மொழிபெயர்

வீனசின் பட்டி

வீனசின் பட்டி (Belt of Venus) அல்லது வினசின் ஒட்டியாணம் அல்லது மெல்லொளி எதிர் வளைவு என்பது விடியலுக்கு சற்று முன்னர் அல்லது பொழுது புலர்தலுக்குப் பின் தெரியும் ஓர் ஒளியியல் தோற்றப்பாடு ஆகும். மெல்லொளியின்போது மென்சிவப்பு ஒளி சுமார் 10–20° மேலாக அடிவானத்தில் தெரியும்.

வீனசின் பட்டி
விமானத்திலிருந்து பார்க்கும்போது தெரியும் வீனசின் பட்டி

வீனசின் பட்டி மெல்லொளியின்போது அடிவானத்தில், எதிர் சூரியப் புள்ளிக்குக் கிட்டத் தெரியும் செவ்வொளியாகும். செவ்வொளி போன்று, செந்நிற சூரிய ஒளியின் கதிர் எதிரொளிப்பும் வீனசின் பட்டியைத் தோற்றுவிக்கும். செவ்வொளி போலல்லாது, சூரிய வெளிச்சத்தின் ஒளி முறிவானது சூரிய மறைவின் பின் அல்லது சூரிய உதயத்திற்கு முன் தொடர்ந்திருத்தல், வளிமண்டலத்தில் பட்டியைச் சுற்றி மென்சிவப்பு வளைவையும் உருவாக்குதல் என்பன மெல்லிய துணிக்கைகள் மூலம் ஏற்படுகின்றது.


மெல்லொளியின்போது, பூமி நிழலின் கருமையான பட்டியினால் அடிவானத்திலிருந்து ஒளி வேறுபடுத்தப்படுகின்றது. வளைவின் மென்சிவப்பு நிறம் சூரியன் உதயம் அல்லது மறைவிலிருந்து வரும் செவ்வொளியின் ஒளிப் பிரதிபலிப்பினால் ஏற்படுகின்றது. இதுபோன்ற தாக்கம் முழு நிலவு மறைப்பின்போதும் ஏற்படுகின்றது. மேலும், இராசி மண்டல ஒளியும் இதுபோன்ற ஒரு தோற்றப்பாட்டால் ஏற்படுகின்றது. இது சூரியக் குடும்பத்திலுள்ள கிரக தூசியிலிருந்து வரும் சூரிய ஒளிச் சிதறல் பிரதிபலிப்பால் ஏற்படுகின்றது.

இந்த தோற்றப்பாட்டின் பெயரான “வீனசின் பட்டி” என்பது பண்டைய கிரேக்ககப் பெண் கடவுளான அப்ரோடிட்டின் ஒட்டியாணம் அல்லது மார்புப் பட்டியின் தோற்ற உவமானம் மூலம் பெறப்பட்டது. உரோமத் தேவைதையான வீனஸ் அப்ரோடிட் தேவதைக்கு நிகராகக் கருதப்படுகிறது. வீனசின் பட்டியில் வெள்ளிக் கோள் (வீனஸ்) தென்படுவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக