||
2 |
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா (1906–1996) |
|
ஐக்கிய தேசியக் கட்சி |
4 பெப்ரவரி 1978 |
2 சனவரி 1989 |
||||
இலங்கையின் முதலாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதி. 1978 இல் இவர் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையைக் கொண்டு வந்தார். |
10 ஆண்டுகள், 11 மாதங்கள், 29 நாட்கள் |
|||
3 |
ரணசிங்க பிரேமதாசா (1924–1993) |
|
ஐக்கிய தேசியக் கட்சி |
2 சனவரி 1989 |
1 மே 1993† |
||||
1993 மே தின ஊர்வலத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டார். |
4 ஆண்டுகள், 4 மாதங்கள் |
|||
4 |
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (1916–2008) |
|
ஐக்கிய தேசியக் கட்சி |
2 மே 1993 |
12 நவம்பர் 1994 |
||||
ஜனாதிபதி பிரேமதாசா வெற்றிடத்தை நிரப்ப ஜனாதிபதி பொறுப்பை பெற்றுக் கொண்டார். |
1 ஆண்டு, 6 மாதங்கள், 10 நாட்கள் |
|||
5 |
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1945 –) |
|
இலங்கை சுதந்திரக் கட்சி (மக்கள் கூட்டணி) |
12 நவம்பர் 1994 |
19 நவம்பர் 2005 |
||||
முதலாவது ஐ.தே.க அல்லாத ஜனாதிபதி. புலிகளில் வெற்றியளிக்காத தாக்குதலுக்குள்ளானவர். இலங்கையின் முதலாவது பெண் ஜனாதிபதி. |
11 ஆண்டுகள், 7 நாட்கள் |
|||
6 |
மகிந்த ராசபக்ச (1945 –) |
|
இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) |
19 நவம்பர் 2005 |
9 ஜனவரி 2015 |
||||
25 ஆண்டுகால உள்நாட்டுப் போர் இவரது காலத்தில் முடிவுக்கு வந்தது. இவர் மீது போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டன. 2015 தேர்தலில் தோல்வி. |
9 ஆண்டுகள், 1 மாதம், 21 நாட்கள் |
|||
7 |
மைத்திரிபால சிறிசேன (1951 –) |
|
இலங்கை சுதந்திரக் கட்சி (ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி) |
8 சனவரி 2015 |
18 நவம்பர் 2019 |
||||
ஐக்கிய தேசியக் கட்சி உட்பட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் 2015 தேர்தலில் வெற்றி பெற்றார் |
4 ஆண்டுகள், 10 மாதங்கள், 9 நாட்கள் |
|||
8 |
கோட்டாபய ராஜபக்ச |
|
இலங்கை பொதுசன முன்னணி |
18 நவம்பர் 2019 |
14 யூலை 2022 |
||||
மகிந்த ராசபக்சவின் சகோதரர். உள்நாட்டுப் போர் இறுதி காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்தவர். இலங்கையில் ஏற்பட்ட அரச எதிர்ப்பினால் பதவி துறந்தார். |
2 ஆண்டுகள், 7 மாதங்கள், 26 நாட்கள் |
|||
9 |
ரணில் விக்ரமசிங்க |
|
இலங்கை பொதுசன முன்னணி |
13 யூலை 2022 |
தற்போது |
||||
கோட்டாபய ராஜபக்சவினால் பதில் சனாதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் நாடாளுமன்றத்தில் சனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். |
தற்போது |
- கடைசியாக உயிரிழந்த முன்னாள் இலங்கை ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கா ஆவார். (1916 – 2008, வயது 92)
- இதுவரையில் பதவிவகித்த 9 சனாதிபதிகளில் 8 பேர் நிறைவேற்றதிகாரம் கொண்டவர்களாவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக