மொழிபெயர்

சி--

சி-- (ஆங்கிலத்தில் C--) என்பது சி நிரலாக்க மொழி போன்றதொரு நிரல் மொழியாகும். இதனை பணிமுறை நிரல் மொழி ஆய்வாளர் சைமன் பேடன் ஜோன்ஸ் மற்றும் நோர்மன் ராம்சி என்போர் உருவாக்கினர். மனித நிரலாளர்களால் எழுதப்படுவதைவிட மிக உயர் நிலை மொழிக்கான நிரல்மொழிமாற்றியாக (compiler) வடிவமைத்தனர். ஏனைய இடைநிலை மொழிகள் போன்று இல்லாமல், இது பைட்குறி அல்லது இருமம் வடிவம் இல்லாது, வெறும் அஸ்கி (ASCII) எழுத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.

வடிவமைப்பு

சி-- ஒரு கையடக்கமான பொறி மொழி (assembly language) ஆகும். இது உயர் தர எந்திர குறியை உற்பத்தி செய்யும் நிரல்மொழிமாற்றியின் வேலையை இலகுவாகச் செய்ய வடிவமைக்கப்பட்டது. நிரல்மொழிமாற்றி சி-- குறியீட்டை உற்பத்தி செய்தல் மூலம் இது செயற்படுகிறது. இதன் மூலம் குறை நிலைக் குறியீடு உருவாக்க கடின வேலையும் சி-- நிரல்மொழிமாற்றிக்கு கட்டாயமற்றதாக்கலும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
C--
சி-- / C--

சி-- உருவாக்கம் 1990 களின் இறுதியில் தொடங்கியது. குறியீடு உருவாக்க முறை எழுதத்தொடங்கியதிலிருந்து, அது தன்னகத்தே சவால் மிக்கதாயும், நிரல் மொழிமாற்றி பின்புலம் ஆய்வாளர்களுக்கும் கிடைக்கக் கூடியதாயும் இருந்தது. அப்போது அது சிக்கல் கொண்டதாகவும் மிகவும் மோசமான ஆவணப்படுத்தலாகவும் இருந்தது. சில நிகழ்ச்சித்திட்டங்களில் எழுதப்பட்ட நிரல்மொழிமாற்றி சி நிரலாக்க மொழி குறியீட்டை வெளியிட்டன (எ.கா: மொடூலர்-3 நிரல்மொழிமாற்றி). ஆயினும், நடைமுறை மொழிகளுக்கான தெரிவில் சி மோசமானது. இது பின் அழைப்பு கட்டாயமற்றதாக்கல், சரியான நினைவகச் சுத்திகரிப்புச் சேர்வு அல்லது விதிவிலக்கைக் கையாளுதல் என்பவற்றுடன் இணக்கப்படவில்லை. சி-- ஒரு சாதாரண, இறுக்கமாக வறையறுக்கப்பட்ட சி மொழிக் இணைக்காத விடயங்களுக்கு மாற்றீடாக உள்ளது. இதன் மிகவும் புதுமையான விடயமாக தானியக்க சுத்திகரிப்புச் சேர்த்தல்களை அனுமதிக்கும் இயங்கு நேர இடைமுகம், விதிவிலக்கு கையாளும் முறைகள் மற்றும் சி-- மொழிமாற்றியுடன் செயற்படும் பிற இயங்கு நேர அம்சங்கள் என்பன உள்ளன.


இம்மொழியில் குறியீடு விதிகள் பெருமளவு சி இல் இருந்து பெறப்பட்டன. ஆயினும், இது வழமையான சி அம்சங்களான பல்வேறுபட்ட செய்பாடுகள், சுட்டு, சொற்றொடரியல், சி இன் வகை அமைப்பு நோக்கு ஆகியவற்றை தவிர்த்து அல்லது மாற்றி அமைந்துள்ளது. ஏனென்றால், சி-- இன் முக்கிய அம்சங்களை நீங்கியும், குறியீட்டு உற்பத்தி கருவிகளை இலகுவாக்கியும் உள்ளது.

பெயர்

இம்மொழியில் பெயர் நகைச்சுவையாக அமையலாம். ஏனென்றால் சி-- என்பது சி இல் இருந்து கழிக்கப்பட்டது என்ற கருத்தைத் தரலாம். அதேவேளை சி++ மொழியானது சி மொழியின் அதிகரிக்கப்பட்ட அல்லது வளர்ச்சியடைந்த மொழி என்ற கருத்தைக் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக