மொழிபெயர்

குபேரக்கோலம்

குபேரக்கோலம் என்பது ஒரு குறிப்பிட்ட மாயச் சதுரம் ஆகும். இது தென்னிந்தியாவில் சில வீடுகளில் தரையில் அரிசி மாவு மூலம் போடப்படும் கோலம் ஆகும். இந்து பாரம்பரியத்தின்படி, குபேரன் செல்வம், செழிப்பு ஆகியவற்றின் கடவுளாகும். குபேரக்கோலம் போட்டு வழிபாடு செய்தால், அவர் செல்வம், வளம் ஆகியவற்றைப் பெறுவார் என நம்பப்படுகின்றது.


ஒரு கோலம் வலைவடிவ நகர அமைப்பில் புள்ளிகளைக் கொண்டு கோடுகளினாலும் வளைவுகளினாலும் வரையப்படும். தென் இந்தியாவில் பல இடங்களில் அரிசி மாவு / வெண்கட்டி பொடியுடன் நிறத்தூள் சேர்த்து கோலம் வரையப் பயன்படுத்தப்படுகின்றது

குபேரக்கோலம் மாயச் சதுரம் 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28 ஆகிய இலக்கங்களைக் கொண்டு பின்வருமாறு வரையப்படும்.

 27 20 25
22 24 26
23 28 21

இந்த மாயச் சதுரத்தில் ஒவ்வொரு வரிசையிலும் நிரலிலும் எண்கள் காணப்படும். இவற்றை எந்த ஒழுங்கில் கூட்டினாலும் விடை 72 வரும். முதலில் இக்கோலத்தில் வரிகளை வரையப்படும். பின்பு 24, 28, 23, 22, 27, 20, 25, 26, 21 என்ற ஒழுங்கில் எண்கள் எழுதப்படும். பொதுவாக ஒவ்வொரு கட்டத்திலும் நாணயமும் பூவும் இடப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக