மொழிபெயர்

குழிநாவல்

குழிநாவல் மரம் என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த நாவல் குடும்பத்தைச் சேர்ந்த தாவரமாகும். இதன் தாவரவியல் பெயர் மிர்டஸ் கொமுனிஸ் (''Myrtus communis'') என்பதாகும். இது தென் ஐரோப்பா, வட ஆப்பிரிக்கா, மெற்கு ஆசியா, மக்ரோனேசியா, இந்திய துணைக்கண்டம் ஆகிய இடங்களை தாயகமாகக் கொண்டதும் அவ்விடங்களில் பயிரிடப்படும், மாறாப்பசுமை புதர்த் தாவரமாக உள்ளது.

குழிநாவல்
குழிநாவல்

சுக்கட் எனப்படும் யூதப் பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் நான்கு பழங்களில் இதுவும் ஒன்றாகும்.

குழிநாவல் ஒரு மாறா பசுமை புதராக அல்லது சிறு மரமாக 5 மீட்டர்கள் (16 அடி) உயரமாக வளர்கிறது. இதன் இலைகள் 2–5 செ.மீ (0.79–1.97 அங்குலம்) நீளமாக வளர்வதுடன், நறுமண ஆவி எண்ணையாகவும் காணப்படுகின்றது.

இதன் பூக்கள் வெள்ளையாக அல்லது மென்சிவப்பு மென்மையான பூசப்பட்டு, ஐந்து இதழ்களுடனும், பூவைவிட்டு நீட்டிக் கொண்டிருக்கும் பல மகரந்தக் கேசரத்துடன் காணப்படும். பழங்கள் சதைப்பற்றுள்ளக் கனியாக,  பழுத்ததும் நீல-கருப்பு நிறத்தில் காணப்படும்.

இதன் இனங்கள் நெருக்கமான பல துணையினங்களைக் கொண்டுள்ளது. இது அரச தோட்டக்கலை சமூகத்தினால் இத்தாவரத்தின் தோட்டம்சார் சிறப்பிற்கான தோட்டச் சிறப்புப் பரிசை வென்றது.

திணை தாவரம்
பிரிவு பூக்கும் தாவரம்
பிரிவு Eudicots
பிரிவு Rosids
வரிசை Myrtales
குடும்பம் Myrtaceae
பேரினம் நாவல்
இனம் M. communis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக