இலங்கையில் பிரதமர் பதவி 1947 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 14 பேர் பிரதமர்களாகப் பதவியேற்றுள்ளனர். 1978 வரை பிரதமரே நாட்டின் தலைவராக இருந்தார். அவருக்கு கூடுதல் அதிகாரம் இருந்தது. 1978 இல் அப்போதைய பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அறிவித்ததன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டன. ஜனாதிபதி நாட்டுத் தலைவராகவும், அரசுத் தலைவராகவும் ஆனார்.பிரதமர் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாக ஆனது.
ஜனாதிபதி இறக்கும் பட்சத்தில், அடுத்த ஜனாதிபதி தெரிவு செய்யப்படும்வரை பிரதமர் தற்காலிக ஜனாதிபதியாகச் செயல்படுவார். 1993 இல் பிரேமதாசா கொல்லப்பட்டபோது பிரதமர் டிங்கிரி பண்டா விஜயதுங்கா ஜனாதிபதியாக பொறுப்பெடுத்தார்.
1947 ஆம் ஆண்டு முதல், பதவியில் இருந்த 14 பிரதமர்களில் ரணில் விக்கிரமசிங்க ஐந்து தடவைகளும், டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் மூன்று தடவைகளும், இரத்தினசிறி விக்கிரமநாயக்க, மகிந்த ராசபக்ச ஆகியோர் இரு தடவைகளும் பிரதமர்களாக பதவி வகுத்துள்ளனர்.
அதிகமாக (ஆறு முறை) பிரதமராக சத்தியப்பிரமாணம் செய்தவராக ரணில் விக்கிரமசிங்க காணப்படுகின்றார். அதியுயர் நீதிமன்றத்தினால் பதவி நீக்கப்பட்ட ஒரே பிரதமராக மகிந்த ராசபக்ச காணப்படுகின்றார். மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தினால் பதிவி துறந்த ஒரே பிரதமாராக மகிந்த ராசபக்ச காணப்படுகிறார்.
ஆறு பிரதமர்கள் ஜனாதிபதிகளாகப் பதவியேற்றனர்.
இல |
படம் |
பெயர் (பிறப்பு-இறப்பு) |
பதவிக்காலம் |
கட்சி |
||||||||||||||
1 |
|
டி. எஸ் சேனாநாயக்க |
24 செப்டம்பர் 1947 |
22 மார்ச் 1952 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
இலங்கையின் முதலாவது பிரதமர். |
||||||||||||||||||
2 |
|
இடட்லி சேனாநாயக்க (1911–1973) |
26 மார்ச் 1952 |
12 ஒக்டோபர் 1953 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
டி. எஸ். சேனநாயக்கா இறந்ததை அடுத்து அவரது மகன் டட்லி சேனநாயக்கா பதவியேற்றார். இவரது கட்சி 1952 யூன் தேர்தலில் வெற்றி பெற்றதால் தொடர்ந்தும் பிரதமராக இருந்தார். 1953 இல் தனது பதவியை தானாகவே துறந்தார். |
||||||||||||||||||
3 |
|
சேர் ஜோன் கொத்தலாவலை (1897–1980) |
12 ஒக்டோபர் 1953 |
12 ஏப்ரல் 1956 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
கொத்தலாவலையின் பதவிக்காலத்தில் இலங்கை ஐ. நாவில் இணைந்தது. |
||||||||||||||||||
4 |
|
எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா (1899–1959) |
12 ஏப்ரல் 1956 |
26 செப்டம்பர் 1959 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
நாட்டின் அலுவலக மொழியான ஆங்கிலத்தை சிங்களத்திற்கு மாற்றினார். இவர் பதவிக்காலத்திலேயே படுகொலை செய்யப்பட்டார். |
||||||||||||||||||
5 |
|
விஜயானந்த தகநாயக்கா (1902–1997) |
26 செப்டம்பர் 1959 |
20 மார்ச் 1960 |
மகாஜன எக்சத் பெரமுன (சிங்கள மொழி முன்னணி) |
|||||||||||||
பண்டாரநாயக்கா படுகொலை செய்யப்பட்டடதை அடுத்து தகநாயக்கா பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனாலும், ஆளும் கூட்டணிக் கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட பிளவுகளை அடுத்து நாடாளுமன்றத்தைக் கலைத்தார். |
||||||||||||||||||
6 |
|
இடட்லி சேனாநாயக்க (1911–1973) |
21 மார்ச் 1960 |
21 யூலை 1960 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
ஒரு மாதத்தில் சேனநாயக்கா அரசு நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனாலும் 21 யூலை 1960 வரை பதவி வகித்தார். |
||||||||||||||||||
7 |
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா |
21 யூலை 1960 |
25 மார்ச் 1965 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
உலகின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமைக்குரியவர். இவர் பிரதமராக நியமிக்கப்பட்ட போது நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருக்கவில்லை. 1960 ஓகஸ்ட் 2 இல் இலங்கை செனட் சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். |
||||||||||||||||||
8 |
|
இடட்லி சேனாநாயக்க (1911–1973) |
25 மார்ச் 1965 |
29 மே 1970 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
சேனநாயக்கா மூன்றாவது தடவையாக பிரதமரானார். ஐதேக அறுதிப் பெரும்பான்மை பெறாததால் மேலும் ஆறு கட்சிகளுடன் இணைந்து அரசை அமைத்தது. |
||||||||||||||||||
9 |
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா |
29 மே 1970 |
23 யூலை 1977 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
சிறிமாவோ இலங்கையை குடியரசாக அறிவித்தார். நாட்டின் சிலோன் என்றிருந்த பெயரை சிறீலங்கா என மாற்றினார். பல தனியார் நிறுவனங்களை அரசுடைமை ஆக்கினார். இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதித்தார். இதனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. |
||||||||||||||||||
10 |
|
ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா |
23 யூலை 1977 |
4 பெப்ரவரி |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
1978 இல் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை அறிவித்து ஜனாதிபதியானார். |
||||||||||||||||||
11 |
|
இரணசிங்க பிரேமதாசா |
6 பெப்ரவரி 1978 |
2 ஜனவரி 1989 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
1978 அரசியலமைப்புத் திருத்தத்தை அடுத்து பெருமளவு குறைக்கப்பட்ட அதிகாரங்களுடன் நியமிக்கப்பட்ட முதலாவது பிரதமர். |
||||||||||||||||||
12 |
|
டிங்கிரி பண்டா விஜயதுங்கா (1916–2008) |
6 மார்ச் 1989 |
7 மே 1993 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசாவால் எதிர்பாராமல் நியமிக்கப்பட்டார். |
||||||||||||||||||
13 |
|
இரணில் விக்கிரமசிங்க (1949–) |
7 மே 1993 |
19 ஓகஸ்ட் 1994 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
ஜனாதிபதி பிரேமதாச படுகொலை செய்யப்பட்டதால் விஜேதுங்க புதிய ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட, அவருடைய இடத்திற்கு விக்கிரமசிங்க பிரதமராக அறிவிக்கப்பட்டார். |
||||||||||||||||||
14 |
|
சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1945–) |
19 ஓகஸ்ட் 1994 |
12 நவம்பர் 1994 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
சிறிது காலத்திற்கு பிரதமராக இருந்து, பின்னர் 1994 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதி ஆனார். இலங்கையில் முதலாவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி. |
||||||||||||||||||
15 |
|
சிறிமாவோ பண்டாரநாயக்கா (1916–2000) |
14 நவம்பர் 1994 |
9 ஓகஸ்ட் 2000 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
சந்திரிக்கா ஜனாதிபதி ஆனதை அடுத்து அவரது தாயார் சிறிமாவோ பண்டாரநாயக்கா பிரதமராக அறிவிக்கப்பட்டார். 2000 ஆம் ஆண்டில் இவர் பதவி விலகினார். |
||||||||||||||||||
16 |
|
இரத்தினசிறி விக்கிரமநாயக்க (1933–2016) |
10 ஓகஸ்ட் 2000 |
7 டிசம்பர் 2001 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
சிறிமாவோ பதவி விலகியதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக நியமிக்கப்பட்டார். |
||||||||||||||||||
17 |
|
இரணில் விக்கிரமசிங்க (1949–) |
9 டிசம்பர் 2001 |
6 ஏப்ரல் 2004 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
ஜனாதிபதி குமாரதுங்க ரணில் விக்கிரமசிங்கவின் அரசைக் கலைத்ததை அடுத்து ரணிலின் பதவிக்காலம் முடிவடைந்தது. 2004 இல் புதிய பொதுத் தேர்தல் இடம்பெற்றது. |
||||||||||||||||||
18 |
|
மகிந்த இராசபக்ச (1945–) |
6 ஏப்ரல் 2004 |
19 நவம்பர் 2005 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
2005 அரசுத்தலைவர் தேர்தலில் மகிந்த ராசபக்ச வெற்றி பெற்று ஜனாதிபதி அனார். |
||||||||||||||||||
19 |
|
இரத்தினசிறி விக்கிரமநாயக்க (1933–2016) |
19 நவம்பர் 2005 |
21 ஏப்ரல் 2010 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
மகிந்த ராசபக்ச ஜனாதிபதி ஆனதை அடுத்து இரத்தினசிறி பிரதமராக அறிவிக்கப்பட்டார். |
||||||||||||||||||
20 |
|
திசாநாயக்க முதியன்சேலாகே ஜயரத்ன (1931–2019) |
21 ஏப்ரல் 2010 |
9 ஜனவரி 2015 |
இலங்கை சுதந்திரக் கட்சி |
|||||||||||||
தேசியப்பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்பட்டார். |
||||||||||||||||||
21 |
|
இரணில் விக்கிரமசிங்க (1949–) |
9 ஜனவரி 2015 |
26 ஒக்டோபர் 2018 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து, ரணில் பிரதமராக அறிவிக்கப்பட்டார். 2015 நாடாளுமன்ற தேர்தலில் பின் மீண்டும் பிரதமரானார். |
||||||||||||||||||
22 |
|
மகிந்த இராசபக்ச (1945–) |
26 ஒக்டோபர் 2018 |
15 டிசம்பர் 2018 |
இலங்கை பொதுசன முன்னணி |
|||||||||||||
திடீரென ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டார். இந்நியமனம் கேள்விக்குட்படுத்தப்பட இலங்கையில் ஒரே நேரத்தில் இரு பிரதமர்கள் காணப்பட்டனர். நாடாளுமன்றத்தில் போதிய வாக்குகள் கிடைக்கவில்லை. நியமனத்திற்கு அதியுயர் நீதிமன்றம் தடை ஏற்படுத்தியது. தானாக பதிவியைத் துறந்தார். |
||||||||||||||||||
23 |
|
இரணில் விக்கிரமசிங்க (1949–) |
16 டிசம்பர் 2018 |
21 நவம்பர் 2019 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
மீண்டும் பிரதமர் பதவியைத் தொடர்ந்தார். |
||||||||||||||||||
24 |
|
மகிந்த இராசபக்ச (1945–) |
21 நவம்பர் 2019 |
9 மே 2022 |
இலங்கை பொதுசன முன்னணி |
|||||||||||||
ரணில் விக்கிரமசிங்க பதிவியைத் துறக்க, கோட்டாபய ராஜபக்சவினால் மஹிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டார். 2020 தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் பிரதமரானார். மக்கள் எதிர்ப்பினால் பதவி விலகினார். |
||||||||||||||||||
25 |
|
இரணில் விக்கிரமசிங்க (1949–) |
12 மே 2022 |
21 யூலை 2022 |
ஐக்கிய தேசியக் கட்சி |
|||||||||||||
மக்கள் எதிர்ப்பினால் மகிந்த இராசபக்ச பதவி விலக கோட்டாபய ராஜபக்சவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார். பின்னர் மக்கள் எதிர்ப்பினால் கோட்டாபய ராஜபக்ச பதவி விலக பதில் சனாதிபதியானார். |
||||||||||||||||||
26 |
தினேஷ் குணவர்தன (1949–) |
22 யூலை 2022 |
தற்போது |
மக்கள் ஐக்கிய முன்னணி |
||||||||||||||
ரணில் விக்கிரமசிங்கவினால் பிரதமராக நியமிக்கப்பட்டார். |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக