மொழிபெயர்

சஞ்சீவினி

சஞ்சீவினி என்பது பாறையில் வளரக்கூடிய ஒரு தாவரமாகும். இது சஞ்ஜீவினி எனவும் சஞ்ஜீவனி எனவும் சஞ்சீவனி எனவும் பலவிதமாக உச்சரிக்கப்படும். இந்தியாவை தாயகமாகக் கொண்ட இதன் உயிரியற்பெயர் செலகினெல்ல பிரயோப்டெரிஸ் (Selaginella bryopteris) என்பதாகும். இந்தியாவில் இதனை மருத்துவ தேவைகளுக்காப் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் இதனை புராண சஞ்சீவினி மூலிகைகளில் ஒன்றாகவும் கருதுகின்றனர்.

சஞ்சீவினி
சஞ்சீவினி

சஞ்ஜீவனி என்ற பிரபல்யமான பெயர் "உயிரை அளிக்கும் ஒன்று" என்ற பொருள் கொண்டது. இது இராமாயணத்தில் குறிப்பிடப்படும் தாவரத்தின் பெயரில் இருந்து பெறப்பட்டது. வேறு மருத்துவத் தாவரங்களும் இப்பெயரால் அழைக்கப்படுவதுண்டு. இராமாயணம் குறிப்பிடும் தாவரத்தை தாவரவியல் ரீதியாக அடையாளப்படுத்துவது தெளிவற்றது. ஆனாலும், செலகினெல்ல பிரயோப்டெரிஸ் (Selaginella bryopteris) என்ற தாவரவியற் பெயருடைய இத்தாவரம் சஞ்சீவினி / சஞ்ஜீவனி என பிரேரிக்கபபட்டுள்ளது.




சஞ்சீவினி வெப்ப வலய குன்றுகளில் வளர்கிறது. குறிப்பாக இந்தியாவின் ஆரவல்லி மலைத்தொடர் பகுதியில் இது வளர்கிறது. சிறுநீர் அடைப்பு, வெப்ப வாதம், ஒழுங்கற்ற மாதவிடாய், மஞ்சள் காமாலை போன்றவற்றிற்கு பாரம்பரிய நிவாரணியாக பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும், அறிவியல் ரீதியாக இதன் விளைவு கண்டறியப்படவில்லை. மேலும் இது கோமா என்ற மயக்கநிலை நோயாளிக்கு மூச்சு இழுத்தலுக்கு உதவுகின்றது.

உயிரியல் வகைப்பாடு

திணை:

தாவரம்

பிரிவு:

Lycopodiophyta

வகுப்பு:

Isoetopsida

வரிசை:

Selaginellales

குடும்பம்:

Selaginellaceae

பேரினம்:

Selaginella

இனம்:

S. bryopteris
இருசொற் பெயரீடு
Selaginella bryopteris
(கரோலஸ் லின்னேயஸ்) பேக்கர், 1884

1 கருத்து: