ஏன் நாம் முரண்பாடுகளை பகுப்பாய்வு செய்ய வேண்டும்?
- பின்னனி, முன்னனி, சூழ்நிலை, வரலாறு, தற்போதைய நிலை, சூழல் என்பனவற்றை விளங்கிக் கொள்வதற்காக
- வெளிப்படையாகத் தென்படுபவர்களை மாத்திரம் இனம்காணாமல் முரண்பாட்டில் உள்ள அனைத்து தரப்பாரையும் தெளிவாக இனம் காண
- முரண்பாட்டுக்குட்பட்ட அனைத்து தரப்பாரினதும் முரண்பாடுபற்றிய பார்வையையும் அவர்கள் எவ்வாறு ஒருவர் ஒருவருடன் தொடர்பை அல்லது தொடர்பின்மையையும் கொண்டுள்ளனர் என்பதை கண்டறிய
- முரண்பாட்டின் பின்னால் உள்ள காரணிகளின் போக்கையும் சிக்கல் தன்மையையும் விளங்கிக் கொள்ள
- வெற்றி, தோல்விகளில் இருந்து கற்றுக் கொள்ள
- தீர்வுக்கான காத்திரமான வழிகளையும், தரப்பாரையும் அணுகுமுறைகளையும் கண்டு கொள்ள
முரண்பாட்டு பகுப்பாய்வு ஒரு தடவையுடன் முடிந்துவிடும் விடையமல்ல. சூழல் சூழ்நிலை மாறுவதனால் அது ஒரு தொடர் படிமுறை. எனவே முரண்பாடுகளுக்கான காரணிகளை மாற்றியமைக்க தேவையான செயற்பாடுகளை காலத்துக்குக் காலம் தேவைக்கேற்ப மாற்றலாம். அவ்வாறே பகுப்பாய்வுக்கூடாக அதன் மாற்ற வேகத்தை கணிப்பிடலாம்.
பொதுவாக முரண்பாட்டுக்கான காரணிகள்
ஒரு குறிக்கப்பட்ட சூழலை அல்லது சூழ்நிலையை அறிவதற்கு, தற்போதுள்ள முரண்பாடுகள், பிரச்சனைகளுக்கான காரணிகளையும் ஊக்கிகளையும் கண்டுபிடிக்க வேண்டியது மிக அவசியம். அத்துடன் அவற்றுடன் தொடர்புபட்ட ஏனைய வளமாக்கிகள், தூண்டிகளையும் கூட இனம் காண்பது அவசியம்.கட்டமைப்புக் காரணிகள்
நன்கு ஒழுங்கமைக்கப்பட்டு ஒழுங்குமுறைக் கூடாகக் காணப்படுபவையே இந்த மூலகாரணிகளாகும். உதாரணமாக: பாரபட்சமான ஒழுங்கமைப்புக்களும் நடைதுமுறைகளும், அநீதியான ஒழுங்குவிதிகளும் பக்கச் சார்பான சட்ட திட்டங்களும் இன, மத, மொழி, கலாசார, பிரதேச ரீதியான முதன்மைப்பாடும் மேலான்மையும், அசமத்துவத்தையும் ஒரு பக்கத்தாருக்கான முன்னுரிமையை கொடுக்கவல்ல நிர்வாக முகாமைத்துவ அலகுகளும், ஒருபக்க நலன்பேசும் கொள்கைகளும் அமுலாக்கமும்.தனி நபர் காரணிகள்
மறை நிலை உளப்பாங்கு, மனநிலை, ஆரோக்கியமற்ற அளவு கோல், விழுமியங்கள், பெறுமானங்கள், பக்கச்சார்பான ஒரு தலைப்பட்சமான பார்வைகளும் பார்வைக் கோணங்களும், தாழ்வு அல்லது உயர்வுச் சிக்கல், ஆரோக்கியமற்ற நடத்தைக்கோலம், சமூக எதிர்ப்புச் சிந்தனையும் சமூக நெறி பிறழ்வு நடத்தைகளும்முரண்பாடுகளுக்கான சமூக, பொருளாதார அரசியல் காரணிகள்
பாரபட்சம், அசமத்துவம், அநீதியான நிர்வாக முகாமைத்துவக் கட்டமைப்புக்களும் இயக்க முறைகளும், பக்கச் சார்பு, முகத்தாட்சணியம், அறியாமை, கவனத்திலெடுக்காதுவிடல், ஓரம் கட்டல், ஒதுக்குதல், பிரித்து வைத்தல், பிரதேசவாதம், பிரிவினைவாதம், தேசியவாதம், இனவாதம், மதவாதம், அடிப்படைவாதம், கலாசார, சமய, இன, பிரதேச மேலாண்மை, தின நபர் மைய நடவடிக்கை, அடக்குமுறை, ஒடுக்குமுறை.பகுப்பாய்வுக்கான நுட்பமுறைகளும் கருவிகளும்
- ஏபிசி முக்கோண ஆய்வுமுறை (ABC triangle analysis): முரண்பாட்டுக்குட்பட்ட ஒவ்வொரு தரப்பாரினதும் சூழ்நிலைகளையும், உளப்பாங்குகளையும் நடத்தைகளையும் பகுத்தாய்தல்
- தேவை, பயக் கோட்பாடு (Need and fear theory): முரண்பாட்டுக்குட்பட்டவர்கள் எத்தகைய உடல், உள, சமூக, பொருளாதார, அரசியல் தேவைகளையும் தேவைப்பாடுகளையும் கொண்டுள்ளனர் என்பதையும் அவற்றின் நிமித்தம் அவர்களுக்குள்ள கவலைகள், பயங்கள் என்ன என்பதையும் பகுத்தாய்தல்
- வரைபாக்கம் செய்தல்: முரண்பாட்டுக்குட்பட்டவர்கள் தொடர்புகள், கூட்டு, மறைமுக நேரடி ஆதரவு, இணக்கப்பாடு, உணவு, நேரடி மோதல், மறைமுக மோதல், பனிப்போர் நிலை, பலிக்கடா நிலை என்பனவற்றை கண்டறிதல்
- வெங்காயத் தன்மைசார் கோட்பாடு (Onion theory): முரண்பாட்பட்டவர்களது உண்மையான தேவைகள், தேவைப்பாடுகள், ஈடுபாடு, மன ஆர்வம், ஆதங்கள் இவற்றின் நிமித்தம் அவர்கள் கொண்டுள்ள பகிரங்க நிலைப்பாடு உண்மையான வெளிக்காட்டா நிலைப்பாடு என்பனவற்றைக் கண்டறிதல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக