மொழிபெயர்

அலெக்ஸ்சாண்ட்ரைட்

அலெக்ஸ்சாண்ட்ரைட் (Alexandrite) அல்லது அலெக்சாண்ட்ரைட் என்பது BeAl2O4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டைக் கொண்ட கிரிசோபெரில் (Chrysoberyl) என்ற பெரிலிய அலுமினியத்தின் ஒரு வகை கனிமம் ஆகும். பொன் வெள்ளைக் கல் என்ற பொருள் உள்ள கிரிசோபெரில் மூன்றுவித கற்களைக் கொண்டுள்ளது. மஞ்சள் முதல் பச்சை கிரிசோபெரில், வைடூரியம், அலெக்ஸ்சாண்ட்ரைட் என்பவை கிரிசோபெரில் கல்லின் 3 வகைகளாகும்.

அலெக்சாண்ட்ரைட்
நிற மாறுபாடு காட்டும் ஒரே அலெக்ஸ்சாண்ட்ரைட் கல்

அலெக்சாண்ட்ரைட் ஒளியின் தன்மைக்கேற்ப நிறம் மாறுபடும் தன்மை கொண்டது. இதனை அலெக்ஸ்சாண்ட்ரைட் தாக்கம் எனவும் குறிப்பிடுவதுண்டு. இதனால் பச்சை நிறத்தில் இருந்து சிவப்பு நிறமாக பெறப்படும் ஒளிக்கேற்ப மாறுபடும். அலெக்ஸ்சாண்ட்ரைட் நிற மாற்றமானது அதிலுள்ள பளிங்குக் கட்டமைப்பில் குரோமிய மின் அணுக்களால் சிறிதளவு அலுமினியம் மாற்றப்படுவதால் ஏற்படுகின்றது. பார்க்கக்கூடிய ஒளி நிறப்பிரிகையின் மஞ்சள் பகுதியில் (580 நானோ மீட்டர்) அலை நீளத்தின் ஒரு குறுகிய அளவுக்கு மேலாக ஒளி பலமாக உறிஞ்சப்படுவதால் அது சாத்தியமாகின்றது. மனிதப் பார்வை பச்சை ஒளிக்கு மிகவும் நன்றாகப் புலப்படுவதாலும் சிவப்பு ஒளிக்கு குறைவான புலப்படுவதாலும், அலெக்ஸ்சாண்ட்ரைட் பார்வைக்குரிய ஒளி முழு அளவில் உள்ள பகல் ஒளிக்கு பச்சையாகவும், பச்சையையும் நீல ஒளியையும் குறைவாக வெளிப்படுத்தும் வெண் சுடர் ஒளிக்கு சிவப்பாகவும் காட்சியளிக்கும்.


அலெக்ஸ்சாண்ட்ரைட் ரஸ்யாவின் உரால் மலைகளில் இருந்து கிடைப்பது பகல் வெளிச்சத்தில் பச்சையாகவும், செயற்கை வெளிச்சத்தில் சிவப்பாகவும் தெரியும். அலெக்ஸ்சாண்ட்ரைட்டின் ஏனைய வகைகள் பகல் ஒளியில் மஞ்சள் அல்லர் மென்சிவப்பாகவும், மின்னொளியில் ராஸ்பெரி சிவப்பாகவும் தென்படலாம். பரபரப்பான நிற மாற்றமும் திடமான நிற மாற்றமும் (சிவப்பிலிருந்து பச்சை) கொண்ட கற்கள் அரியவையாகும். ஆனால், குறைவான எளிய நிறம் கொண்ட (எ.கா: மஞ்சல் பச்சையிலிருந்து பழுப்பு மஞ்சள்) கற்கள் அலெக்ஸ்சாண்ட்ரைட் என்றே கருதப்படுகின்றன.

பரவலான கதையின்படி, பின்லாந்து இரத்தினக்கலியலாளரான நில்ஸ் கஸ்டவ் நோர்டென்ஸ்கியோல்ட் என்பவரால் இது கண்டுபிடிக்கப்பட்டது. ரசியாவின் இரண்டாம் அலெக்சாண்டர் மன்னரின் பெயரைக் கொண்டு இக்கல்லுக்கு பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் நோர்டென்ஸ்கியோல்ட் புதிதாகக் கிடைத்த இக்கல்லை மரகதம் எனவே அடையாளம் கண்டார்.

அலெக்ஸ்சாண்ட்ரைட் 5 கரட் (1,000 மி.கி) மற்றும் அதைவிடப் பெரிய கற்கள் பாரம்பரியமாக உரால் மலைகளில் கிடைத்தன். ஆனால் பெரிய கற்கள் பிரேசிலில் கிடைக்க ஆரம்பித்தன. இதைத்தவிர இந்தியா (ஆந்திரா), மடகஸ்கார், தன்சானியா, இலங்கை ஆகிய இடங்களிலும் இரத்தினக்கல் பத்தல்கள் உள்ளன.

இன்று சில ஆய்வுகூடங்களில் செயற்கைமுறை அலெக்ஸ்சாண்ட்ரைட் கற்கள் இயற்கை போன்றே பௌதீக தன்மையுடனும் வேதியல் தன்மையுடனும் உருவாக்கப்படுகின்றன. பாய்ம-வளர்ச்சி அலெக்ஸ்சாண்ட்ரைட் மற்றும் சொக்ரால்ஸ்கி முறை (இலுவை) அலெக்ஸ்சாண்ட்ரைட் முறைகள் செயற்கையாகப் பயன்படுத்தப்படுகின்றது. பாய்ம-வளர்ச்சி முறையில் செய்யப்படும் கற்களை இயற்கையான கற்களில் இருந்து வேறுபடுத்திக் காண்பது மிகவும் கடினமானது. அவற்றில் இயற்கை அலெக்ஸ்சாண்ட்ரைட் போன்றே குறைபாடுகள் (குமிழி, கோடுகள், ஒழுங்கின்மை) காணப்படும். சொக்ரால்ஸ்கி முறையில் செய்யப்படும் கற்கள் மிகவும் தூய்மையாகவும், உருப்பெருக்கியில் பார்க்கும்போது வளைந்த வரிப்பள்ளங்களைக் கொண்டு காணப்படுவதால் எளிதாக அடையாளம் கண்டுவிடலாம். மேலும் இது நீலத்தில் இருந்து சிவப்பு நிற மாற்றத்திற்கு உள்ளாகும். இந்நிற மாற்றம் இயற்கையான கற்களில் ஏற்படுவதில்லை. வெப்பநீராற்றல் முறையில் உருவாக்கப்படும் கற்கள் உண்மையான அலெக்ஸ்சாண்ட்ரைட்டை ஒத்தே காணப்படும்.

சில இரத்தினக்கற்கள் பிழையாக ஆய்வுகூடங்களில் உருவாக்கப்பட்ட செயற்கை அலெக்ஸ்சாண்ட்ரைட் என கருதப்பட்டாலும், அவை குருந்த இழை வார் தடமுள்ள மூலக்கூறுகளைக் கொண்ட (எ.கா: வனேடியம்) அல்லது நிறம் மாறும் சிபினல் கற்களாகும். ஆனாலும், அவை கிரிசோபெரில் கனிமம் அல்ல. இவை செயற்கைமுறை அலெக்ஸ்சாண்ட்ரைட்டைவிட “போலி அலெக்ஸ்சாண்ட்ரைட்” என விபரிக்கப்படுகின்றது. அலெக்ஸ்சாண்ட்ரைட் போன்ற சபையர் கற்கள் (sapphire) சுமார் 100 வருடங்களாக உள்ளதுடன், ஊதாவிலிருந்து வெளிர் ஊதா நிறமாற்றத்தை வெளிப்படுத்தும். ஆனாலும் அவை ஒருபோதும் பச்சை நிறத்தை வெளிப்படுத்தாததால் உண்மையான அலெக்ஸ்சாண்ட்ரைட் போன்று தோற்றமளிப்பதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக