மொழிமுதல் எழுத்துக்கள் அல்லது மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் என்பவை தமிழில் எழுதும்போது எந்தெந்த எழுத்துக்கள் முதலில் இடம்பெறலாம் என்ற இலக்கண விதியாகும். தொல்காப்பியம், நன்னூல், தற்கால வழக்கு என்பவற்றினூடாக மொழிமுதல் எழுத்துக்கள் எவையென அறியலாம்.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 94 எழுத்துக்களைக் குறிப்பிடுகின்றது. அவை பின்வருமாறு:
எழுத்து வரிசை |
எழுத்து |
எண்ணிக்கை |
உயிரெழுத்து |
அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ |
12 |
க |
க, கா, கி, கீ, கு, கூ, கெ, கே, கை, கொ, கோ, கௌ |
12 |
ச |
சா, சி, சீ, சு, சூ, செ, சே, சொ, சோ |
9 |
ஞ |
ஞா, ஞெ, ஞொ |
3 |
த |
த, தா, தி, தீ, து, தூ, தெ, தே, தை, தொ, தோ, தௌ |
12 |
ந |
ந, நா, நி, நீ, நு, நூ, நெ, நே, நை, நெ, நோ, நௌ |
12 |
ப |
ப, பா, பி, பீ, பு, பூ, பெ, பே, பை, பொ, போ, பௌ |
12 |
ம |
ம, மா, மி, மீ, மு, மூ, மெ, மே, மை, மொ, மோ, மௌ |
12 |
ய |
யா |
1 |
வ |
வ, வா, வி, வீ, வெ, வே, வை, வௌ |
8 |
குற்றியலுகரம் |
நு |
1 |
மொத்தம் |
|
94 |
- அம்மா
- ஆடு
- இலை
- ஈட்டி
- உரல்
- ஊர்வலம்
- எட்டு
- ஏணி
- ஐவனம்
- ஒளி
- ஓவியம்
- ஔவையார்
- கடல்
- காடு
- கிளி
- கீரி
- குடி
- கூடு
- கெண்டை
- கேழல்
- கைதை
- கொண்டல்
- கோடை
- கௌவை
- தந்தை
- தாத்தா
- திரை
- தீபம்
- துணி
- தூண்
- தென்னை
- தேவர்
- தையல்
- தொண்டை
- தோட்டம்
- தௌவை
- நதி
- நாடு
- நிழல்
- நீர்
- நுழை
- நூல்
- நெய்தல்
- நேயம்
- நைகை
- நொய்யன
- நோக்கம்
- நௌவி
- பட்டம்
- பாடல்
- பிடி
- பீடம்
- புகழ்
- பூமி
- பெடை
- பேடி
- பைதல்
- பொட்டு
- போதகம்
- பௌவம்
- மண்
- மாடம்
- மிடறு
- மீதி
- முயல்
- மூதூர்
- மென்மை
- மேனி
- மையல்
- மொழி
- மோகம்
- மௌவல்
- சாட்டை
- சிறுவன்
- சீற்றம்
- சுடலை
- சூரியன்
- செய்கை
- சேவல்
- சொல்
- சோறு
- வண்டு
- வாத்து
- விம்பம்
- வீடு
- வெள்ளி
- வேர்
- வையம்
- வௌவு
- ஞா – ஞாலம்
- ஞெ – ஞெகிழி
- ஞொ - ஞொள்கிற்று
- யா - யான்
- நு - நுந்தை
நன்னூல்
எழுத்து வரிசை |
எழுத்து |
எண்ணிக்கை |
ச வரிசை |
ச, சை, சௌ |
3 |
ய வரிசை |
ய, யு, யூ, யோ, யௌ |
5 |
ஞ வரிசை |
ஞ |
1 |
ங வரிசை |
ங |
1 |
மொத்தம் |
|
10 |
- சனி
- சைவம்
- சௌரி
- யவனர்
- யுத்தம்
- யூதம்
- யோகம்
- யௌவனம்
- ஞமலி
- அங்ஙனம் - (அ + ஙனம்)
தற்கால வழக்கு
- கொக்… கொக்… என கோழி கொக்கரித்தது.
- பீரங்கி டமார் என வெடித்தது.
- ராமன் – இராமன்
- யேசு – இயேசு
- ரோம் – உரோம்
- ரோசா – உரோசா
- லட்டு – இலட்டு
- லாபம் – இலாபம்
- ரத்தம் – இரத்தம்
- லண்டன் – இலண்டன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக