மொழிபெயர்

மட்டக்களப்பு பழைய வெளிச்சவீடு

மட்டக்களப்பு பழைய வெளிச்சவீடு அல்லது மட்டக்களப்பு பண்டைய கலங்கரை விளக்கு என்பது பிரித்தானியரால் கட்டப்பட்டு தற்போது எச்சமாகக் காணப்படும் வெளிச்சவீடு ஆகும். இது தற்போது
பாலமீன்மடு, முகத்துவாரத்தில் அமைந்துள்ள வெளிச்சவீட்டிலிருந்து மேற்காக சுமார் 500 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. தற்போதைய வெளிச்சவீடு 1913 இல் கட்டப்படும் வரை அதுவே மட்டக்களப்பின் கலங்கரை விளக்காக இருந்தது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு பழைய வெளிச்சவீடு




தற்போது அடிப்பாகத்துடன் இருந்து மேலாக சுமார் 15 அடி உயரம் வரையில் இதன் எச்சம் மீதமாகவுள்ளது. இதில் செங்கற்களையும் நடுவில் இருப்புச் சட்டத்தையும் காணக்கூடியவாறு உள்ளது. இதனைச் சுற்றி பற்றைக் காடுகளும் குறிப்பாக ஈச்சை மரங்களும் பனை மரங்களும் உள்ளன. தற்போதுள்ள வெளிச்சவீடு போன்று உருளை அமைப்பில் இல்லாமல் சதுரமாக அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை அதன் எச்சங்களில் இருந்து அறியலாம். இது பற்றிய குறிப்பு எதுவும் அப்பகுதியில் இல்லை. வாய்வழி தகவலின்படி, இது தற்போதைய வெளிச்ச வீட்டைவிட உயரம் குறைந்து காணப்பட்டதாகத் தெரிகிறது. தற்போதையது 92 அடி (28 மீட்டர்) உயரமுள்ளது. மேலும், தற்போதையது கடலுக்கு அண்மையில் இருக்க பழையது சற்றுத் தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக