மொழிபெயர்

ஒன்பது வளைவுகள் பாலம்

ஒன்பது வளைவுகள் பாலம் (Nine Arches Bridge) என்பது இலங்கையிலுள்ள ஒரு பாலம் ஆகும். இது ‘வானத்தில் பாலம்’ என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. பிரித்தானியப் பேரரசு இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் பிரித்தானிய இரயில்வேயின் கட்டுமானங்களில் சிறப்பு எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இது கருதப்படுகின்றது. பிரித்தானிய பொறியியலார்களுடன் இலங்கையரான அப்புகாமியும் இணைந்து இதனைக் கட்டினார். இத்திட்டத்தின் பிரதான பொறியியலாளராக விமலசுந்தர என்பவரும், வடிவமைப்பாளராக ஹரல்ட் குத்பேர்ட் மார்வூட் என்பவரும் காணப்பட்டனர். இத்திட்டம் பற்றிய திட்டம், வரைவு உட்பட்ட சகல ஆவணங்களும் சிலோன் பொறியாலாளர் சங்கம் 1923 இல் வெளியிட்ட “சிலோனில் சீமெந்து தொடரூந்துப் பள்ளத்தாக்கு கடவைப் பாதை கட்டுமானம்” என்ற அறிக்கையில் காணலாம்.

ஒன்பது வளைவுகள் பாலம்
ஒன்பது வளைவுகள் பாலம்

கட்டுமானப் பொருள் கல், செங்கல், சீமெந்து
நீளம் 300 அடி
அகலம் 25 அடி
உயரம் 80 அடி
தூண்கள் 9
கட்டுமான நிறைவு 1921
புவியில் அமைவு 6.876709°N 81.061622°E

ஒன்பது வளைவுகள் பாலம் பதுளை மாவட்டத்திலுள்ள தெமோதரை என்ற இடத்தில் எல்ல என்ற இடத்திற்கும் தெமோதரை தொடரூந்து நிலையத்திற்கு இடையில் அமைந்துள்ளது. இப்பகுதியின் சுற்றுவட்டாரம் பாலத்தின் கட்டுமான புதுமை, பக்கத்து மலைக் குன்று இருக்கும் பசுமை என்பவற்றால் உல்லாசப் பயணிகளைக் கவருமிடமாக உள்ளது.


பாலத்திற்கான கட்டட வேலை நடந்து ஆரம்பிக்கப்பட்டபோது, முதலாம் உலகப்போர் நடைபெற்றது. இதனால் இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட இரும்பு பிரித்தானியாவின் சண்டை முனைத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்டது என்ற பொதுவான கருத்து உள்ளது. இதன் காரணமாக, வேலைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், இரும்பு இல்லாமல் கல், செங்கல், சீமெந்து ஆகியவற்றைக் கொண்டு கட்டி முடிக்கப்பட்டது என்ற சொல்லப்படுகின்றது. இலங்கை தொடரூந்துயில் இது ஒரு முக்கிய உருவமாக இருப்பதால், இந்தப் பாலத்தினூடே தொடரூந்து வரும் அழகிய காட்சிகள் இன்றும் இலங்கை தொடரூந்து நிலையங்களிலும், விளம்பரப் பலகைகளிலும் காணலாம்.

3 கருத்துகள்: