மொழிபெயர்

அண்டலூசைட்

அண்டலூசைட் (Andalusite) என்பது Al2SiO5 என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட ஓர் அலுமினிய சிலிக்கன் கனிமம் ஆகும். அண்டலூசைட் கயனைட்டு, சிலிமனைட்டு ஆகியவற்றுடன் மூவுருவானவுள்ளதும், குறை அழுத்தத்திலும் மத்திம வெப்பத்திலும் பல்வேறு உருவ அமைப்பாகவுள்ளது. உயர் அழுத்தத்திலும் வெப்பத்திலும் இது சிலிமனைட்டாக மாறிவிடலாம். ஆயினும், மற்றைய பல்வேறு உருவ அமைப்புக்களுடன், அண்டலூசைட் அலுமினியம் சிலிக்கேட்டு வரிசை கனிமமாகவுள்ளது.

Andalusite

குறுக்குவெட்டாகப் பார்க்கும்போது சியாஸ்டோலைட்டுக்கள் பொதுவாக காபன் அல்லது களியின் கருமையான உள்ளடக்கம் கொண்டு சிலுவை வடிவில் காட்சியளிக்கும்.

தெளிவான வகை முதன் முதலில் ஸ்பெயினின் அண்டலூசியாவில் கண்டுபிடிக்கப்பட்டது. அது இரத்தினக்கல்லாக வெட்டும்படியாக காணப்பட்டது. இக்கல் சிவப்பு, பச்சை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பல வண்ணங்களை வெளிப்படுத்தக் கூடியது. உண்மையில் இவ்விளைவு வழமைக்கு மாறான பலமான பலதிசை வண்ணப்படிகத்தினால் ஏற்படுகின்றது.


இது களி உருமாற்றப்பாறையுடன் தொடர்புபட்டு காரப் பொருளை அதிகப்படுத்துகின்றது. அண்டலூசைட் அலுமினிய கூறுகளைக் கொண்டு இருப்பதால், உயர் வெப்ப தடையாக உலை, சூளை போன்ற தொழிற்சாலை செயற்பாடுகளில் பயன்படுத்தப்படுகின்றது. தென்னாப்பிரிக்கா உலகில் பெரிய அண்டலூசைட் வண்டல்களைக் கொண்டுள்ளது.

அண்டலூசைட் குறை அழுத்தத்திலும் குறைவான முதல் உயர்வாக வெப்பத்திலும் உருவாகக்கூடிய ஒரு பொதுவான வளருமாற்ற கனிமம் ஆகும். கயனைட்டு, சிலிமனைட்டு கனிமங்கள் அண்டலூசைட்டின் பல்வேறு உருவ அமைப்பாகும். ஒவ்வொன்றும் வேறுபட்ட வெப்பத்தினாலும் அழுத்தத்தினாலும் உருவாகின்றன. அத்தோடு இவற்றை ஒன்றாக ஒரே பாறையில் காண்பது மிகவும் அரிது. ஏனென்றால் இம்மூன்று கனிமங்களும் அவை காணப்படும் இடத்திலுள்ள பாறையின் அழுத்த, வெப்ப பாதையைக் கண்டுகொள்ள உதவும் பயனுள்ள கருவிகளாகும்.

இது முதன் முதலில் ஸ்பெயினின் அண்டலூசியா பகுதியில் உள்ள மாலாகா மாநிலத்திலுள்ள ரொண்டா மசிப் என்ற இடத்தில் 1789 இல் கண்டுபிடிக்கப்பட்டதால், அண்டலூசைட் என்ற பெயரைப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக