மொழிபெயர்

அரபு - இஸ்ரேல் முரண்பாடு

அரபு - இஸ்ரேல் முரண்பாடு  என்பது நடு கிழக்கில், அராபியர்களுக்கும் யூதர்களுக்குமிடையிலான அரசியல் மோதல்களும் பொது பகையுமாகும். இம்முரண்பாட்டுக்கான அடிப்படைக் காரணமாகக் கருதப்படுவது 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட சீயோனிச எழுச்சியும் அராபிய தேசியவாதமுமாகும். 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெளிப்பட்ட இம் முரண்பாடு, 1948 இல் இஸ்ரேல் ஒரு தனி நாடாக உருவாகியதும், முழு அரபு நாடுகள் கூட்டமைப்புக்குமாக விரிவடைந்தது. யூதர்களின் கருத்துப்படி, அவர்கள் குறிப்பிடும் நிலப்பரப்பானது வரலாற்று தாயகமாகவும், அதே நேரத்தில் ஒன்றிணைந்த அராபிய இயக்கத்தின்படி அது வரலாற்று நோக்கில் பாலஸ்த்தீன அராபியர்களுக்கு உரியதென்றும், ஒன்றிணைந்த இஸ்லாமியவாதத்தின்படி அந்நிலப்பரப்பானது இஸ்லாமிய நிலமாகவும் நோக்கப்படுகிறது.

உதுமானியப் பேரரசின் வீழ்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட நிலப்பரப்பை தக்க வைத்துக் கொள்வதற்கான போட்டியுடன் ஏற்பட்ட அரசியல், தேசிய முரண்பாடு இங்கு முக்கிய காரணமாகும். இது பாரிய அளவிலான பிராந்தியத்தில் நிலவிய அரபு - இஸ்ரேல் முரண்பாட்டிலிருந்து உள்ளக இஸ்ரேல் - பாலஸ்த்தீனிய முரண்பாடாக மாற்றம் பெற்றது. 1979 இல் இஸ்ரேலுக்கும் எகிப்துக்கும், 1994 இல் இஸ்ரேலுக்கும் யோர்தானுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன. இருந்தபோதிலும் அரபு நாடுகளும் இஸ்ரேலும் குறிப்பிட்ட நிலப்பரப்பு தொடர்புபட்ட விடயத்தில் ஒத்துப் போகாத தன்மையினையே கொண்டுள்ளன. 

Arab–Israeli conflict

முரண்பாடு பற்றி சமயத்தின் பார்வை

யூத, இஸ்லாமிய, கிறிஸ்த்தவ குழுக்கள் தங்களுக்குள் கருத்து ஒற்றுமை கொள்ளாமைக்குத் தங்கள் சமய வரலாற்றுக் கருத்துகளைத் துணையாகக் கொள்கின்றனர். அரபு-இஸ்ரேல் முரண்பாட்டின் தற்கால வரலாறானது கிறிஸ்த்தவ, யூத, இஸ்லாமிய சமயங்களின் நம்பிக்கைகளால் பெரிதும் தாக்கத்திற்கு உள்ளானது. தெரிவு செய்யப்பட்ட மக்கள் பற்றிய விளக்கம், வாக்களிக்க நாடு மற்றும் தெரிவு செய்யப்பட்ட நகர் – யெரூசலேம் பற்றிய அவர்களின் கொள்கை என்பதற்கேற்ப அவர்களின் விளக்கம் இதில் குறிப்பிடத்தக்கது.

யூதர்களின் புனித நூலாகிய தோராவின்படி கானான் அல்லது இஸ்ரேல் நாடு இஸ்ரேலியர்களுக்கு இறைவனால் வாக்களிக்கப்பட்டது. விவிலியத்தின்படி இஸ்ரேலியர் அதை கி.மு 13 -ஆம் அல்லது 14 -ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. முதலாம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்தனர். கி.பி. 7 -ஆம் நூற்றாண்டு வரை யூதர் இனத்தவர் மிகப்பலரும் அங்கு வாழ்ந்திருந்தனர்.

தியோடர் கெர்ல் 1896 ஆம் ஆண்டு வெளியிட்ட கொள்கை அறிக்கையில் விவிலியம் கூறும் வாக்களிக்கப்பட்ட நாடு தொடர்பான எண்ணக்கருவை எடுத்துக் காட்டினார்.

இஸ்லாமியர்களும் தங்களுக்கு அங்கு குர்ஆனின்படி உரிமை உள்ளதென்கிறார்கள். இஸ்ரேலியர்கள் கூறிப்பிடும் ஆபிரகாமின் இளைய மகனாகிய ஈசாக்குவின் சந்ததியினருக்கே அந்நிலம் வாக்களிக்கப்பட்டது என்பதை மறுத்து, கானான் பூமி ஆபிரகாமின் எல்லா சந்ததியினருக்கும் ஆபிரகாமின் மூத்த மகனாகிய இஸ்மாவேல் உட்பட அவரின் சந்ததியினராகிய அராபியர்களுக்கும் வாக்களிக்கப்பட்டது என இஸ்லாமியர்கள் எதிர்வாதம் செய்கின்றனர். மேலும், இஸ்ரேலியர்கள் புனிதமாகக் கருதும் இடங்களை இஸ்லாமியர்களும் புனிதமாகக் கருதுகின்றனர். பிதாக்களின் குகை, கோவில் மலை, 1400 ஆண்டுகளாக யூத புராதன பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இஸ்லாமிய கட்டுமானங்களான பாறைக் குவிமாடம், அல் அக்சா பள்ளிவாசல் என்பன குறிப்பிடத்தக்கனவாகும். முகம்மது நபி சுவர்க்கம் செல்லும் வழியில் யெரூசலேம் ஊடாகத்தான் சென்றார் என்று இஸ்லாமியர் நம்புகின்றனர். காசா கரையை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கம் முழு பாலஸ்த்தீனமும் (தற்போதைய இஸ்ரேலும் பாலஸ்த்தீனமும் சேர்ந்த பகுதி) இஸ்லாமியர்களாலேயே ஆளப்பட வேண்டுமென்று கருதுகின்றனர்.

கிறிஸ்த்தவ சீயோனியர்கள் இஸ்ரேலை ஆதாரிக்கின்றார்கள். யூதர்களுக்கு அங்கு முதாதையர்கள் மூலமான உரிமை உண்டு என்கின்றனர். கிறிஸ்த்துவின் இரண்டாம் வருகைக்கும் யூதர்கள் இஸ்ரேலுக்கு மீண்டும் வருவதற்கு காரணம் உண்டென்கின்றனர்.

வரலாறு

19 ஆம் நூற்றாண்டு இறுதி - 1948

19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், சீயோனியத்தின் கீழ், அதிகளவாக ஐரோப்பிய யூதர்கள் உதுமான் சுல்தான் மற்றும் அவருடைய பிரதிநிதிகளிடமிருந்து நிலங்களை வாங்கினர். அக்காலத்தில், யெரூசலேம் அந்நகரை சுற்றியிருந்த மதில்களைத் தாண்டி வியாபித்திருக்கவில்லை. மக்கள் தொகையும் சில ஆயிரங்களை மட்டுமே கொண்டிருந்தது. சீயோனியர்களின் கீழ் கிப்புட்சிம் எனப்படும் கூட்டுப் பண்ணைகள் அமைக்கப்பட்டன. டெல் அவீவ் நவீன கால முதலாவது யூத நகராகியது.

முதல் உலக போருக்கு முன்னர், ஏறக்குறைய 500 வருடங்கள் பாலஸ்த்தீனம் உட்பட்ட மத்திய கிழக்கு உதுமானியப் பேரரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. பிற்காலப் பகுதியில் உதுமானியர் மேற்கொண்ட துருக்கி இனத்தவர்களுக்கான ஆதரவு, பேரரசிற்குள் துருக்கியருக்கான முன்னுரிமைப் போக்கு என்பன அராபிரை ஓரங்கட்டியது. உதுமானியரிடமிருந்து விடுதலை கிடைக்கும் என்ற வாக்குறுதியினால் அதிகளவில் யூதர்களும் அராபியர்களும் நேச நாடுகளுக்கு தம் ஆதரவை முதல் உலக போரில் வழங்கினர். இச்சம்பவம் அராபிய தேசியவாதம் பரவ வழிகோலியது.

எகிப்திலிருந்த பிரித்தானிய உயர் ஆணையாளர் சேர் ஹென்றி மக்மகோன் இரகசிய தொடர்பு மூலம் குசைன் அரபு புரட்சியை உதுமானிய பேரரசுக்கு எதிராக மேற்கொள்ள வைத்தார். இச் செயல் உதுமானிய பேரரசு முதல் உலக போரில் பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் எதிராக ஜேர்மனியுடன் அணி சேர வைத்தது. போரில் பிரித்தானியாவிற்கு அராபியர்கள் உதவினால், பிரித்தானிய அரசாங்கத்தினால் உதுமானிய பேரரசின் பாலஸ்த்தீனம் உட்பட அராபிய மாகாணங்கள் அராபிய அரசாக மாற உதவி செய்யப்படும் என மக்மகோன் உறுதியளித்தார். லாரன்ஸ் மற்றும் குசைனின் மகன் பைசாலினால் நடத்தப்பட்ட அரபு புரட்சி வெற்றி பெற்று, பிரித்தானியா பல பகுதிகளை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.

போரை வெல்ல யூதர்களின் உதவி அவசியம் என்றுணர்ந்த பிரதமர் டேவிட் லொயிட் ஜோர்ச் உட்பட்டவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில், 1917 இல் பிரித்தானியா வெளியிட்ட பல்போஃர் பிரகடனம் யூதரின் தேசிய தாயகமாக பாலஸ்த்தீனம் இருக்கும் என்றது. இது அரபு உலகை கவலை கொள்ளச் செய்தது. போரின் பின்னர், தற்போதைய இஸ்ரேல், ஜோர்தான், மேற்குக் கரை, காசா என்பன பிரித்தானியாவின் ஆட்சியின் கீழ் பிரித்தானிய பாலஸ்த்தீனமாக இருந்தன.

அக்காலகட்டத்தில் யூதர்களுடைய குடியேற்றம் பாலஸ்த்தீனத்தில் அதிகரிக்கத் தொடங்கியது. 1931 இல் 17 வீதமாகவிருந்த யூதர்களின் எண்ணிக்கை 1922 இல் 6 வீதமாக அதிகரித்தது. ஜேர்மனியில் நாசிகள் அதிகாரத்திற்கு வந்ததும் யூதர்களின் குடியேற்றம் அதிகரிக்கத் தொடங்கியது. இது பாலஸ்த்தீனத்தில் யூதர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தது. தொடர்ச்சியான யூதர்களின் வரவு பாலஸ்த்தீன அராபியர்களை அவர்கள் நாட்டிற்கும், இன அடையாளத்திற்கும் அச்சுறுத்தலாக பார்க்கத் தூண்டியது. நிலம் வாங்குதல், யூத நிறுவனங்களில் அராபியர்களை வேலைக்கு அமர்த்தாமை என்பன பாலஸ்த்தீன அராபியர்களை கோபம் கொள்ளச் செய்தது. 1920 தொடக்கத்தில் ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறலாயின. பாலஸ்த்தீன அராபியர்கள் தாங்கள் அநீதியாக நடாத்தப்படுவதாக எதிர்ப்புத் தெரிவித்தனர். இது வன்முறைக்கும் காரணமாகியது. பங்குனி 1920 இல் முதலாவது வன்முறை டெல் ஹாயில் வெடித்தது. பின் குழப்பம் யெரூசலேமிற்கும் பரவியது. 1922 இல் வின்சன்ட் சார்ச்சில், யூத அரசு அமைத்தல் என்பதை மறுத்து அராபியர்களை மீள் நம்பிக்கையூட்ட முயன்றார். பெத்தார் அரசியல் கட்சி 1929 இல் மேற்கு சுவரில் நடாத்திய ஆர்ப்பாட்டம் குழப்பத்தை ஏற்படுத்த முழு பாலஸ்த்தீனத்திற்கும் குழப்பம் பரவியது. அராபியர்கள் 67 யூதர்களை எபிரோனில் படுகொலை செய்தனர்.

குழப்பம் ஆரம்பித்த வாரத்தில் குறைந்தது 116 அராபியர்களும் 133 யூதர்களும் கொல்லப்பட்டு 339 பேர் காயப்பட்டனர்.

1930 களில் யூத எதிர்ப்பு, பிரித்தானிய எதிர்ப்பு ஆயதக்குழு கருப்புக் கை எனும் பெயரில் உருவாக்கப்பட்டது. 1935 இல் ஆயதப் பயிற்சி பெற்ற 200 – 800 ஆண்கள் இருந்தனர். இவர்கள் யூத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். பதட்டமானது 1936 இல் பாலஸ்த்தீனத்தில் 1936–1939 அராபிய புரட்சிக்கு வித்திட்டது.

அராபியர்களின் அழுத்தத்தினால், பிரித்தானியா பாலஸ்த்தீனத்திற்கான யூத குடியேற்றத்தை அதிகளவில் குறைக்கலாயிற்று. இதனால் யூதர் சட்டத்திற்கு புறம்பாக குடியேறினார்கள். இது பிரதேசத்தில் மேலும் பதட்டத்ததை அதிகரித்தது. பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனை தீராதிருக்க, புதிதாகத் தோன்றிய ஐக்கிய நாடுகள் அவையிடம் பிரித்தானிய உதவி கோரியது. 15 மே 1947 இல், 11 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட சபையை (UNSCOP) ஐ.நா ஆரம்பித்தது. சபை நடுநிலையாக இருக்க வேண்டும் எனும் நோக்கில் பெரிய நாடுகள் அதில் அங்கம் வகிக்கவில்லை. 5 வாரங்களின் பின், யூதர்களுக்கும் அராபியர்களுக்கும் என வெவ்வேறு நிலப்பகுதிகள் பிரிக்கப்பட வேண்டுமென கண்டு கொள்ளப்பட்டது. ஐ.நாவின் பொது சபையின் 181 தீர்மானமான 'இரு-நாடு தீர்வு' 1947 நவம்பரில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு 33 நாடுகள் விருப்பு வாக்களித்தும் 13 நாடுகள் எதிர் வாக்களித்தும் 10 நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்தன. அரபு லீக்கின் அங்கத்துவ நாடுகள் எதிராக வாக்களித்தன. இது இவ்வாறு இருக்க, அராபியர்களும் யூதர்களும் முக்கிய இடங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க பகிரங்கமாக சண்டை பிடித்துக் கொண்டிருந்தனர். இருதரப்பினராலும் மேசமான பாரிய அசம்பாவிதங்கள் சில நிகழ்த்தப்பட்டன.

பிரித்தானிய காலணிக்கம் முடிவதற்கு முன், ஐ.நாவினால் யூத அரசுக்கென ஒதுக்கிய பகுதிகள் முழுவதிலும் யூத ஆயுத படையான ஹகானா தாக்குதல்களை நடாத்தியது. அது பல அகதிகள் திபேரியா, கய்ஃபா, சபாட், பெய்சான், யாப்பா போன்ற நகர்களில் குவிய வழிகோலியது.

1948 தொடக்கத்தில், பிரித்தானியா பாலஸ்த்தீனத்தைவிட்டு மே 14 இல் வெளியேறும் என அறிவித்தது. அதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ஹரி எஸ் ரூமன் ஐ.நா பொறுப்புத் தன்மை பற்றி முன்மொழிந்தார்.

14 மே 1948 இல், பிரித்தானியா நிர்வாகம் உத்தியோக பூர்வமாக முடிந்து, படைகள் வெளியேறு முன், இஸ்ரேல் அதன் சுதந்திரப் பிரகடணத்தையும் ஆட்சியுடைமையையும் எல்லைகளை குறிக்காது வெளியிட்டது. அடுத்த நாள், அரபு லீக் 'இரண்டு-நாடு தீர்வு' என்பதை மறுத்து ஐ.நாவிற்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியது. அதே நாளில் எகிப்து, லெபனான், சிரியா, யோர்தான், ஈராக் படைகளில் இஸ்ரேல் மீதான படையெடுப்பு அராபிய-இஸ்ரேல் போரை ஆரம்பித்து வைத்தது. புதிதாக உருவெடுத்த இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் அராபிய லிக் நாடுகளின் படைகளை பின் வாங்க வைத்து, ஐ.நா பிரித்த எல்லைக் கோட்டிற்கு அப்பால் தன் எல்லைகளை விரிபுபடுத்தியது. 1948 மார்கழியில் யோர்தான் ஆற்றின் மேற்கு வரை பல பகுதிகளை இஸ்ரேல் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மேற்குக் கரை யோர்தானின் கட்டுப்பாட்டிலும், காசா எகிப்தின் கட்டுப்பாட்டின் கீழும் இருந்தன. இம் முரண்பாடு 713,000 பாலஸ்த்தீன அராபியர்கள் அகதிகளாக்கியது. யூத ஆயுதக் குழுக்களான இர்குன், ஸ்டென் குழு ஆகியவற்றின் அராபியர்களுக்கெதிரான படுகொலைகள் பாலஸ்த்தீனர்களை இடம் பெயரச் செய்தது. 1949 இடைக்கால சமாதான உடன்பாடு போரை முடிவுக்கு கொண்டு வந்தது.

1949–1967

ஐ.நா. தீர்வு திட்டம் 181 இற்கு முன்னமும் இஸ்ரேலின் சுதந்திர நாட்டு பிரகடனத்திற்கு முன்னமும், சில அராபிய நாடுகள் அந்நாடுகளில் உள்ள யூதர்களுக்கெதிராக ஓரங்கட்டலை மேற்கொண்டனர். 1948 அரபு-இஸ்ரேல் முரண்பாட்டைத் தொடர்ந்து அவ் யூதர்களின் நிலை மோசமாகியது. 1947 மார்கழியில் அரபு உலகில் யூத சமூகத்தினருக்கெதிரான பாரிய யூத எதிர்ப்பு உருவாகியது. குறிப்பாக சீரியாவிலும் அதெனிலும் மிக மோசமாகி நூற்றுக் கணக்கில் மரணமும் உடற் சேதமும் ஏற்படலாயின. 1948 நடுப்பகுதியில் அராபிய நாடுகளில் இருந்த ஏறக்குறைய முழு யூதர்களும் தாக்குதலுக்குள்ளாகி அவர்களின் அந்தஸ்து பறிக்கப்பட்டது. அரபு-இஸ்ரேல் முரண்பாட்டின் விளைவு நீண்ட காலமாக அராபிய நாடுகள் மற்றும் இஸ்லாமிய நாடுகளில் இருந்த யூதர்களை அரசியல் பணயக் கைதிகளாக்கி, அவர்கள் அந்நாடுகளைவிட்டு வெளியேற நிர்ப்பந்தித்தது. லிபியாவில் யூதர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்பட்டது. ஈராக்கில் உடமைகள் பறிக்கப்பட்டன. எகிப்து அதிகளவான யூதர்களை 1956 இல் வெளியேற்றியது. அல்ஜீரியா பிரஜாவுரிமையை பறித்தது. அதிகளவானோர் அரசியல் காரணங்களினாலும் சிலர் தாயக நோக்கோடும் வெளியேறினர்.

1948–1952 காலப் பகுதியில், 700,000 மேற்பட்ட யூதர்களில் ஏறக்குறைய 285,000 பேர் அராபிய நாடுகளிலிருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர்.

1960 களில் பிற்பகுதியில் 850,000 இற்கு மேற்பட்ட யூதர்கள் சில 10 அராபிய நாடுகளிலிருந்து பிறந்த இடத்தைவிட்டு வெளியேறினர். இன்று 7,000 இற்கு குறைவானோர் அந்நாடுகளில் உள்ளனர். சொத்துக்கள் நட்டஈடு இன்றி பறிமுதல் செய்யப்பட்டன. இன்றைய இஸ்ரேலின் சனத்தொகையில் 41 வீதமானோர் இடம்பெயர்ந்தோரும் அவர்களின் வாரிசுகளுமாவர்.

இஸ்ரேலின் 1948 சுதந்திரப் போர் வெற்றியின் விளைவு மறுபக்கத்தில் அகப்பட்ட அராபியர்கள் இஸ்ரேலின் புகமுடியாது சொந்த இடத்தை இழக்கச் செய்தது. அதுபோலவே, மேற்குக் கரையிலும் காசாவிலும் அகப்பட்ட யூதர்கள் வீட்டையும் சொத்துக்களையும் விட்டுவிட்டு இஸ்ரேல் வரவேண்டியதாயிற்று.

1956 இல் எகிப்து டிரான் நீரிணையை இஸ்ரேல் கப்பல் போக்குவரத்திற்கு மூடி, அகாஃபா குடாவையும் இஸ்ரேலுக்கு நிறுத்திவிட்டது. பின்னர் சுயஸ் கால்வாயை தேசிய உடமையாக்கி இஸ்ரேல் கப்பல் போக்குவரத்திற்கு தடைவிதித்தது.

இதற்கு பதிலடியாக பிரித்தானிய, பிரான்ஸ் உதவியுடன் இஸ்ரேல் சினாய் தீபகற்பத்தை ஆக்கிரமித்தது. சுயெஸ் கால்வாய் சண்டையில் காசா, சினாய் தீபகற்பத்தை இஸ்ரேல் கைப்பற்றிக் கொண்டது. ஐ.நாவும் அமெரிக்காவும் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தன. இஸ்ரேல் எகிப்தின் பகுதிகளில் இருந்து விலகிக் கொள்ள உடன்பட்டது. எகிப்தும் இஸ்ரேல் போக்குவரத்திற்கு வழிவிட்டு சினாய் தீபகற்பத்தை இராணுவமற்ற பிரதேசமாக்கியது. இராணுவமற்ற பிரதேசத்தை கண்கானிக்க ஐ.நா. அவசரகால படை நிறுத்தப்பட்டது. ஐ.நா. அவசரகால படை எகிப்தின் பகுதிகளில் மட்டும் இருந்தனர். இஸ்ரேல் தன் பகுதியில் ஐ.நா. அவசரகால படையை அனுமதிக்கவில்லை.

பலஸ்தீன விடுதலை இயக்கம் 1964 இல் உருவாக்கப்பட்டது. இது சீயோனியர்களையும் ஏகாதிபத்தியையும் அழிப்பதுதான் பாலஸ்த்தீன விடுதலை எனும் கொள்கையினைக் கொண்டது.

19 மே 1967 இல் எகிப்து ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிவிட்டு, 100,000 படையினரை சினாய் தீபகற்பத்தில் நிறுத்தியது. மீண்டும் டிரான் நீரிணையை இஸ்ரேலுக்கு மூடிவிட்டது.

19 மே 1967 இல் யோர்தான் எகிப்துடன் பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது. ஐ.நா கண்காணிப்பாளர்களை அனுப்பிய எகிப்து ஐ.நா. எல்லையைத் தாண்டி தென் இஸ்ரேலிய எல்லைக்கு முன்னேறியது. 5 ஜூன், இஸ்ரேல் எகிப்தை தாக்கியது. இஸ்ரேலிய விமானப்படையின் எதிர்பாராத தாக்குதலில் அதிகளவு எகிப்து வான்படை அழிவுற்றது. இஸ்ரேல் யோர்தான், சிரியா, ஈராக் வான் படைகளை அழிக்கத் தொடங்கியது. இஸ்ரேலின் இத்தாக்குதல் ஆறு நாள் போரில் அது வெற்றியடைய முக்கிய காரணமாகியது. போரின் முடிவில் இஸ்ரேல் சினாய் தீபகற்பம், காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம், சேபா பண்னைகள், கோலான் குன்றுகள் என்பனவற்றை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது. போரின் விளைவு அப்பிரதேசத்தின் புவியியல் அரசியலில் தாக்கம் செலுத்தியது. 

1967–1973

ஆகஸ்து 1967 இல், அராபிய தலைவர்கள் இஸ்ரேல் பற்றிய அராபியர் நிலைப்பாடுபற்றி கலந்துரையாடினார்கள். அவர்கள் இஸ்ரேல் அரசுக்கு அங்கீகாரம் இல்லை, அதனுடன் சமாதானம் இல்லை, பேச்சுவார்த்தை இல்லை என்ற 'மூன்று இல்லை(கள்)' என்ற முடிவுக்கு வந்தனர்.

1967 இல், சினாய் தீபகற்பத்தை இஸ்ரேல் கைவிட்டுவிடும் நோக்காகக் கொண்டு தேய்வுப் போரை எகிப்து ஆரம்பித்தது. 1970 இல் கமால் நாசீரின் மரணத்துடன் அப்போர் முடிவுக்கு வந்தது.

6 அக்டோபர் 1973 இல் சிரியாவும்,எகிப்தும் எதிர்பாராத தாக்குதலை யூதர்களில் புனித நாளாகிய யோம் கிப்பூரில் ஆரம்பித்தது. இஸ்ரேல் படைகள் தயாரற்ற நிலையிலிருந்து மீள 3 நாட்கள் எடுத்தது. யோம் கிப்பூர் போர் அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் மறைமுகமாக ஒன்றையொன்று எதிர்க்க வழியமைத்தது. இஸ்ரேல் போரை தீவிரப்படுத்த, சோவியத் ஒன்றியம் இராணுவ நடவடிக்கை பற்றி அச்சுறுத்தல் விடுத்தது. அமெரிக்காவின் அணு ஆயுத போர் பற்றிய முன்னெச்சரிக்கை 25 அக்டோபரில் போர் நிறுத்தத்திற்கு வழிவிட்டது.

1974–2000

எகிப்து
1970 களின் பிற்பகுதியில் டேவிட் முகாம் உடன்பாட்டைத் தொடர்ந்து இஸ்ரேலும் எகிப்தும் சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. அதனால், சினாய் தீபகற்பம் எகிப்துக்கு கையளிக்கப்பட, காசா இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஓப்பந்தம் மூலம் இஸ்ரேலின் கப்பல் போக்குவரத்தும் அப்பகுதியில் சுமூகமானது.

யோர்தான்
1994 இல் இஸ்ரேலும் யோர்தானும் சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இவற்றுக்கிடையேயான முரண்பாடு ஏறக்குறைய 18.3 பில்லியன் டொலர்களை இழக்கச் செய்தது. சமாதான உடன்படிக்கை மூலம் யோர்தான் இஸ்ரேலுடன் உறவு ஏற்படுத்திய எகிப்துக்கு அடுத்த இரண்டாவது அராபிய நாடாகியது.

ஈராக்
1948 இலிருந்து இஸ்ரேலும் ஈராக்கும் ஜென்ம விரோதிகளாகவே காணப்பட்டனர். 1948 ஆம் ஆண்டு நடந்த அராபிய-இஸ்ரேலிய போரில் ஈராக் தன் படைகளை அனுப்பியது. பின்னர், 1967ஆம் ஆண்டு நடந்த ஆறு நாள் போரிலும், 1973 ஆம் ஆண்டு நடந்த யோம் கிப்பூர் போரிலும் எகிப்துக்கும் சிரியாவிற்கும் உதவியது.

ஜூன் 1981 இல், ஒபரா இராணுவ நடவடிக்கை மூலம் ஈராக் புதிதாக நிர்மானித்த அணு உலைகளை இஸ்ரேல் தாக்கியழித்தது.

1991 வளைகுடா போரின்போது, ஈராக் 39 ஸ்கட் ரக ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவியது. ஆயினும் அமெரிக்காவின் வேண்டுகோளின்படி இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தாமல், போர் வேறுவடிவம் எடுக்கவிடாமல் மௌனமாக இருந்தது.

லெபனான்
யோர்தானில் 1970 இல் ஏற்பட்ட உள்ளூர் கலவரத்தைத் தொடர்ந்து, யோர்தான் மன்னர் ஹசைன் பாலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை வெளியேற்றினார். இதனால் ஆயிரக் கணக்கான பாலஸ்த்தீன விடுதலை இயக்க உறுப்பினர்கள் லெபனானில் தஞ்சமடைந்தனர். அங்கிருந்து இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். 1981 இல் சிரியா பாலஸ்த்தீன விடுதலை இயக்க உதவியுடன் ஏவுகணைகளை லெபனானில் நிறுத்தியது. 1982 இல் லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இரு மாதங்களில் பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் அங்கிருந்து வெளியேறும் உடன்பாட்டிற்கு வந்தது.

1983 இல் இஸ்ரேலும் லெபனானும் போர் நிறுத்தத்திற்கு உடன்பட்டனர். சிரியாவின் அழுத்தத்தினால் ஒப்பந்தம் 1984 இல் செல்லுபடியற்றதாகியது. முரண்பாட்டின் அளவு குறைந்ததும் 1985 இல் இஸ்ரேல் லெபனானின் 15 கி.மி அகல பரப்பளவில் இருந்து பின்வாங்கியது. 1993 மற்றும் 1996 ஆம் ஆண்டுகளில் ஹிஸ்புல்லா ஆயுத குழுவினருக்கு எதிராக இஸ்ரேல் பாரிய இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டது. சிரியாவுடனான சமாதான உடன்படிக்கை திட்டத்தின்படி, 2000 ஆம் ஆண்டில் தென் லெபனான் பகுதிகளிலிருந்த பாதுகாப்பு வலயங்களை இஸ்ரேல் அகற்றியது.

2006 இல் ஹஸ்புல்லாவின் எல்லை தாண்டிய தாக்குதல்களைத் தொடர்ந்து தென் லெபனானிலிருந்த ஹஸ்புல்லாவின் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதும் 2006 லெபனான் போர் உருவாகியது. 34 நாட்கள் நீடித்த இப்போரின் விளைவாக, தடுப்பு வலயம் தென் லெபனானில் உருவாக்கப்பட்டது. ஹிஸ்புல்லாவின் பின்வாங்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. அமைதிப் படைக்கு லெபனானின் பகுதிகளை இஸ்ரேல் கையளித்தது. இரு தரப்பும் தமக்கே வெற்றியென அறிவித்தன.

பாலஸ்த்தீனம்
1970 களில் பாரியளவில் சர்வதேச பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. லெட் விமான நிலைய படுகொலை, முனிச் ஒலிம்பிக் படுகொலை, என்டபே பயணக்கைதிகள் ஆகியன குறிப்பிடத்தக்கன.

1987 மார்கழியில் முதலாவது இன்டிபாடா ஆரம்பித்தது. ஜபய்லா அகதிகள் முகாமிலிருந்து ஆரம்பித்து காசா, மேற்குக் கரை, கிழக்கு யெரூசலேம் வரை பரவியது. பொது ஆர்ப்பாட்டத்தோடு இஸ்ரேல் பொருட்களுக்கெதிரான புறக்கணிப்பு, வீதி மறியல், இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் மீது கல்லெறிதல் என்பன இடம் பெற்று சர்வதேச கவனத்தைப் பெற்றது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூடு, பாரிய கைது போன்ற பதில் நடவடிக்கைகள் சர்வதேச விமர்சனத்திற்குள்ளானது. அதுவரை பாலஸ்த்தீன மக்கள் தலைமையாக கருதப்படாத பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை அங்கீகரித்து பயங்கரவாத செயல்களை கைவிட்டதும் பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்பட்டது.

1993 மத்தியில் இஸ்ரேலிய, பாலஸ்த்தீன பிரதிநிதிகள் நோர்வே நாட்டின் தலைநகரான ஒஸ்லோவில் சமாதான பேச்சுவார்த்தைகளைத் தொடங்கினர். இதன் விளைவாக இஸ்ரேலும் பாலஸ்த்தீன விடுதலை இயக்கமும் செப்டெம்பர் 1993 இல் ஒஸ்லோ ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இஸ்ரேல் பாலஸ்த்தீன விடுதலை இயக்கத்தை பாலஸ்த்தீன மக்களின் பிரதிநிதிகளாக ஏற்றுக் கொண்டனர். பாலஸ்த்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலிய அரசின் இருப்பை ஏற்றுக் கொண்டு பயங்கரவாத செயற்பாடுகள் மற்றும் வன்முறைகளை விட்டு, அதன் விருப்பமாகிய இஸ்ரேலின் அழிவு என்ற கொள்கையை கைவிட்டது.

1995 இல் ஒஸ்லோ 2 என்ற உடன்படிக்கை கைச்சாத்திட்டப்பட்டது. இதன்படி மேற்குக் கரையில் அ, ஆ, இ என்ற பிரிவுகள் காணப்பட்டன. பிரிவு அ பாலஸ்த்தீனத்தினத்தின் முழு சிவில் கட்டுப்பாட்டில் இருக்கும், அதன் உள்ளக பாதுகாப்பிற்கு பாலஸ்த்தீனியர்களே பொறுப்பானவர்கள்.

2000–2009

இரண்டாவது இன்டிபாடா பாலஸ்த்தீனத்துடனான அரசியல் உறவு பற்றி இஸ்ரேலை மீள யோசிக்க வைத்தது. தொடர்ச்சியான தற்கொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து, இஸ்ரேல் இராணுவம் ஆறு நாள் போரின் பின் பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டது.

இஸ்ரேல் மேற்குக் கரையின் பல பகுதிகளை மீளவும் கைப்பற்றிக் கொண்டது. இருந்தபோதிலும், 2008 இல் மெதுவாக அதிகாரத்தினை பாலஸ்த்தீன அதிகார சபைக்குக் கையளித்தது.

இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் சரோன் 2003 இல் காசாவிலிருந்து பின்வாங்குதல் என்ற முடிவை ஒருதலைப்பட்சமாக எடுத்தார். இது 2005 இல் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜூன் 2006 இல் ஹமாஸ் இஸ்ரேலிய படைவீரர் கிலாத் ஷாலித்தை கடத்தியது அச்சந்தர்ப்பத்தில் இரு படைவீரர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்ட படைவீரைத் தேடி இஸ்ரேல் படையினர் இராணுவ நடவடிக்கையினை மேற் கொண்டனர். 2011 இல் அப்படைவீரர் 1027 பாலஸ்த்தீன கைதிகள் பறிமாற்றத்தின்போது விடுதலை செய்யப்பட்டார்.

ஜுலை 2006 இல் ஹிஸ்புல்லா லெபனானைக் கடந்து தாக்கியதில் 8 இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டும் இருவர் கடத்தப்பட்டனர். இது 2006 லெபனான் போருக்கு வித்திட்டு, லெபனானில் பெரும் அழிவு ஏற்பட்டது. ஐ.நா. அணுசரனையுடன் ஆகஸ்து 2006 இல் போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதில் பெருமளவு லெபனானிய பொதுமக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்தனர். லெபனானின் உட்கட்டமைப்பு பாரதூரமாக சேதத்திற்குள்ளானது. ஏறக்குறைய ஒரு மில்லியன் லெபனானிய பொதுமக்களும் 300,000 – 500,000 இஸ்ரேலிய பொதுமக்களும் இடம் பெயர்ந்தனர்.

காசா உள்ளூர் போரின் பின், பதவிடமிருந்து ஹமாஸ் காசாவை கைப்பற்றியது. இதனால் எல்லையில் இஸ்ரேல் கட்டுபாடுகளை விதித்தது. 2007 இல் இருந்து இஸ்ரேலும் எகிப்தும் அங்கு பொருளாதாரத் தடையினை ஏற்படுத்தின.

2007 இல் இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை மூலம், வடகெரியாவின் உதவியுடன் சிரியாவில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த அணு ஆலையை தாக்கியழித்தது. 2003 இலும் சிரியாவிலிருந்த ஆயுதக் குழுவின் தளத்தை தாக்கியமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல்-ஹமாசுக்கிடையிலான உடன்படிக்கை 2008 டிசம்பரில் முடிவுற்றது. இதற்கு இருதரப்பினருமே காரணம். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் கடத்தல் சுரங்கங்கள் மீது தாக்குதல் நடத்தியது. பதிலாக ஹமாஸ் 60 இற்கு மேற்பட்ட ஏவுகணைகளால் இஸ்ரேலிய நகரங்களைத் தாக்கியது. விளைவு இஸ்ரேல் இராணுவ நடவடிக்கை மேற்கொள்ள வைத்தது. மனித உரிமை அமைப்புக்கள் இரு தரப்பும் போர்க் குற்றம் புரிந்ததாக குற்றஞ்சாட்டின.

இஸ்ரேல் படையினருக்கும் காசாவுக்கு உதவி செய்ய முனைந்த ஆர்வலர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டு, 9 ஆர்வலர்கள் கொல்லப்பட்டும் 7 படைவீரர்கள் காயமடைந்தனர்.

2010 - தற்போது வரை

ஹமாஸ் தலைமையிலான 13 ஆயுதக்குழுக்களின் பயங்கரவாத செயற்பாடுகள் பேச்சுவார்த்தையை குழப்பிவிட்டன. இஸ்ரேலியர்கள் மீதான தாக்குதல்கள் 2010 இற்குப் பின்னர் அதிகரித்துக் காணப்பட்டது. இதில் ஹமாசின் ஏவுகணைத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை.

முரண்பாட்டினால் ஏற்பட்ட செலவு

தந்திரோபாய மதிநுட்ப குழுவின் அறிக்கையின்படி, 1991–2010 வரையான மத்திய கிழக்கு முரண்பாட்டினால் ஏற்பட்ட சந்தர்ப்பச்செலவு 12 ரில்லியன் டொலர்கள் என கூறப்படுகின்றது.

Advertisement

தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 (கனடா)

தமிழின அழிப்பு நினைவு நாள் என்பது ஒவ்வொரு வருடமும் மே 18 அன்று கனடாவில் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும்.

தமிழின அழிப்பு நினைவு நாள்

இலங்கை யுத்தத்தின் இறுதிச்சமர் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் இடம்பெற்று, பல தமிழர்கள் கொல்லப்பட 18 மே 2009 அன்று முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள், மே 18 தமிழர் படுகொலை நாள், தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் போன்ற பெயர்களின் இலங்கை உட்பட இலங்கைத்தமிழர் வாழும் நாடுகளில் அத்தினம் நினைவுகூறப்பட்டு வந்தது. அதன் 13 வது நினைவு தினம் 18 மே 2022 அன்றும் நினைவுகூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஐ தமிழின அழிப்பு நினைவு நாள் என அறிவித்தது.

ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக (Tamil Genocide Remembrance Day, Journée de commémoration du génocide tamoul) ஆக்குவதற்கான பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி 18 மே 2022 அன்று இப்பிரேரணையை முன்வைத்திருந்தார். இதற்கு கனேடிய அரசியல் கட்சிகளான லிபரல் கட்சி, பழைமை வாத கட்சி, கியூபெக் புளக் கியூபெக்குவா, புதிய குடியுரிமை கட்சி, பசுமை கட்சி என்பன ஆதரவு தெரிவித்திருந்தன.

நாடாளுமன்றம் ஒன்று இவ்வாறு தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் ஒன்றை அறிவித்தது இதுவே முதல் முறை. இதற்கு இலங்கை அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 

சோழர் கொடி

சோழர் கொடி என்பது தமிழ் சோழ அரச வம்சத்தால் பயன்படுத்தப்பட்டது. இது புலிக்கொடி எனவும் அறியப்பட்டது. புலி அல்லது பாயும் புலியானது சோழர்களின் அரச சின்னம் என்ற சிறப்புடன் காணப்பட்டதுடன் நாணயங்கள், அரச முத்திரைகள் மற்றும் பதாகைகளில் சித்தரிக்கப்பட்டது. உத்தம சோழனின் நாணயங்களில், பாண்டியரின் இரட்டை மீனுக்கும் சேரரின் வில்லுக்கும் இடையில் புலி அமர்ந்திருப்பதாக அமைக்கப்பட்டிருந்தது. 12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழரால் தொகுக்கப்பட்ட பெரிய புராணத்தில் சோழரின் கொடி பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

சோழர் கொடி


பெரிய புராணம் பின்வருமாறு சோழர் கொடி பற்றிக் குறிப்பிடுகிறது:

பாட்டியற் றமிழுரை பயின்ற வெல்லையுட்

கோட்டுயர் பனிவரைக் குன்றி னுச்சியிற்

சூட்டிய வளர்புலிச் சோழர் காவிரி

நாட்டியல் பதனையா னவில லுற்றனன்.

சோழர் கொடி புலிச் சின்னம் பொறித்த கொடியாக இருந்தது என வரலாற்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றபோதும், இது இப்படித்தான் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே, தற்காலத்தில் சோழர் கொடியும் கற்பனையின் அடிப்படையில் புலியை மையமாகக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கொடியும் தமிழீழக் கொடியும் சோழர் கொடியின் அடிப்படையில் புலியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால், இது முழு புலி உருவம் அற்று கர்ச்சிக்கும் புலித்தலையுடன் அமைந்துள்ளது.

புலிச் சின்னம் பொறித்த பிற கொடிகள் பிற சூழலிலும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அமைந்த சில கொடிகள் பின்வருமாறு:

  • கூட்டாட்சி மலாய் அரசுகளின் கொடி – மலேசியா  (1895–1946)
  • மலேசியா கூட்டாட்சி நிலப்பரப்பு  கொடி
  • புத்ராஜாயா – மலேசியா  
  • பிறிமோர்சுக்கி நிலப்பரப்பு கொடி -  உருசியா
  • இர்கூத்ஸ்க் ஒப்லாஸ்து கொடி -  உருசியா
  • நாம் தமிழர் கட்சிக் கொடி
  • சுதந்திர இந்திய படைப்பிரிவு (1941 – 1945)
  • போமோசாக் குடியரவு - தாய்வான் (1895)
  • கோட்டை இராச்சியம் (1412 – 1597)

பாலைப் பூங்கா

பாலைப் பூங்கா (Palai Park) என்பது தமிழ்நாட்டிலுள்ள இரு மரபுவழி மரபுரிமை பூங்காக்களில் ஒன்றாகும். மற்றையது சேலத்திலுள்ள குறிஞ்சிப் பூங்காவாகும். இப்பூங்கா தோட்டக்கலை மற்றும் தோட்டப்பயிர்கள் துறையினால் பராமரிக்கப்படுகின்றது. இதன் பெயர் பண்டைய சங்க இலங்கியம் குறிப்பிட்ட ஐந்து தமிழர் நிலைத்திணைகளில் ஒன்றாகிய மணலும் மணல்சார்ந்த வறட்சியான சூழலைக் கொண்ட பாலையில் இருந்து பெறப்பட்டது. இப்பூங்கா தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் (TANHODA) உருவாக்கப்பட்டது. முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டது.

பாலைப் பூங்கா

இதில் ஆர்வமூட்டக்ககூடியான என்று சில அசம்சங்கள் பாலை மரபுவழி மரபுரிமை பூங்காவில் உள்ளன. மண்மேடுகள், புல்வெளி, சிறிய குளம், பாலைவனச்சோலை, பயிர் வளர்ப்பிடம், சிறார் பூங்கா, மேடை, கோடை இல்லம், உணவிடம் ஆகியவற்றை முக்கியமாகக் குறிப்பிடலாம்.


வகை

சூழல்சார் பூங்கா

அமைவிடம்

இராமநாதபுரம், தமிழ்நாடு

ஆள்கூறு

9.313741°N 78.831371°E

பரப்பு

10 கெக்டயர்

திறக்கப்பட்டது

2015

உரிமை

தமிழ்நாடு அரசாங்கம்

மனிதப் பாலுறவுச் செயற்பாடு

மனிதப் பாலுறவுச் செயற்பாடு, மாந்தப் பாலுறவுச் செய்கை அல்லது மனிதப் பாலுறவு நடத்தை என்பது மனிதருடைய மாந்தப் பாலுணர்வியல் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட அனுபவம் பற்றிய நடத்தையாகும். மனிதர் பல்வகையான பாலியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். தனியாக சுய இன்பம் காண்பதிலிருந்து மற்ற ஒருவருடன் பாலுறவு, உட்புகாப் பாலுறவு, வாய்வழிப் பாலுறவு போன்ற பல பாலியல் செயற்பாடுகளில் ஈடுபடும் நடவடிக்கைகள் இதனுள் அடங்கும். பாலுறவுச் செயற்பாடுகள் பொதுவாக பாலியல் தூண்டல், தூண்டலுக்குட்பட்ட நபரின் உளவியல் மாற்றங்கள் ஆகியவற்றின் விளைவாக இருக்கும். பாலியல் செயற்பாடு பாலியல் தூண்டலைத் தொடர்ந்து ஏற்படலாம்.

மனிதப் பாலுறவுச் செயற்பாடு


மாந்தப் பாலுறவுச் செயற்பாடு சமூக, புலனறிவு, உணர்ச்சிவயப்பட்ட உறவு, உடலியல், நடத்தையியல் காரணிகளைப் கொண்டிருக்கும். அவை தனிப்பட்ட இணைவு, உணர்வகளைப் பகிர்தல், இனப்பெருக்கத் தொகுதியின் உடலியங்கியல், பாலியல் தூண்டல், பாலுறவு, பாலியல் நடத்தை போன்ற வடிவங்களைக் கொண்டிருக்கும்.

சில கலாச்சாரங்களில், பாலியல் செயற்பாடுகள் திருமணத்தில் மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்க, திருமணத்திற்கு முன்னைய உடலுறவு, திருமணமாகா உடலுறவு என்பன விலக்கப்பட்டுள்ளன. சில பாலியல் செயற்பாடுகள் சட்டத்திற்குப் புறம்பானவையாகவுள்ளன. பாலுறவுச் சம்மத வயதிற்கு கீழ் உள்ளவருடன் பாலியலில் ஈடுபடல் மற்றும் பாலியல் தாக்குதல் என்பன குற்றச் செயற்பாடுகளாக, சட்டத்திற்குப் புறம்பான பாலியல் செயற்பாடுகளுக்கு உதாரணங்களாகும்.

வகைகள்

பாலியல் செயற்பாடு பல வழிகளாக வகைப்படுத்தப்படுகின்றன. ஒருவர் (தானியக்க சிற்றின்பவியல் எனலாம்) சுய இன்பம் அல்லது இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்டவர்களுடன் பெண்ணுறுப்பு வழி பாலுறவு, குதவழிப் பாலுறவு, வாய்வழிப் பாலுறவு அல்லது பரஸ்பர சுய இன்பம் போன்ற வழிகளைக் குறிக்கும். பாலுறவு என்பது இருவருக்கிடையிலான உட்செலுத்துதலைக் குறிக்கலாம், ஆனால் இந்த வரையறை வேறுபடலாம். இரண்டிற்கு மேற்பட்டவர்கள் பாலியல் நடவடிக்கை மேற்கொண்டால், அது குழுப் பாலுறவு எனப்படும். தானியக்க சிற்றின்பச் செயற்பாடு என்பது செயற்கை ஆண்குறிகள், அதிரும் பாலியல் மொம்மைகள், குத அடைப்பான்கள், வேறு பாலியல் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றினூடாகவும் இடம்பெறும். மேலும், இவற்றை தன் பங்காளியுடனும் சேர்த்துச் செய்யலாம்.

பாலியல் செயல்பாடுகளை பாலினம், பங்கேற்பாளர்களின் பாலியல் நாட்டம், பங்குகொள்பவர்களுக்கிடையேயான உறவு ஆகியவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தலாம். உதாரணமாக, உறவுகள் என்பது திருமணம் நெருங்கிய பங்காளிகள், சாதாரண பாலியல் பங்காளிகள் அல்லது அறிமுகமற்றவர்களுடனாக இருக்கலாம். பாலியல் செயல்பாடு வழக்கமானதாகவோ அல்லது திடீரென ஏற்பட்டதாகவோ, பாலியல் நெறிபிறழ்வு நடவடிக்கைகளுக்காகவோ (அடையாளக் காமம், துன்புறுத்தல், அடிமைப்படுத்தல், அடிமையாதல் போன்றனவாகவோ) அமையலாம். அடையாளக் காமம் என்பது குறிப்பிட்டசில உடல் உறுப்புகளான பெரிய மார்பகங்கள், தொப்புள்கள் அல்லது பாத வழிபாடு போன்றவற்றின் மீதான விருப்பம் முதல் கொண்டு பலவிதமானதாகக் காணப்படும். பொருள் மீதான விருப்பம் பொதுவாக காலணிகள், உள்ளாடை, தோல் அல்லது இரப்பர் பொருட்கள் ஆகியவற்றில் ஏற்படுகிறது. சில வழக்கமற்ற தானியக்க சிற்றின்ப முறைகள் ஆபத்தானவையாகலாம். சிற்றின்ப மூச்சுத்திணறல் மற்றும் சுய அடிமைத்தனம் ஆகியவை இவற்றில் அடங்கும். இது காயம் அல்லது இறப்புக்கான சாத்தியக்கூறுகளை பங்காளியுடன் செய்யும்போதும் ஏற்படுத்தவல்லது. அடையாளக் காமம் (முறையே மூச்சுத் திணறல் மற்றும் அடிமைத்தனம்)

பாலியல் செயல்பாடு என்பது வழமையானதாக இருக்கலாம், அதாவது பங்கேற்பாளர்கள் இருவரும் பங்கேற்க ஒப்புக்கொள்வதாலோ, அவர்களுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய வயதுடையவர்களாகவோ இருக்கலாம். இல்லாவிடில், பலவந்தமாக அல்லது வலுக்கட்டாயமாக நடைபெறலாம். இது பெரும்பாலும் பாலியல் வன்முறை அல்லது வன்புணர்வு என்று அழைக்கப்படுகிறது. பல்வேறு கலாச்சாரங்களிலும் நாடுகளிலும், பங்கேற்பவர்களின் வயது, பாலினம், திருமண நிலை அல்லது பிற காரணிகளைப் பொறுத்து சட்டபூர்வமானது அல்லது சட்டவிரோதமானது பாலியல் செயல்பாடு ஆகலாம். 

இனச்சேர்க்கை உத்திகள்

பரிணாம உளவியல் மற்றும் நடத்தை சூழலியல் ஆகியவற்றில், மனித இனச்சேர்க்கை உத்திகள் என்பது மற்றவரை ஈர்க்கவும், தேர்ந்தெடுக்கவும், இனச்சேர்க்கைக்குத் தக்கவைக்கவும் பயன்படுத்தப்படும் நடத்தைகளின் தொகுப்பாகும். இனப்பெருக்கம் உத்திகள் இனச்சேர்க்கை உத்திகளுக்கு மேலாகச் செல்கிறது. 

மற்ற விலங்குகளுடன் தொடர்புபட்டுப்பார்க்கும்போது, மனித இனச்சேர்க்கை உத்திகள் அவர்களின் கலாச்சார தன்மைகளான திருமணம் பந்தம் ஆகியவற்றால் தனித்துவமானது. மனிதன் நீண்டகால நோக்கத்துடன் நெருங்கிய உறவு, திருமணம், சாதாரண உறவு அல்லது நட்பு ஆகியவற்றை நாடலாம். பலமிக்க மனித இயக்கங்களில் ஒள்றாக உறவுக்கான மனித விருப்பம் காணப்படுகின்றது. இது மனித இயல்பின் ஓர் உள்ளார்ந்த அம்சமாகும். மேலும் இது பாலியல் இயக்கத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம். மனித இனச்சேர்க்கை செயல்முறை சமூக மற்றும் கலாச்சாரச் செயல்முறைகளை உள்ளடக்கியது. 

பாலுணர்ச்சியைத் தூண்டுதலின்போது உடலியல் எழுச்சி நிலைகள்

பாலுணர்ச்சியைத் தூண்டுதலின்போது உடலியல் செயற்பாடு ஆணுக்கும் பெண்ணுக்கும் கிட்டத்தட்ட மிகவும் ஒத்தவையாகவும் நான்கு கட்டங்களையும் கொண்டதாகவும் இருக்கும்.

  1. உற்சாக கட்டத்தின் போது, பாலியல் உறுப்புகளிலும் அதைச் சுற்றியும் தசை விறைத்து, இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதயம் துடிப்பு மற்றும் சுவாசம் அதிகரித்து, இரத்த அழுத்தம் அதிகரிக்கும். ஆணும் பெண்ணும் உடலின் மேற்பகுதியிலும் மற்றும் முகத்திலும் தோல் சிவத்தலை அனுபவிப்பர் (இனப்பிரிவிற்கேற்ப மாறுபடும்). பொதுவாக, பெண்ணின் யோனி வழவழப்பாகி, பெண்குறிக் காம்பு வீக்கம் வீக்கமடையும்.  ஆணின் ஆண்குறி விறைத்துவிடும்.
  2. உணர்சிக் கட்டத்தின்போது, இதய துடிப்பும் தசை விறைப்பும் மேலும் அதிகரிக்கும். ஆணின் சிறுநீர்ப்பை மூடி, விந்துப் பாய்மம் சிறுநீரிடன் கலப்பதைத் தடுக்கும். பெண்ணின் பெண்குறிக் காம்பு சிறிது விலகக்கூடும். அத்துடன், ஆதிக வழவழப்பும் யோனியின் வெளிப்புறம் வீக்கமடைந்து தசைகள் இறுக்கமடைவதுடன் யோனி விட்டம் குறைவடையும்.
  3. புணர்ச்சிப் பரவசநிலையின்போது, சுவாசம் மிகவும் விரைவாகி, மற்றும் இடுப்புத் தசைகள் சுருக்கங்களைத் தொடங்கும். ஆணும் பெண்ணும் கீழ் இடுப்புத் தசைகளின் விரைவான சுருக்கத்தை அனுபவிப்பர். பெண்கள் பெரும்பாலும் கருப்பை மற்றும் யோனி சுருக்கங்களை அனுபவிப்பர். இந்த அனுபவத்தை தீவிரமாக இன்பம் என்று விவரிக்க முடியும். ஆனால் சுமார் 15% பெண்கள் ஒருபோதும் புணர்ச்சி பரவசநிலையை அனுபவிப்பதில்லை. பெரும்பாலான அறிக்கைகள் பெண்கள் போலி புணர்ச்சி பரவசநிலையை அடைகின்றனர் என்கின்றன.
  4. உறவுக்குப் பின்னான கட்டத்தின் போது, தசைகள் தளர்ந்து, இரத்த அழுத்தம் குறைந்து, உடல் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பும். ஆயினும், பெண்கள் அதிக உணர்ச்சிக் கட்டத்தை அனுபவிப்பதில்லை என்று பொதுவாக அறிக்கையிடப்பட்டாலும், அவர்கள் மேலதிக புணர்ச்சிப் பரவசநிலையை அல்லது பல புணர்ச்சிப் பரவசநிலைகளை முதலாவது புணர்ச்சிப் பரவசநிலை அடுத்து விரைவில் அனுபவிக்க முடியும். சில ஆய்வுகள் கூறுகையில், ஆண்களும் பெண்களும் அதிக உணர்ச்சிக் கட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கின்றது.

பாலியல் கோளாறு என்பது பாலியல் தூண்டுதலுக்கு உணர்ச்சி ரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ செயல்பட இயலாமைக் குறிக்கும். இது பாலியல் வெவ்வேறு கட்டங்களைப் பாதிக்கும். அக்கட்டங்கள ஆசை, உற்சாகம் மற்றும் புணர்ச்சி ஆகியனவாகும். 

ஊடகங்கள் பாலியல் கோளாற்றை பெரும்பாலும் ஆண்களுடன் தொடர்புபடுத்துகிறது. ஆனால், உண்மையில் இது ஆண்களைவிட (31 சதவீதம்) பெண்களில் (43 சதவீதம்) பொதுவாகக் காணப்படுகிறது.

உளவியல் வேறுபாடுகள்

பாலியல் செயல்பாடு இரத்த அழுத்தத்தையும் ஒட்டுமொத்த மன அழுத்தத்தினதும் அளவையும் குறைக்கும். இது பதற்றத்தை வெளிவிடவும், மனநிலையை உயர்த்தவும் உதவுகிறது. உயிர்வேதியியல் கண்ணோட்டத்தின்படி, வலி தணிப்புச்சுரப்புகள் வெளியீட்டுக்கும் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிகரிக்கும் வெள்ளை இரத்த அணுக்களின் அளவை அதிகரிக்கவும் உடலுறவு உதவுகின்றது. உயிரியல் உளவியல் இதழ் ஆய்வின்படி, முந்தைய இரவில் உடலுறவில் ஈடுபட்ட ஆண்கள் மறுநாள் மன அழுத்த சூழ்நிலைகளுக்கு சிறப்பாக பதிலளித்தனர் என்கின்றது. உடலுறவு பொதுவாக மன அழுத்த நிவாரணியாக இருந்தாலும், பங்காளி தங்கள் செயல்திறனைப் பற்றி கவலைப்படும்போது, அது மன அழுத்தத்தை ஏற்படுத்தும்.