வரலாறு
வரலாற்று மொழிகள் தொடர்பாடலில் பன்னாட்டு முக்கியத்துவம் உள்ளவையாக வரலாற்றுப் பேரரசுகளில் காணப்பட்டன. பண்டைய எகிப்தில் எகிப்து மொழியும், பண்டைய அண்மைக் கிழக்கில் பல மெசொப்பொத்தேமியா நாகரீகங்களிலும் பேரரசுகளிலும் சுமேரிய, அக்காடியன், அராமேயம் ஆகிய மொழிகளும் காணப்பட்டன. பண்டைய கிரேக்க மொழி கிரேக்க குடியிருப்புக்களில் பல பேச்சு வழக்குகளில் இருந்ததுடன், மக்கெடோனியாவை பேரரசர் அலெக்ஸ்சாண்டர் வெற்றி கொண்டதன் பின், ஹெலனிய காலத்தில் கொய்னி கிரேக்க மொழியின் பரிணாமம் பெற்றது. மேலும், தொடர்ச்சியாக உரோமப் பேரரசின் கிழக்குப் பகுதியிலும், பைசாந்தியப் பேரரசின் பகுதிகளிலும் கிரேக்கம் காணப்பட்டது.உரோமைப் பேரரசில் இலத்தீன் காணப்பட்டதுடன் தற்போதும் கத்தோலிக்க உலகில் நிர்ணயிக்கப்பட்ட வழிபாட்டு மொழியாகவும் உள்ளது. சீன வரலாற்றுக் காலத்தில் கிழக்காசியாவில் செம்மொழிச் சீனம் காணப்பட்டது. பல பாரசீகப் பேரரசுகளில் பாரசீகம் காணப்பட்டதுடன், இஸ்லாமிய உலகில் அரபிக்குப் பின் இரண்டவது தொடர்பாடல் மொழியாகவும் இருந்தது. பண்டைய மற்றும் மத்தியகால வரலாற்றுக் காலத்தில், தெற்கு ஆசியா, தென்கிழக்காசியா, நடு ஆசியா ஆகியவற்றில் இருந்த பல அரசுகளில் சமஸ்கிரதம் காணப்பட்டதுடன் இலத்தீன் போன்று இதுவும் இந்து சமயங்களில் முக்கிய வழிபாட்டு மொழியாகக் காணப்படுகின்றது.
உரோமைப் பேரரசில் தொடர்பாடல் மொழியாக இலத்தீன் மொழியின் பங்கு உரோமானிய மொழிகளின் முக்கியத்துவம் மிக்கது. நடுநிலக் கடல் பகுதியில் இத்தாலி மொழி எப்போதும் முக்கியத்துவம் கொண்டிருந்ததும், இப்போதும் கத்தோலிக்க திருச்சபை தலைமைத்துவத்தில் உள்ளோரிடன் அதிகம் பேசும் மொழியாகவும், இசையிலும், நாகரீக உற்பத்திகளிலும், அறிவியல் சொற்களிலும் இதன் செல்வாக்கு அம்மொழியின் முக்கியத்துவத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு. உதுமானியப் பேரரசின் முதன்மை மொழியாக இருந்த துருக்கி மொழி குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தது. ஹெலனிய காலத்தில் கொய்னி கிரேக்கம் “உலக மொழி” என்ற நிலையி; இருந்தது. ஆனாலும், ஸ்லாவிக், அரபி, துருக்கி மொழிகளின் விரிவாக்கத்தினால் தற்கால கிரேக்கத்தின பரம்பலில் தாக்கம் செலுத்தின. அராபிய, துருக்கிய மொழிகளின் பரம்பல் முறையே கலிபாக்களினதும், துருக்கிய கானேடுகளினதும் விருப்பத்திற்குள்ளாகின.
வாழும் உலக மொழிகள்
வாழும் உலக மொழி பின்வரும் தன்மைகளைக் கொண்டிருக்க வேண்டும் என சில மூலங்கள் தெரிவிக்கின்றன:- அதிகளவானோர் பேசுதல்
- தாய் மொழி அற்றவர்களின் ஓர் உறுதியான பகுதியாயிருத்தல்
- சில நாடுகளில் உத்தியோகபூர்வத் தகுதி
- உலகில் சில பிரதேசங்களுக்கிடையே பயன்பாடு
- ஒரு மொழி சார் சமூகம் இன ரீதியாக கடுமையாக வறையறுக்கப்படாதிருத்தல்
- ஒன்று அல்லது அதிகமான ஏற்றுக் கொள்ளப்பட்ட பதிவாளர்களால் ஓர் அந்நிய மொழியாக பரவலாக கற்பிக்கப்படல்
- மொழி சார் தனிச்சிறப்புக் கொண்டிருத்தல்
- பன்னாட்டு உறவுகளில் பயன்பாடு
- சர்வதேச அமைப்புகளில் பயன்பாடு
- அகாதமியில் பயன்பாடு
- இலக்கியத்தில் குறிப்பிடத்த இடம்
100 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் பேசும் ஜப்பான் போன்ற சில மொழிகள் பட்டியலிடப்படவில்லை. உலக மொழியாக பட்டியலிடப்பட்ட மொழிகளுடன், பன்னாட்டளவில் மிகவும் குறிப்பிடத்தக்க மொழிகளில் ஒன்றாக ஐப்பானிய மொழி கருதப்பட்டாலும், அது உலக மொழியாகக் கருதப்படுவதில்லை. ஐப்பான் கிட்டத்தட்ட ஒரே இன, கலாச்சார, மொழியினரின் பிராந்தியமாக உள்ளது. ஆயினும், ஜப்பானியர் சமூகங்களிடையேயான தொடர்பாடலில் மிகவும் சிறிய வரலாற்றைக் கொண்டுள்ளனர். அவர்களின் வெளிநாட்டுச் சமூகம் இனத்துடன் மிகவும் நெருக்கமாக இருந்ததுடன், அதற்கு வெளியே தாய் மொழியாக அல்லது முதலாவது மொழியாக அவர்கள் தங்கள் மொழியைப் பகிர்ந்து கொள்ளவில்லை. 1980 களில் பன்னாட்டு ஆர்வம் பல பல்கலைக்கழகங்கள், பாடசாலைகள் என்பவற்றை உருவாக்கின.
உலக மொழிகளாக பெருமளவில் கருதப்படும் மொழிகள் பின்வருமாறு:
மொழி | தாய்மொழி | மொத்தம் |
ஆங்கிலம் | 372 மில்லியன் | 1500 மில்லியன் |
ஸ்பானிஸ் | 480 மில்லியன் | 567 மில்லியன் |
பிரெஞ்சு | 80 மில்லியன் | 274 மில்லியன் |
பிற மூலங்கள் உலக மொழிகளாக பின்வரும் மொழிகளைக் குறிப்பிட்டாலும், கடுமையான நிர்ணய மூலங்கள் அவற்றை மேலான பிராந்திய மொழிகள் எனக்குறிப்பிடுகின்றன.
மொழி | தாய்மொழி | மொத்தம் |
மாண்டரின் | 898 மில்லியன் | 1091-1151 மில்லியன் |
அரபி | 313 மில்லியன் | 423 மில்லியன் |
போர்த்துக்கீசம் | 220 மில்லியன் | 260 மில்லியன் |
உருசியம் | 171 மில்லியன் | 260 மில்லியன் |
ஜெருமன் | 95 மில்லியன் | 105-130 மில்லியன் |
பிற மேலான பிராந்திய மொழிகள்
பிற மேலான பிராந்திய மொழிகளின் முக்கியத்துவம் என்பது சில வேறுபட்ட அளவு நிர்ணயங்கள் மூலம் நடப்பு உலக மொழிகளாகக் கருதப்படுகின்றன. அம்மொழிகள் பின்வருமாறு:மொழி | தாய்மொழி | மொத்தம் |
இந்துஸ்த்தானி (இந்தி மண்டலம், உருது) | 329 மில்லியன் (இந்தி 260மி, உருது 69மி) |
544 மில்லியன் (இந்தி 381மி, உருது 163மி) |
இடச்சு மற்றும் ஆபிரிக்கானா | 29 மில்லியன் | 46 மில்லியன் |
வங்காளம் | 242 மில்லியன் | 261 மில்லியன் |
மலாய் மற்றும் இந்தோனேசியம் | 39 மில்லியன் | 218 மில்லியன் |
சுவாகிலி | 16 மில்லியன் | 98 மில்லியன் |
பாரசீகம் | 50-60 மில்லியன் | 53-110 மில்லியன் |
துருக்கிய மொழி | 71 மில்லியன் | 71-100 மில்லியன் |
இத்தாலி | 63 மில்லியன் | 66-85 மில்லியன் |
தமிழ் | 68 மில்லியன் | 76 மில்லியன் |
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக