மொழிபெயர்

பிரம்மக் கமலம்

பிரம்மக் கமலம் என்பது கள்ளி இனத் தாவரமும், அப்பேரினத்தில் அதிகம் பயிரிடப்படும் இனமுமாகும். பிரம்மக் கமலம் அரிதாக இரவில் மலர்ந்து வைகறைக்கு முன் வாடிவிடும். இதனால் இது இரவில் மலரும் கள்ளி எனவும், மேலைத்தேய பகுதியில் இரவின் அரசி / இரவின் இராணி (queen of the night) எனவும் அழைக்கப்படும். இதன் வெண் நிறப் பூக்கள் வருடத்திற்கு ஒருமுறை மட்டும் மலர்வதால் அபூர்வ மலர் வகையாக கருதப்படுகின்றது. இதன் தாவரவியல் பெயர் “எபிபைலும் ஒக்ஸிபெடாலம்” (Epiphyllum oxypetalum) ஆகும்.

பிரம்மக் கமலம்
பிரம்மக் கமலம்
இது ஆங்கிலத்தில் Orchid cactus (ஓக்கிட் கள்ளி), Jungle cactus (காட்டுக் கள்ளி), Night blooming cereus (இரவில் மலரும் கள்ளி), Dutchman's Pipe (இடச்சுக்காரனின் குழாய்) என்றெல்லாம் அழைக்கப்படும். பிரம்மக் கமலம் தென் மெக்சிக்கோவை தாயகமாகக் கொண்டு, தென் அமெரிக்கா வரை பரந்துள்ளது. இது பரவலாக பயிரிடப்படுவதுடன், வெப்ப வலயத்தில் பயிரிடப்படுவது குறைவாகவுள்ளது. சீனாவில் இயல்பாக வளர்வதுடன் இலங்கை, இந்தியா போன்ற இடங்களிலும் காணப்படுகின்றது. கோடைகாலத்தின் கடைசிப் பகுதியில் இது பூக்கிறது.



இந்தியாவில், உயிர்களை உருவாக்கும் இந்துக் கடவுளான பிம்மாவின் பெயரால் இம்மலர் அழைக்கப்படுகிறது. இம்மலர் மலர்கையில் வேண்டுதல் செய்தால், அவ்வேண்டுதல் கேட்கப்படும் என்ற நம்பிக்கை உள்ளது. இது சிங்கள மொழியில் சுவர்க்கத்திலிருந்து வந்த மலர் என்ற பொருளில் இலங்கையில் அழைக்கப்படுகிறது. சீனாவில் அதிஷ்டம், எதிர்பாராத ஆதாயம், ஆழ்ந்த மனக்கிளர்ச்சி, குறுகிய மகிமை போன்ற பெயர்களினால் இம்மலர் அழைக்கப்படுகின்றது. ஜப்பானில் உயர்ந்த வரலாறு இம்மலருக்கு உண்டு. அங்கு இதற்கு “நிலாவின் கீழ் அழகு” என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. “மாபெரும் வெற்றியின் மலர்” என்ற பொருளில் இந்தோனேசியாவில் அழைக்கப்படுகின்றது.

தண்டு நிமிர்ந்து, படரும் தன்மையுடையதும் ஏராளமான கிளைகளைக் கொண்டும் காணப்படும். முதன்மையான தண்டு உருண்டையான 6 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடியதும், பக்கவாட்டாய் தட்டையாகவும் அடிப்பாகம் மரம் போன்றும் தோற்றமளிக்கும். இணைத் தண்டுகள் தட்டையாக, முட்டை வடிவ நீண்டு கூரான, 30 செ.மீ x 10-12 செ.மீ அளவிற்கு வளரும். தண்டின் ஓரங்கள் உறுதியற்ற ஆழமான விளிம்பும் அலை போன்ற வடிவில் காணப்படும். பூக்கள் தட்டையான பகுதியில் உருவாகின்றன. இது 30 செ.மீ நீளமும் 17 செ.மீ அகலமும் கொண்டு காணப்படும். இது இரவில் மலர்வதுடன் மிகவும் நறுமணம் உடையது. நறுமணத்தின் முதன்மை ஆக்கக்கூறு பென்சீல் சலிசைக்கிளேட் என்ற வேதிப்பொருள் மூலம் கிடைக்கிறது. இதன் விதையுறை மூடப்பெறாத, சற்று கோணமானதாக, பச்சை நிறத்தில் காணப்படும்.

திணை தாவரம்
தரப்படுத்தப்படாத பூக்குந்தாவரம்
தரப்படுத்தப்படாத இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத Core eudicots
வரிசை Caryophyllales
குடும்பம் கள்ளி
பேரினம் எபிபைலும்
இனம் எ. ஒக்ஸிபெடாலம்
காப்பு நிலை தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக