மொழிபெயர்

ஈகைத் திருநாள்

ஈகைத் திருநாள் அல்லது நோன்புப் பெருநாள் (Eid al-Fitr) என்பது நோன்பு நோற்று முடித்தல் பெருநாள் எனவும் அழைக்கப்படும். இது அரபு மொழியில் ஈட் அல் பித்ர் எனப்படும். ரமலான் பெருநாள் அல்லது ரமலான் எனவும் இது அழைக்கப்படுகின்றது. ஈத் என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம், திருநாள் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். சுமார் ஒரு மாதமாக, ரமலான் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகின்றது. இச்சமயத் திருநாள் முஸ்லிம்கள் நோன்பு நோக்கக்கூடாத ஷவ்வால் மாதத்தில் உள்ள ஒரு நாளாகும்.

ஈகைத் திருநாள்
ஈகைத் திருநாள்
இஸ்லாமிய மாதம் சந்திரனின் சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படுகிறது. இதனால் இஸ்லாமிய நாட்காட்டி நடைமுறையில் உள்ள கிரகோரியன் நாட்காட்டியிலிருந்து வேறுபடுகிறது. இஸ்லாமிய முறைப்படி ஒன்பதாவது மாதமான ரமலான் முஸ்லிம்களைப் பொருத்தவரையில் முக்கிய உள்ளதாகும். இந்த மாதத்தில் இஸ்லாமியர்களின் புனித நூல் குர்ஆன் கிடைக்கப்பட்டது. ரமலான் மாத தலைப்பிறை தென்பட்டதும் முஸ்லிம்கள் நோன்பிருப்பர்.

ரமலான் மாதத்தை அடுத்துவரும் ஷவ்வால் மாதத்தின் தலைப்பிறை தென்பட்டதும் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர். நோன்புப் பெருநாள் குறிப்பாக தொழுகையை கொண்டதாகும். இது இரு ரக்அத்களைக் கொண்டதும் பொது வெளியில் அல்லது பெரிய மண்டபத்தில் இடம்பெறும். இது ஜம்மாத்தில் மாத்திரம் இடம்பெறுவதோடு மேலதிகமாக ஆறு முறை அல்லாஹு அக்பர் சொல்வது சுன்னி இஸ்லாமின் ஹனாபி முறையாகும். சில சுன்னி பிரிவுகள் 12 முறை சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளன.

முகம்மது நபியினால் ஈகைத் திருநாள் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இது மதீனாவில் ஆரம்பிக்கப்பட்டு, பின்பு மக்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது.

பாரம்பரியமாக ஈகைத் திருநாள் பிறை முதலில் தெரிந்த நாளின் சூரிய மறைவின் பின்னான இரவில் ஆரம்பமாகும். ஈகைத் திருநாள் அன்று நோன்பு இருத்தல் விலக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு உதவுதல் இந்நாளில் செய்யப்படும். ஒரு நாள் முதல் மூன்று நாள் வரை நாடுகளின் முறைகளுக்கு ஏற்ப இத்திருநாள் கொண்டாடப்படும்.

ஒரு மாத காலமாக புலன்களைக் கட்டுப்படுத்தி நோன்பு கடைப்பிடித்த மகிழ்ச்சியையும் களிப்பையும் இத்திருநாள் தினத்தன்று பெறுவர். ஆகையால், அன்று வீண் விளையாட்டிலோ, வீண் கழியாட்டத்திலோ கழிப்பது ஏற்புடையதல்ல. இந்நாளில் பித்ர் கட்டாயக் கடமையானது. விரும்பி உண்ணும் உனவுப் பொருட்களை மாத்திரம் பித்ர் தர்மமாக கொடுக்க வேண்டும். இதனை தன் பொறுப்பில் உட்பட்டவர்களான பாட்டன், பாட்டி, தாய், தந்தை, மனைவி, மகன், மகள் ஆகியோருக்குக் கொடுக்க முடியாது. மேலும் தன் பொருப்பில் உள்ளவர்களுக்காகவும் பிதர் செய்ய வேண்டும். தன் உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால், அவர்களுக்கு முதலிடமளித்து பித்ர் செய்தல் வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக