![]() |
இலங்கையின் தேசிய மலர் (நீல அல்லி) |
இலங்கையில் இது தடாகங்களிலும் இயற்கை ஈர நிலங்களிலும் வளர்கிறது. இது பற்றி சமஸ்கிரத, பாளி, சிங்கள மொழி இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்புராதன இலங்கியங்கள் இதனை குவளையா, இந்திவரா, நிலுப்பல, நிலோத்பல, நிலுபுல் என்ற பெயர்களில் குறிப்பிடுகிறது. இது ஒழுக்கம், தன்னடக்கம், தூய்மை ஆகியவற்றின் அடையாளமாக குறிப்பிடப்படுகிறது. இலங்கையின் பௌத்த மரபு இம்மலர் இளவரசர் சித்தார்த்தனின் (புத்தர்) பாதச்சுவட்டில் உள்ள 108 நற்குறிகளில் ஒன்று எனக் குறிப்பிடுகிறது.
புத்தர் இறந்தது பின், அவர் வாழ்நாளில் நடந்த இடங்களில் எல்லாம் தாமரை பூத்தது என சொல்லப்படுகிறது. வரலாறு முதல் இலங்கையின் சமயச்சடங்குளில் இம்மலர் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கை மரபு மற்றும் கலாச்சார விழாக்களில் அலங்கார மலரா நீலாம்பல் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
ஆயுர்வேத மருத்துவத்தில் இதன் தாவரம் பயன்படுத்தப்படுகிறது. இதன் கிழங்கு மற்றும் இதர பகுதிகள் உணவாக உண்ணப்படுகிறது.
பேராசிரியர் நந்ததாச கொடகொட மற்றும் இரு தாவவியலாளர்கள் கொண்ட குழு தேசிய மலரை தெரிவிப்பதற்காக நியமிக்கப்பட்டனர். செய்தித்தாள்களும் தேசிய மலர் பற்றி மக்களிடம் கருத்துக் கேட்டது. தாமரை, அலரி ஆகிய மலர்களும் பரிந்துரைக்கப்பட்டன. அமைச்சரவை அங்கிகாரம் பெற்று பெப்ரவரி 1986 இல் நீல அல்லி இலங்கையின் தேசிய மலர் என அறிவிக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக