மொழிபெயர்

எல்லாளனின் சமாதி (எல்லாளன் நடுகல்) | தக்கின தூபி

எல்லாளன் அனுராதபுரத்தைத் தலைநகராகக் கொண்டு கி.மு 205 இல் இருந்து கி.மு 161 வரை இலங்கையை ஆட்சி செய்தார். அனுராதபுரத்திலுள்ள விஜிதபுரவில் நடைபெற்றதாக கூறப்படும் எல்லாளனுக்கும் துட்டகைமுனுவுக்கும் இடையிலான தனிச்சமரில் எல்லாளன் கொல்லப்பட்டர். அவ்விடத்தில் எல்லாளனுக்கு சமாதி கட்டப்பட்டு, அவ்வழியால் செல்வோர் அச்சமாதிக்கு மரியாதை செய்ய வேண்டும் என அரச ஆணை பிறப்பிக்கப்பட்டது. அவ்விடத்தில் கல்வெட்டில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது “அரசனாயிருந்தால் என்ன, குடியானவனாகவிருந்தால் என்ன ஒருவருமே இவ்வழியால் பல்லக்கிலோ. சிவிகையிலோ முரசு கொட்டி எதிர்காலத்தில் செல்லலாகாது”.

எல்லாளனின் சமாதி
எல்லாளனின் சமாதி (தக்கின தூபி)

தற்போது அனுராதபுரத்தைத்திலுள்ள (விஜிதபுரம்) தக்கின தூபி எல்லாளனின் சமாதி நம்பப்படுகின்றது. நெடுங்காலமான இது எல்லாளனின் சமாதி என உள்ளூர்வாசிகளால் அழைக்கப்பட்டது. எல்லாளன் நடுகல் “எல்லார செஹென” என சிங்களத்தில் அழைக்கப்பட்டது. இதனை துட்டகைமுனு எல்லாளனுக்காக கட்டினார் என மகாவம்சம் குறிப்பிடுகிறது. இதற்கு தமிழர்களும் சிங்களவர்களும் மரியாதை செய்து வந்தனர்.
ஆயினும், பின்னர் இச்சமாதி பற்றி மாற்றுக் கருத்துக்கள் உருவாகின.

எல்லாளன் நடுகல் எனப்பட்ட தூபி தக்கின தூபி என அழைக்கப்படுகிறது. இது துட்டகைமுனு சிதயூட்டப்பட்ட இடம் 1946 இல் சேனாரத் பத்திரன குறிப்பிட்டார். இங்கு வளரும் பாதிரி மரம் (Stereospermum chelonoides) இருந்ததாகவும். மகிந்தரின் வேண்டுகோளுக்கமைய அவரின் இறுதிச்சடங்கு தேவநம்பிய தீசனால் இங்கு இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. மேலும் வலகம்பா மன்னனின் அமைச்சரினால் இங்கு தூபி கட்டப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவ்வாறான மாற்றுக் கருத்துக்கள் இலங்கை வரலாற்றாசியர்களிடத்தில் வாதப்பிரதிவாதங்களை உருவாக்கியுள்ளது. இச்சர்ச்சை பற்றிய ஆய்வு ஒன்றினை கலாநிதி ஜேம்ஸ் தே. இரத்தினம் 1981 இல் எழுதிய The Tomb of Elara at Anuradhapura என்பதில் காணலாம். அது ஏ. ஜே. கனகரட்னா என்பவரால் "எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்" என தமிழாக்கம் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக