மொழிபெயர்

கிரந்திநாயகம்

கிரந்திநாயகம் என்பது முண்மூலிகைக் குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனமாகும். இது மத்திய அமெரிக்காவைத் தாயகமாகக் கொண்டாலும், தென் மற்றும் தென்கிழக்காசியாவின் பல வெப்ப வலயம் நாடுகளில் இயல்பான வளர்கிறது. இதன் தாவரவியற்பெயர் “ருயெலியா ரியூப்ரோசா” (Ruellia tuberosa) என்பதாகும். இத்தாவர இலைகளை பழுப்பு வசிகரன் போன்ற பட்டாம்பூச்சிகள் உணவாக் கொள்கின்றன.



கிரந்திநாயகம்
உலர்ந்த பழமும் பூவும்
திணை தாவரம்
தரப்படுத்தப்படாத பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத இயுடிகொட்ஸ்
தரப்படுத்தப்படாத அஸ்டேரிட்ஸ்
வரிசை லமியால்ஸ்
குடும்பம் முண்மூலிகை
பேரினம் ருயெலியா
இனம் ரு. ரியூப்ரோசா

இது ஒரு சிறிய ஈராண்டுத் தாவரம் ஆகும். இதில் தடிமனான கிழங்கும், குழாய் வடிவ ஊதா நிறப் பூக்களும் காணப்படும். இதன் காய் 2 செ.மீ நீளமுடையதும், சுமார் 20 விதைகளைக் கொண்ட செசிலிட்டி விதையுறையில் அமைந்திருக்கும். நீரில் அல்லது உமிழ்நீரில் பட்டால், இதன் உலர்ந்த பழம் வெடிக்கும் தன்மையைக் கொண்டிருப்பதால் சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்துவர். நீரில் / உமிழ்நீரில் அமிழ்த்தினால் இது “டப்” என்ற ஒலியுடன் வெடிக்கும். இதனால் இதனை வெடிக்காய் எனவும் மரத்தை வெடிக்காய் மரம் என அழைப்பர்.

கிரந்திநாயகம் ஈரலிப்பான, நிழலுள்ள இடங்களில் காணப்படும். ஆயினும், இது புல்வெளிகளிலும் பாதை ஓரங்களிலும் வளரும். இது பயிர்ச்செய்கை செய்யப்படும் இடங்களிலும் வாழிட சூழலிலும் வளர்வதால், இதனை களையாகக் கருதுகின்றனர். உள்ளூர், ஆயுர்வேத வைத்தியத்தில் இது பயன்படுத்தப்படுகின்றது. சிறுநீர்க்கோளாறு, நீரிழிவு எதிர்ப்பு, காய்ச்சலடக்கி, வலிநீக்கி, வயிற்றுப் புண், கொணோறியா போன்ற சிலவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக