மொழிபெயர்

வேளைக்காரர் கிளர்ச்சி

வேளைக்காரர் கிளர்ச்சி (Velakkara revolt) என்பது சிங்கள அரசனான முதலாம் விஜயபாகுவின் படைப்பிரிவில் இருந்த வேளைக்காரர் படைப்பிரிவனால் ஆட்சிக்கெதிராக நடத்திய கிளர்ச்சியைக் குறிக்கும். "வேளம்" என்பது அரணுள்ள உள் முற்றம் ஆகும். வேளத்தைக் காக்க நியமிக்கப்பட்ட வேளைக்காரர் படைப்பிரிவு அரசரையும், அரச குடும்பத்தையும் காக்க நியமிக்கப்பட்ட சிறப்புப் பிரிவாகும். வேளைக்காரர் அரச காவலர்களாகவும் தமிழ் கூலிப்படையாகவும் காணப்பட்டனர். வரலாற்றில், இது இலங்கையை ஆண்ட தமிழ், சிங்கள மன்னர்களின் நம்பிக்கைக்குரிய படைப்பிரிவாகக் காணப்பட்டது.

ஆட்சி 1 வது விஜயபாகு
காலம் கி.பி. 12ம் நூற்றாண்டு
ஆண்டு சுமார் கி.பி. 1084
இடம் பொலன்னறுவை
முடிவு கிளர்ச்சி அடக்கப்பட்டது

வேளைக்காரர் கிளர்ச்சி

சுமார் கி.பி. 1084 இல் மேற்கு சாளுக்கியத்திற்கு அனுப்பப்பட்ட விஜயபாகுவின் சில அரச தூதரர்கள் தொந்தரவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சோழ அரசுக்கெதிராக குழப்பம் உருவாகியது. முதலாம் விஜயபாகு சோழர்களுக்கு எதிரான போரை அறிவித்து, வேளைக்காரரை அவர்களுக்கெதிராக சண்டையிடக் கட்டளையிட்டான். வேளைக்காரர் தங்கள் தமிழ் உறவினருக்கெதிராக சண்டையிட மறுத்து, விஜயபாகுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். அரச காவலர்களை கொலை செய்து, அரண்மனையை எரித்தனர். விஜயபாகு வைக்கிரிகலைக்குத் தப்பியோடினார். ஆனால், பொலன்னறுவை திரும்பவும் கைப்பற்ற திரும்பி வந்தார். பின்னர் கிளர்ச்சித் தலைவர்கள் பிடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டனர். வேளைக்காரர் தமிழ் கல்வெட்டு ஒன்றை உருவாக்கி புனிதப்பல்லைப் பாதுகாக்க வாக்குக்குறிதியளித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக