மொழிபெயர்

தமிழ் இலக்கணமும் பெரியாரும்

ஈ. வெ. இராமசாமி என்ற இயற்பெயருடைய பெரியார் ஒரு திராவிட சமூக சீர்திருத்தவாதியும் இந்தியா அரசியல்வாதியும் ஆவார். இவர் சுயமரியாதை இயக்கம்,  திராவிடர் கழகம் என்பவற்றின் உருவாக்குனரும் ஆவார். பெரியார் தமிழின் நன்மைக்காகவும் தமிழர் உயர்ச்சிக்காகவும் பரிந்துபேசி முக்கிய இடம் பெற்றுள்ளார்.

தமிழ் இலக்கணமும் பெரியாரும்

இந்தித் திணிப்பு இந்தியத் துணைக்கண்டத்திலும் தமிழ்நாட்டிலும் ஏற்பட்டபோது, பெரியார் “ஒருவரின் மொழி மீதான அன்பு எங்கள் தாயகத்தில் பிறந்த மக்களுக்குத் தேவையான எல்லா அன்புக்கும் முதன்மையானது. தன் மொழியை அன்பு செய்யாதவன் தன் தாய்நாட்டையும் அன்பு செய்யமாட்டான். ஒரு தேசம் ஒருவனின் மொழியின் மீதான அன்பின் அடிப்படையில் செயற்படுகிறது. என்னுடைய மன்றாடல் என்னவென்றால், தமிழர் தங்கள் தாய்மொழி மீதான அன்பை அதிகரிக்க வேண்டும். நான் மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துவது என்னவென்றால் தாய்மொழியில் பற்றுதல் தமிழ்நாட்டில் பிறந்தவருக்குக் கட்டாயம். வங்காளிகள் வங்க மொழியை அன்பு செய்கிறார்கள். மராத்தியர் மராத்திய மொழியை அன்பு செய்கின்றனர். ஆந்திராக்காரர்கள் தெலுங்கை அன்பு செய்கின்றனர். ஆனால் தமிழர் தமிழ் மொழியை அன்பு செய்வதில்லை. தங்கள் தாய்மொழியை பயன்படுத்த அன்பு செய்யாதவரை தமிழர் முன்னேறப் போவதில்லை. நான் தமிழை அன்பு செய்வது சதாரணமானதல்ல. ஏனென்றால், அது தாய்மொழி அல்லது தமிழ்நாட்டு அரசின் மொழி என்பதாலாகும். எனக்கு தமிழுடன் உள்ள தொடர்பு அதனுடைய தனித்தன்மை அல்லது அதன் பழமையினால் ஏற்றபட்டதல்ல. நான் தமிழை அன்பு செய்வது, நான் அதனூடாக எதிர்பார்க்கும் அனுகூலத்தையும் அது இல்லாதவிடத்து ஏற்படும் இழப்பின் அளவையும் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளேன்”.

தமிழ் மொழி விமர்சனம்


பெரியார் தமிழ் மொழி மீதும் ஏனைய திராவிட மொழிகள் மீதும் புகழ்ச்சியையும் விமர்சனத்தையும் முன்வைத்தார். இவர் இது பற்றித் தெரிவிக்கையில், “எமது நாட்டில் வேறொரு மொழியைத் திணிப்பதனால் வரும் பிரதிகூலம் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டுள்ளேன். நான் இதனை பொறுத்துக் கொள்ளாவில்லை, மாறாக எதிர்க்கிறேன். அது புதியது என்பதாலோ அல்லது இன்னுமொரு நிலத்திற்குச் சொந்தமானது என்தாலே, அதை எதிர்க்கவில்லை. என் கருத்தின்படி, தமிழ் மொழி எல்லாக் களங்களிலும் மக்களின் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிப்புச் செய்யக்கூடிய தகுதியைக் கொண்டிருக்கிறது. அது மேன்மையான வாழ்விற்கும் அடிப்படைக்கும் வழிகாட்டும். ஆனாலும், ‘தமிழில் எல்லா ஆதாரங்களும் உள்ளனவா’ என்று மக்கள் கேட்கலாம். இந்தத் தகைமைகள் இல்லாதிருந்தாலும், தமிழ் கலை, பழக்கவழக்கம், பண்பாடு, இந்தியாவில் உளள் பல மற்றைய மொழிகளைவிட பெரும் முன்னேற்றத்திற்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய தகுதியான சொற்களஞ்சியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆகவே, மற்றைய மொழிகள் தமிழுக்கு அனுகூலமில்லாத தன்மையை ஏற்படுத்தக்கூடிய நிலை வரவேற்கத்தக்கதல்ல”.

பெரியார் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்பன ஒரே மொழியில் அல்லது பழைய தமிழின் ஒரே தாய் மொழியில் இருந்தது என வலியுறுத்தினார். அவர் இது பற்றி விளக்கும்போது தமிழ் மொழி நான்கு வேறுபட்ட திராவிட மாநிலங்களில் பேசப்பட்டு, வேறு பெயர்களால் அழைக்கப்படது. ஆகவே இதற்கு வெவ்வேறு பெயர்கள் உருவாகின. இது பற்றி அவர் எழுதும்போது, கலையில் தமிழ் எழுத்துக்களின் பாவனை அனுகூலமான அறிவுக்கும், திறமைக்கும், உற்சாகத்திற்கும் ஊக்குவிப்பும் அவர்கள் வாழ்வியலில் மக்களுக்குப் பயனுள்ளதும், மக்களிடையே அவற்றை பிரச்சாரம் செய்யவும், அதன் மூலம் மக்களை அறிவடையச் செய்யும். மேலும் இது பற்றி அவர் குறிப்பிடுகையில், இது மொழியை செழிப்படையச் செய்து, தமிழுக்கான முத்திரையாக விளங்கும். பெரியார் தமிழ் மொழி திராவிட மக்களை தமிழ் கலாச்சாரச் கொடியின் கீழ் ஒன்றுபடச் செய்யும் என்றும், கன்னடர், தெலுங்கர், மலையாளிகளை விழிப்படையச் செய்யும் எனவும் நம்பினார். பொது குடை மொழியின் கீழ் திராவிடர் அணிசேர்தல் பற்றிக் குறிப்பிட்ட பெரியார், “ஒன்றுபடலுக்கான ஒரு நேரம் வரும். இது தென்னிந்திய அதிக்கம் முடிவுறும் வரை தொடரும். எங்களிடையே ஒரு சுதந்திர இறைமையான நாட்டை மீளக் கொண்டுவருவோம்” என்றார்.

பெரியார் தமிழ் மொழி பற்றியும் தமிழர் பற்றியும் எதிர்மறையான கருத்துக்களை வெளியிட்டிருந்தார். தமிழ் மக்களை “காட்டுமிராண்டிகள்” எனவும், தமிழ் மொழியை “காட்டுமிராண்டிகளின் மொழி” எனவும் குறிப்பிட்டிருந்தார். ஆயினும் இது பற்றி விளக்கமளித்த அனிட்டா டிகிள் என்பவர், பெண் பற்றிய வாய்மூல அமைப்பைக் கொண்டிராததால் பெரியார் அவ்வாறு குறிப்பிட்டார் என்றார்.

தமிழ் அரிச்சுவடி சீர்திருத்தம்

தமிழ் அரிச்சுவடியில் சீர்திருத்தம் வேண்டும் என்ற எண்ணத்தை பெரியார் கொண்டிருந்தார். சில காரணங்களால் அவ்வாறு கருதினார். 'இ' எழுத்தின் குறுகிய வடிவத்தை சுருக்கி பிரதிநிதித்துவப்படுத்துவதும், தொடராக் கொண்ட 'ஈ' எழுத்து. 400 அல்லது 500 வருடங்களுக்கு முந்திய கல்வெட்டுக்களில் தமிழ் எழுத்தக்கள் வேறு வடிவில் உள்ளன. தேவை, அச்சிடல் தொழிநுட்பத்துடன் இசைவுபடும் அனுகூலத்தின் அடிப்படையில், பெரியார் சில எழுத்துக்களை மாற்றுதல், எழுத்துகளை குறைத்தல், சில குறியீடுகளை மாற்றுதல் உணர்வு பூர்வமானதெனக் கண்டார். இது பற்றி மேலும் விளக்கிய அவர், பழமையான மிகவும் சிறந்த மொழி மற்றும் அதன் எழுத்துக்கள் சீர்சிருத்தத்திற்கு உள்ளாக வேண்டும் என்றார். ஏனென்றால், தற்கால போக்குவரத்து, பன்னாட்டுத் தொடர்பு ஆகியன பல சொற்களையும் உற்பத்திகளையும் பல நாடுகளில் இருந்து கொண்டு வருதல், வெளிச் சொற்கள், அவற்றின் உச்சரிப்புக்கள் தமிழுக்கு மிகவும் விரைவாக உட்கொணரல் ஆகிய காரணங்களால் மாற்றம் தேவையானது என்றார். ' கா ', ' கே ' போன்ற எழுத்துக்களில் மேலதிகமாக, தனித்த குறியீடுகள் (அரவு, இரட்டைக் கொம்பு) காணப்படுகின்றன. ' கி ', ' கீ ', 'கு ', ' கூ ' ஆகிய குறிகள் இணைந்த எழுத்துக்களில் ஏன் அவ்வாறு இல்லை என வாதிட்டார். பெரியாரின் கருத்துப்படி, எழுத்தின் வடிவை மாற்றுதல், புதிய குறியீட்டை உருவாக்கல், புது எழுத்துக்களை இணைத்தல், ஒற்றுமைத்தன்மை, தேவைக்கு அதிகமானவற்றைக் கைவிடல் ஆகியன முற்றிலும் தேவையானது. இது மொழிக்கும் அதன் எழுத்துமுறைக்கும் புகழுக்கும் சிறப்புக்கும், அவை இலகுவாக விளங்கிக் கொள்ளவதில் அல்லது கற்றுக் கொள்ளலில் தங்கியுள்ளது என பெரியார் குறிப்பிட்டார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக