![]() |
நீலகிரித் தேயிலை |
வகை | கருப்பு |
வேறு பெயர் | நீல மலைத் தேயிலை |
இடம் | தமிழ்நாடு, கேரளா |
விபரம் | கருமையும் நறுமணமும் |
நீலகிரித் தேயிலைத் தோட்டங்கள் நீலகிரித் தோட்டச் சங்கம் பிரிதிநித்துவம் செய்கிறது. ஆயினும் நீலகிரி மாவட்ட 30 வீத தேயிலை உற்பத்தியை மட்டும் செய்கிறது. பரந்தளவிலான உற்பத்தி ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலப்பரப்பைக் கொண்டுள்ள சிறு உற்பத்தியாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது.
நீலகிரி மாவட்ட (மற்றைய மாவட்டங்களும்) தேயிலைத் தோட்டங்கள் உற்பத்தியாளர்களுக்குச் சொந்தமாகவும், சொந்த செயல்முறை தொழிற்சாலைகளில் ஊடாக இயக்கப்படுகின்றன. சிறு உற்பத்தியாளர்கள் தங்கள் தேயிலையை பச்சை இலைகளாக ‘இலை வாங்கும் தொழிற்சாலைகள்’ கொள்வனவிற்காக விற்கின்றனர். செயல்முறையின் பின் குன்னூர், கோயம்புத்தூர், கொச்சின் ஆகிய பகுதிகளில் இடம்பெறும் ஏல விற்பனையூடாக பல விற்பனை செய்யப்படுகின்றன. 50% இற்கும் அதிகமான நீலகிரித் தேயிலை தேயிலைப் பைகளாக பயன்படுத்துவதற்கேற்ப ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஏற்றுமதி செய்யப்படும் நீலகிரித் தேயிலை தொடர்பான மிகச் சரியான தரவு நம்பகத்தன்மையற்றுள்ளது. ஆயினும் 70% தென் இந்திய தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும், இதில் நீலகிரி தென்னிந்திய உற்பத்தியில் அரைவாசிக்கு மேல் உள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
விலையுயர்ந்த கையால் தரப்படுத்தப்பட்ட, செம்மஞ்சள் உயர்தர கருநிறத் தேயிலை (O.P.) போன்ற முழு இலையுடனான வகைத் தேயிலை பன்னாட்டு ஏலத்தில் பின் அதிக விலையில் விற்கப்படுகின்றன. இவற்றை உள்ளூர் நுகர்வாளர்களால் கொள்ளவனவு செய்ய முடிவதில்லை. ஏப்ரல் 2006 இல் நீலகிரித் தேயிலை “உயர் பெருமதிப்புக்கள்” பெற்று ஒரு கிலோவிற்கு 600 டொலர் என்ற உலக சாதனையைச் செய்தது. லாஸ் வெகாஸில் நடந்த ஏலத்தில் இதுவே முதல் முறையாக சாதனையாகக் காணப்பட்டது. இயந்திர தரபப்டுத்தப்பட்ட, குறைந்த செலவு உயர் ரக தேயிலை அரை-முழு இலை வகைத் தேயிலையாக உடைந்த செம்மஞ்சள் உயர்தர கருநிறத் தேயிலை (BOP) என அறியப்படுகிறது. ஆனாலும், பல உற்பத்தி நொறுக்குதல், கிழித்தல், சுருட்டுதல் உற்பத்தி வழிமுறை மூலம் நடைபெறுகின்றன. இது அதிக எண்ணிக்கையான குவளை அளவினை வெளியிடுகிறது. கடுமையான வாசனை நீலகிரித் தேயிலை கலப்பு நோக்கத்திற்குப் பயன்படுகிறது. அதேநேரம், நீலகிரித் தேயிலை முன்னைய சோவியத் ஒன்றிய விற்பனையில் இதன் முன்னைய நம்பகத்தன்மையில் குறைவான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி பின்னடைவுக்குள்ளானது. சோவியத் கொள்வனவாளர்கள் இதன் தரம் தொடர்பில் சிறியளவு கருத்தினையே கொண்டிருந்தனர். 1990 களில் ஏற்பட்ட வர்த்தகப் பங்காளி வீழ்ச்சி நீலகிரி மாவட்டத்தில் உறுதியான பொருளாதாரச் சரிவை ஏற்படுத்தியது. கடந்த காலத்தில், இந்திய தேயிலைச் சபை நீலகிரித் சில தேயிலை உற்பத்தியாளர்களிடம் அவர்களின் உற்பத்தி தரக்குறைவுக்காக வரி விதித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக