மொழிபெயர்

இலங்கைக் கோட்டைகளும் அரண்களும்

இலங்கைக் கோட்டைகளும் அரண்களும் நீண்ட கால வரலாற்றைக் கொண்டவை. இவற்றை இரு பகுதிகளாகப் பிரிக்கலாம். முதலாவது வகை, இலங்கை பாதுகாப்பு அரண்கள் இலங்கையை ஆட்சி செய்த சிங்கள, தமிழ் மன்னர்களால் உருவாக்கபட்டன. அவை கோட்டைகளாக இல்லாது படையரண்களாக அமைக்கப்பட்டன. இரண்டாவது வகை இலங்கையைக் கைப்பற்றி ஆட்சி செய்ய ஐரோப்பியரால் உருவாக்கப்பட்டன. இவர்கள் மூலம் மேலைத்தேயப் பாணியில் அமைக்கப்பட்ட இலங்கைக் கோட்டைகள் பல இன்றும் உள்ளன. சுதேசிய மன்னர்களால் அமைக்கப்பட்ட அரண்கள் ஆயிரம் ஆண்டுக்கு முற்பட்ட வரலாற்றைக் கொண்டு காணப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டு முதல் 18 ஆம் நூற்றாண்டு வரை கண்டி இராட்சியத்தைத் தவிர கரையோரப்பகுதிகள் உட்பட்ட பெரும்பாலான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து ஆண்ட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், பிரித்தானியர் என்போரால் கோட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

இலங்கைக் கோட்டைகளும் அரண்களும்
இலங்கைக் கோட்டைகளும் அரண்களும்

இலங்கை வரலாற்றில் பழமையானதாக விஜிதபுரம் அரண் நகரம் காணப்படுகிறது. அனுராதபுர இராச்சியத்தில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட இங்குதான் எல்லாளன் படைகளுக்கும் துட்டகைமுனுவின் படைகளுக்குமிடையில் பெரும் சண்டை இடம்பெற்றதாக கருதப்படுகிறது. சிகிரியாவில் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் முற்றிலும் இயற்கையிலாளான அரண் நகர் அமைக்கப்பட்டது. விஜிதபுர அரண் தற்போது முற்றிலும் சிதைவுற்றள்ளது. ஆனால், சிகிரியாக் குன்றும் அதனை அண்மித்த செயற்கை மற்றும் இயற்கை அரண் அமைப்புகளை இன்றும் காணலாம். மபகலைக் கோட்டை, பலனக் கோட்டை, சீதவாக்கைக் கோட்டை ஆகிய அரண்கள் ஐரோப்பியரால் கைப்பற்றப்பட்டு, புணரமைக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டன. யாழ்ப்பாண இராச்சியத்தின் நகரப் பாதுகாப்பிற்காக நகருக்கும் வெளியில் 3 அரண்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் நல்லூர் இராசதானியும் அரண் கொண்ட நகராக இருந்தது. இவை போர்த்துக்கோய படையெடுப்பில் முற்றிலும் அழிக்கப்பட்டன. (நல்லூர் இராசதானி மற்றும் கோட்டை அமைப்பை வட இலங்கை அரசின் நகர அமைப்பு என்ற கட்டுரையில் காணலாம்.)


இலங்கையில் முதன்முதலில் மேலத்தேய முறையில் அல்லது ஐரோப்பியப் பாணியிலான கோட்டைகள் போத்துக்கீசர் கட்டினர். 1518 ஆண்டில் கட்டப்பட்ட கொழும்புக் கோட்டை இலங்கையில் முதலாவது ஐரோப்பிய கட்டுமான முறையில் கட்டப்பட்ட கோட்டையாகும். ஆனாலும் அது தற்போது முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டது. தற்போது அக்கோட்டை இருந்த பகுதி “கோட்டை” என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. கிட்டத்தட்ட இருபதுக்கு மேற்பட்ட கோட்டைகள் போத்துக்கேயரால் முக்கிய இடங்களில் கட்டப்பட்டன. அவற்றை ஒல்லாந்தர் கைப்பற்றினர். பலவற்றை திருத்திப் பயன்படுத்தினர். சிலவற்றை அழித்து, அவ்விடத்தில் புதிதாக தங்களுக்கு ஏற்றவாறு அமைத்தனர். அத்துடன் புதிய இடங்களில் கிட்டத்தட்ட 10 கோட்டைகளை அமைத்தனர். ஒல்லாந்தரிடம் இருந்து பிரித்தானியர் கோட்டைகளைக் கைப்பற்றி, புணரமைத்துப் பயன்படுத்தினர். இவர்கள் புதிதாக கோட்டைகளை அமைக்க ஆர்வம் காட்டவில்லை. இவர்கள் மார்டெலோ காவற்கோபுரத்தையும், கண்டிப் போரின்போது புறக்காவலுக்காக மக்டோவல் கோட்டையையும் உருவாக்கினர். இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை கோட்டைகள் படையினரால் பயன்படுத்தப்பட்டன. முதலாம் மற்றும் இரண்டாம் உலகப்போர் காலங்களில் கரையோரங்களில் இருந்த கோட்டைகள் கரையோரப் பீரங்கிகளைக் கொண்டிருந்தன. பிற்காலங்களில் அவற்றில் இருந்த படையினர் விலகிக் கொள்ள, பொது மக்களின் நிர்வாகச் செயற்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டன. ஆயினும் சிலவற்றை இலங்கைப் படைத்துறையினர் பயன்படுத்தினர். குறிப்பாக யாழ்ப்பாணக் கோட்டை இலங்கை உள்நாட்டுப்போரில் பல தாக்குதல்களுக்கு முகம் கொடுத்ததைக் குறிப்பிடலாம். இலங்கை இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் இதனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

ஆரம்கால அரண்கள்
பெயர்
உருவாக்கம்
இடம்
குறிப்பு
விஜிதபுர அரண் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு அனுராதபுரம் அழிந்துவிட்டது
சிகிரியா அரண் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு சிகிரியா நல்ல நிலை
நல்லூர் அரண்கள் தெரியாது யாழ்ப்பாணம் அழிந்துவிட்டன
மபகலைக் கோட்டை தெரியாது மாத்தளை எச்சங்கள் உள்ளன
பலனக் கோட்டை தெரியாது கண்டி அழிந்துவிட்டது
சீதவாக்கைக் கோட்டை தெரியாது அவிசாவளை அழிந்துவிட்டது

போர்த்துக்கேயக் கோட்டைகள்
பெயர்
உருவாக்கம்
இடம்
குறிப்பு
அரன்டோராக் கோட்டை தெரியாது குருனாகல் அழிந்துவிட்டது
அரிப்புக் கோட்டை தெரியாது மன்னார் எச்சங்கள் உள்ளன
ஆனையிறவுக் கோட்டை 1776 கிளிநொச்சி அழிந்துவிட்டது
இரத்தினபுரி போர்த்துக்கேயக் கோட்டை 1618 இரத்தினபுரி அழிந்துவிட்டது
உருவன்வெலைக் கோட்டை 1590 உருவன்வெலை அழிந்துவிட்டது
ஊர்காவற்றுறைக் கோட்டை 1629 ஊர்காவற்றுறை எச்சங்கள் உள்ளன
களுத்துறைக் கோட்டை 1655 களுத்துறை எச்சங்கள் உள்ளன
காலிக் கோட்டை 1588 காலி நல்ல நிலை
கொழும்புக் கோட்டை 1518 கொழும்பு அழிந்துவிட்டது
திருகோணமலைக் கோட்டை 1624 திருகோணமலை நல்ல நிலை
நீர்கொழும்புக் கோட்டை 1672 நீர்கொழும்பு அழிந்துவிட்டது
நெடுந்தீவுக் கோட்டை தெரியாது நெடுந்தீவு எச்சங்கள் உள்ளன
பூநகரிக் கோட்டை தெரியாது பூநகரி எச்சங்கள் உள்ளன
மட்டக்களப்புக் கோட்டை 1628 மட்டக்களப்பு நல்ல நிலை
மன்னார்க் கோட்டை 1560 மன்னார் அழிந்துவிட்டது
மாத்தறைக் கோட்டை 1550 மாத்தறை அழிந்துவிட்டது
மெனிக்கடவரைக் கோட்டை 1599 கேகாலை அழிந்துவிட்டது
யாழ்ப்பாணக் கோட்டை 1618 யாழ்ப்பாணம் நல்ல நிலை
ஹமென்கெய்ல் கோட்டை 1618 யாழ்ப்பாணம் நல்ல நிலை
ஹல்தும்முல்லைக் கோட்டை தெரியாது ஹல்தும்முல்லை எச்சங்கள் உள்ளன
ஹன்வெல்லைக் கோட்டை தெரியாது கொழும்பு அழிந்துவிட்டது

ஒல்லாந்துக் கோட்டைகள்
பெயர்
உருவாக்கம்
இடம்
குறிப்பு
இரத்தினபுரி இடச்சுக் கோட்டை தெரியாது இரத்தினபுரி எச்சங்கள் உள்ளன
ஒஸ்டன்பேர்க் கோட்டை தெரியாது கிளிநொச்சி எச்சங்கள் உள்ளன
கட்டுவனைக் கோட்டை 1646 கட்டுவனை நல்ல நிலை
கற்பிட்டிக் கோட்டை 1667 கற்பிட்டி நல்ல நிலை
காங்கேசன்துறைக் கோட்டை தெரியாது காங்கேசன்துறை அழிந்துவிட்டது
கொட்டியாரக் கோட்டை 1622 மூதூர் அழிந்துவிட்டது
தங்காலைக் கோட்டை தெரியாது தங்காலை நல்ல நிலை
பருத்தித்துறைக் கோட்டை தெரியாது பருத்தித்துறை அழிந்துவிட்டது
பெசுச்சூட்டர் கடவைக் கோட்டை தெரியாது கிளிநொச்சி அழிந்துவிட்டது
பைல் கடவைக் கோட்டை தெரியாது கிளிநொச்சி எச்சங்கள் உள்ளன
மாத்தறை விண்மீன் கோட்டை 1763 மாத்தறை நல்ல நிலை
முல்லைத்தீவுக் கோட்டை 1715 முல்லைத்தீவு எச்சங்கள் உள்ளன

பிரித்தானியக் கோட்டைகள்
பெயர்
உருவாக்கம்
இடம்
குறிப்பு
மார்டெலோ காவற்கோபுரம் 1801 அம்பாந்தோட்டை நல்ல நிலை
மக்டோவல் கோட்டை 1803 மாத்தளை எச்சங்கள் உள்ளன

4 கருத்துகள்: