மொழிபெயர்

உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்கள்

இலங்கையின் உத்தியோகபூர்வ தேசிய சின்னங்களாக தேசிய கீதம், தேசியக் கொடி, தேசிய இலச்சினை, தேசிய தினம், தேசிய மொழி, தேசிய மலர், தேசிய மரம், தேசியப் பறவை, தேசிய வண்ணத்துப்பூச்சி, தேசிய இரத்தினக்கல், தேசிய விளையாட்டு என்பன காணப்படுகின்றன. ஆயினும் சில சின்னங்கள் உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்களாகக் கருதப்படுகின்றன.

உத்தியோகபூர்வமற்ற இலங்கையின் தேசிய சின்னங்கள்

தேசிய விலங்கு
இலங்கையின் தேசிய விலங்கு / மிருகம் என்று எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆயினும், இலங்கை யானை, சிங்கம், மர அணில் என்பன தேசிய விலங்குகளாகக் கருதப்படுகின்றன. சிங்கம் சிங்களவர் மத்தியில் மிகவும் முக்கியத்துவம் பெறும் ஒரு விலங்காகும். மேலும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இலங்கைச் சிங்கம் இருந்ததாக நம்பப்படுகின்றது.



தேசிய நினைவுச் சின்னம்
பிரித்தானியரிடமிருந்து இலங்கை விடுதலை பெற்றதனை நினைவுபடுத்தும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த கட்டடமாக சுதந்திர சதுக்கம் காணப்படுகின்றது. இது கண்டி இராச்சியத்தின் அரச கேட்போர் கூடமான கொண்டாட்ட மண்டபத்தின் (மகுல் மடுவ) அடிப்படையில் உருவாக்கப்பட்டது. இது சுதந்திர நினைவு மண்டபம் எனவும் அழைக்கப்படுகின்றது.

தேசிய உடை
இலங்கையின் தேசிய உடையாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏனென்றால் 3 பெரும்பான்மை இனக்குழுக்களும் சில சிறுபான்மை இனக்குழுக்களும் உள்ளனர். பொதுவான ஆண்களின் கலாச்சார உடையாக சாரனும் / வேட்டியும் மேற்சட்டையும், பெண்களின் கலாச்சார உடையாக புடவயும் காணப்படுகின்றன. சிங்கள, தமிழ், முஸ்லிம்களின் உடைகளின் குறிப்பிடத்தக்க சிறு வேறுபாடுகள் உள்ளன. ஆயினும் இன்று பொதுவாக பலர் மேலத்தேய ஆடைகளையே அணிகின்றனர்.

தேசிய உணவு
சோறும் கறியும் இலங்கையில் பிரபலமான உணவாகவுள்ளது. சமைக்கப்பட்ட சோற்றுடன் பல மரக்கறி / இறைச்சி போன்ற கறிவகைகளை சேர்த்து பரிமாறப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக