இதனை தமிழில் சிகைக்காய் அல்லது சீக்காய் எனவும் அழைப்பதுண்டு. சிகை என்றால் தலை முடி என்று பொருள். இதனை தலைக்குத் தேய்த்து குளிப்பதுண்டு. சிகைக்காய் என்பது மருவி சீயக்காய் அல்லது சீக்காய் என பயன்படுத்தப்படுகிறது.
இதன் ஆங்கிலப் பொதுப்பெயர் இலத்தீன் சொல்லான sapo என்பதில் இருந்து பெறப்பட்டது. இதன் பொருள் சவர்க்காரம் ("soap") என்பதாகும். மேலும் indicus என்பது இந்தியா என்பதற்கான பொருள் ஆகும்.
இதன் இலைகள் 15–40 செ.மீ (5.9–15.7 அங்குலம்) வரை நீளமாக வளரக்கூடியன. ஓலை 14-30 இலைகளைக் கொண்டு காணப்படும். இதன் மலர்கள் பெரிய பூங்கொத்தில் இருந்து உருவாகின்றன. இதன் சிறிய மலர்கள் பாலேடு வெண்மை நிறமுடையன. பழம் சிறியதும் தோல் போன்ற வெளி அமைப்புடன் உள்ளோட்டுச்சதையம் கொண்டு காணப்படும். இது 1–2 செ.மீ (0.39–0.79 அங்குலம்) குறுக்களவு கொண்டதும், மஞ்சள் நிறமானது பழுத்ததும் கருமையாக மாறிவிடும். இதனுள் ஒன்று முதல் மூன்று வித்துகள் வரை காணப்படலாம்.
பயன்பாடு
சீயக்காய் டஸா் பட்டிற்கான இயற்கைச் சாயத்தை உருவாக்கப் பயன்படுகின்றது. உள்ளோட்டுச் சதைக்கனி இயற்கை மேல் பரப்பி உள்ள சப்போனின் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இதனை பழங்காலத்தில் ஆசிய நாட்டவரும் செவ்விந்தியரும் கழுவுவதற்காகப் பயன்படுத்தினர்.வரலாற்று ரீதியாக உள்நாட்டு மருத்துவத்தில் சீயக்காய் பயன்படுத்தப்பட்டது. ஆனாலும் அறிவியல் ஆய்வு ரீதியாக அதன் விளைவு பற்றி அறியப்படவுமில்லை உறுதிசெய்யப்படவுமில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக