![]() |
உலக முடிவு, இலங்கை |
உலக முடிவு மூன்று பிரதான செங்குத்துப்பாறைகளைக் கொண்டுள்ளது. பெரும் உலக முடிவு உள்ள இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு சிறிய செங்குத்துப்பாறை அமைந்துள்ளது. 1000 அடி (300 மீட்டர்) கீழ்நோக்கிச் செல்லும் இதனை சிறிய உலக முடிவு என அழைப்பர். அதனை அண்மித்து மிகச்சிறிய உலக முடிவு உள்ளது.
இங்கிருந்து தென் பக்கமாக 81 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்து சமுத்திரத்தை தெளிவான காலநிலையில் அவதானிக்கலாம். இது மத்திய மாகாணத்தில் அமைந்திருக்க, இதன் மறுபக்கத்தில் சப்பிரகமுவா மாகாணம் அமைந்துள்ளது. எனவே, இச்செங்குத்துப்பாறையில் இருந்து விழுந்தால் வேறுமாகாணத்தில்தான் போய்ச் சேர முடியும் என்று நகைச்சுவையாகச் சொல்வதுண்டு. அரிதாக இங்கு தற்கொலை செய்து கொள்வதும், தவறிவிழுவதும் நிகழ்வதுண்டு. பனிமூட்டமுள்ள காலங்களில் இங்கிருந்து பார்க்கும்போது மறுபகுதி தெரியாமல் திகில் காட்சியை வழங்குவதாலும், இதற்குமேலும் செல்ல முடியாத 4000 அடி பள்ளம் உள்ளதாலும், உலக முடிவு என்ற பெயரைப் பெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக