மொழிபெயர்

தமிழின அழிப்பு நினைவு நாள் – மே 18 (கனடா)

தமிழின அழிப்பு நினைவு நாள் என்பது ஒவ்வொரு வருடமும் மே 18 அன்று கனடாவில் நினைவுகூரப்படும் ஒரு நாளாகும்.

தமிழின அழிப்பு நினைவு நாள்

இலங்கை யுத்தத்தின் இறுதிச்சமர் முல்லைத்தீவின் முள்ளிவாய்க்கால் எனும் இடத்தில் இடம்பெற்று, பல தமிழர்கள் கொல்லப்பட 18 மே 2009 அன்று முடிவுக்கு வந்தது. முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு நாள், மே 18 தமிழர் படுகொலை நாள், தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் போன்ற பெயர்களின் இலங்கை உட்பட இலங்கைத்தமிழர் வாழும் நாடுகளில் அத்தினம் நினைவுகூறப்பட்டு வந்தது. அதன் 13 வது நினைவு தினம் 18 மே 2022 அன்றும் நினைவுகூறப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கனேடிய நாடாளுமன்றம் மே 18 ஐ தமிழின அழிப்பு நினைவு நாள் என அறிவித்தது.

ஒவ்வொரு வருடமும் மே 18 ஆம் திகதியை தமிழர் இனப்படுகொலை நினைவு தினமாக (Tamil Genocide Remembrance Day, Journée de commémoration du génocide tamoul) ஆக்குவதற்கான பிரேரணை கனேடிய நாடாளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. லிபரல் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கேரி ஆனந்தசங்கரி 18 மே 2022 அன்று இப்பிரேரணையை முன்வைத்திருந்தார். இதற்கு கனேடிய அரசியல் கட்சிகளான லிபரல் கட்சி, பழைமை வாத கட்சி, கியூபெக் புளக் கியூபெக்குவா, புதிய குடியுரிமை கட்சி, பசுமை கட்சி என்பன ஆதரவு தெரிவித்திருந்தன.

நாடாளுமன்றம் ஒன்று இவ்வாறு தமிழர் இனப்படுகொலை நினைவு தினம் ஒன்றை அறிவித்தது இதுவே முதல் முறை. இதற்கு இலங்கை அரசு ஆட்சேபம் தெரிவித்திருந்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக