மொழிபெயர்

திகிலால் வாங்குதல்

திகிலால் வாங்குதல் அல்லது பீதியால் வாங்குதல் அல்லது திகில் நுகர்வு (Panic buying) என்பது பேரிடர், உணரப்பட்ட பேரிடர், பாரிய விலை அதிகரிப்பு எதிர்பார்ப்பு அல்லது பற்றாக்குறை ஆகிய சம்பவங்களின்போது அல்லது அதற்குப் பின் பாரியளவிலான பொருட்களை நுகர்வோர் கொள்வனவு செய்வதனைக் குறிக்கும்.

திகிலால் வாங்குதல்
2020 கொரோனா வைரஸ் ஏற்படுத்திய திகிலால் வாங்குதல் காரணமாக பொருட்கள் காலியாகிய அங்காடி. இடம்: ஐக்கிய அமெரிக்கா

திகிலால் வாங்குதல் ஒருவித கும்பல் நடத்தையாகும். இது நுகர்வோர் நடத்தைக் கோட்பாட்டில் உள்ள ஓர் ஆர்வச் செயற்பாடாகும். இது பற்றி பொருளாதார கற்கை குறிப்பிடுகையில் “கூட்டுச் செயற்பாடுகளான ஆர்வமும் பாணியும், இருப்புச் சந்தை நகர்வு, நீடித்து உழைக்காத பொருட்கள் விலைபோதல், களியாட்ட பொருட்களை வாங்குதல், பதுக்கி வைத்தல், வங்கிப் பயம்” ஆகியனவாகும்.

திகிலால் வாங்குதல் நிலைப்பாடானது பற்றாக்குறை அபாயம் சரியானதா அல்லது சுயமான திருப்தி தீர்க்கதரிசனத்தின் வடிவ முன்னுணர்வு என்பதற்கப்பால் உண்மையான தட்டுப்பாட்டுக்கு கொண்டு சென்றுவிடும்.

திகிலால் வாங்குதல் உதாரணத்திற்கு பின்வரும் சம்பவங்களைக் குறிப்பிடலாம்:


  • 1943 வங்காளப் பஞ்சம்
  • 1962 கியூப ஏவுகணை நெருக்கடி – ஐக்கிய அமெரிக்காவில் அடைக்கப்பட்ட பொருட்களை வாங்கும் நிலைக்கு வழியேற்படுத்தியது. 
  • 1979–80 எண்ணை நெருக்கடி – எண்ணை வாங்கும் நிலைக்கு வழியேற்படுத்தியது.
  • 2000 ஆண்டுச் சிக்கல் - உணவு
  • 2003 சார்ஸ் திடீர் தோற்றம் – பல வகையான பொருட்களை பல தடவைகள் வாங்க வழியேற்படுத்தியது. 
  • 2000 மற்றும் 2005 ஐக்கிய இராச்சிய எரிபொருள் எதிர்ப்பு
  • 2005 ஜிலின் வேதியல் தொழிற்சாலை வெடிப்பு
  • 2013 வெனிசுவேலா பொருளாதார நெருக்கடி
  • 2019 – 2020 கொரோனா வைரஸ் பரவல் – முகமூடி, உணவு, கழிவிட தாள், கை சுத்தப்படுத்தி, துடைப்பதற்கான மதுசாரம் போன்றன திகிலால் அதிகளவு கொள்வனவு செய்யப்பட்டன. 

1 கருத்து:

  1. எடுத்துக்காட்டுகள் வரலாற்று நெறியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
    பாராட்டு

    பதிலளிநீக்கு