மொழிபெயர்

சூரிய அடையாள சோதிடம்

சூரிய அடையாள சோதிடம் அல்லது சூரிய இராசி சோதிடம் (Sun sign astrology) என்பது சோதிடத்திலுள்ள ஒரு வகையாகும். இது பல நாளிதழ்களிலும் சஞ்சிகைகளிலும் பலன்களுடன் காணப்படும். சோதிடத்திலுள்ள இலகுவான வழிமுறையாகக் காணப்படும் இது, சூரியனை மையமாகக் கொண்டு கணிக்கப்படுகின்றது. பிறக்கும்போது 12 இராசிகளிலும் சூரியன் எங்கிருந்தது என்பதை வைத்தே பலன் சொல்லப்படுகின்றது. பிறக்கும்போது இருக்கும் இடம் “சூரிய அடையாளம்” அல்லது இராசி என அழைக்கப்படும்.

சூரிய இராசி சோதிடம்

சூரிய அடையாள சோதிடர்கள் அடிப்படை 12 பிரிவுகளையும், எல்லாக் கிரகங்களும் ஒன்றுக்கொன்று நகரும் நடப்பு நகர்வைக் கொண்டு கணிக்கிறார்கள். சந்திரன் மிகவும் வேகமாக நகருவதால் இதனை பிரதானமாகக் கொண்டு நாளாந்த பலன்களை சூரிய அடையாள சோதிடர்கள் கணிக்கிறார்கள்.


வில்லியம் லில்லி முதலாவது சோதிட நாளிதழாக 17 ஆம் நூற்றாண்டில் இருந்தாலும், 1930 வரை சூரிய அடையாள சோதிடம் கண்டுபிடிக்கப்படவில்லை. சோதிடர் ஆர். எச். நைலர் ஆர்101 வான்கப்பல் மோதும் என கணித்து தன் நாளிதழில் வெளியிட்டிருந்தார். இது நைலரை இலகுவான சோதிட முறையைக் கொண்டு நாளிதழில் வெளியிட மேலும் தூண்டியது. சில சோதனைகளின் பின் நைலர் சூரிய அடையாள சோதிடம் பற்றி முடிவெடுத்தார் என நம்பப்படுகிறது.

பின்வரும் அட்டவனை ஒவ்வொரு இராசியினதும் மூலப்பொருள், தன்மை ஆகியவற்றைக் காட்டுகிறது. சூரிய அடையாள ஆரம்ப மற்றும் முடிவு திகதிகள் அண்ணளவாகத் தரப்பட்டுள்ளன. ஏனென்றால் புவியின் பாதையில் ஏற்படும் மாற்றம் ஒவ்வொரு வருடத்திலும் (நாளிலும்) மாற்றம் ஏற்படுத்தக்கூடியது. ஆயினும் மிகவும் சரியான சூரிய அடையாள ஆரம்ப/முடிவு திகதியை பொருத்தமான மென்பொருள் மூலமாகவோ அல்லது வானியல் பஞ்சாங்கத்தின் உதவியுடன் கண்டுகொள்ளலாம்.

இராசி மூலப்பொருள் தன்மை துருவமுனை காலம் (1/2 நாள் வேறுபாடு)
மகரம் நிலம் சுயோட்சை மறை டிசம்பர் 21-சனவரி 20
கும்பம் ஆகாயம் நிலையானது நேர் சனவரி 20-பெப்ரவரி 19
மீனம் நீர் மாறுபடுவது மறை பெப்ரவரி 19-மார்ச் 21
மேடம் நெருப்பு சுயோட்சை நேர் மார்ச் 21-ஏப்ரல் 20
இடபம் நிலம் நிலையானது மறை ஏப்ரல் 20-மே 21
மிதுனம் ஆகாயம் மாறுபடுவது நேர் மே 21-யூன் 21
கடகம் நீர் சுயோட்சை மறை யூன் 21-யூலை 24
சிம்மம் நெருப்பு நிலையானது நேர் யூலை 24-ஆகஸ்ட் 23
கன்னி நிலம் மாறுபடுவது மறை ஆகஸ்ட் 23-செப்டம்பர் 23
துலாம் ஆகாயம் சுயோட்சை நேர் செப்டம்பர் 23-ஒக்டோபர் 23
விருச்சிகம் நீர் நிலையானது மறை ஒக்டோபர் 23-நவம்பர் 23
தனு நெருப்பு மாறுபடுவது நேர் நவம்பர் 23-டிசம்பர் 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக