மொழிபெயர்

உலகில் வேகமானவை

உலகில் வேகமானவை என்ற தலைப்பின் கீழ் பல விடயங்கள் உள்ளடக்கப்படும். ஆனாலும், இதனை நிலையான கணிப்பீடாக எடுத்துக் கொள்ள முடியாது. குறிப்பாக மனிதனால் செய்யப்படும் உற்பத்திகள் அவ்வப்போது மாற்றத்திற்குள்ளாகலாம். இன்று வேகமாக உள்ள தொடரூந்து நாளை பின் தள்ளப்படலாம். ஆனாலும், இயற்கையானவற்றில் இம்மாற்றம் ஏற்பட வாய்ப்புக்கள் மிகக் குறைவு. தரையில் வேகமாக ஓடக்கூடிய மிருகம் என்றால், அது வேங்கைதான்.

fastest

வேங்கை (சிவிங்கிப்புலி) மணிக்கு 0 முதல் 10 கி.மீ வேகத்தை 3 வினாடிகளில் எட்டக்கூடியது. நிலத்தில் மணிக்கு 120.7 கி.மீ. (75.0 மைல்) வேகத்தில் ஓடக்கூடியது.

பொரி வல்லூறு மிகவும் வேகமாக பறக்கும் பறவையாகும். மணிக்கு 325 கி.மீ வேகத்தில் பறக்கக்கூடியது. இது இறையைப் பிடிப்பதற்காக கீழே வரும் அதிக நேரமாக மணிக்கு 389 கி.மீ. (242 மைல்) பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், விலங்கினங்களில் (நீர், நிலம், ஆகாயம்) இதுவே வேகமானதும் ஆகும்.


கருப்பு மர்லின் என்ற மீன் உலகின் வேகமான மீனும் கடல் விலங்கும் ஆகும். இதன் வேகம் மணிக்கு 129 கி.மீ. (80 மைல்) எனப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

புகட்டி வேய்ரன் இ.பி 16.4 (Bugatti Veyron EP 16.4) வேகமான தானூந்தாகும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 431.072 கி.மீ ஆகும். ஆனால், ஏவூர்தி இயக்கத்தில் இயங்கிய திரஸ்ட் எஸ்எஸ்சி (Thrust SSC) என்ற தானூந்து ஒலியைவிட வேகமாக மணிக்கு 1,228 கி.மீ (763 மைல்) வேகத்தில் ஓடியது.

லொக்கீட் எஸ்.ஆர்-71 பிளக்பேர்ட் (Lockheed SR-71 Blackbird) என்ற முற்றிலும் மனித இயககம் கொண்ட வானூர்தி மணிக்கு 3,529.6 கி.மீ. வேகத்தில் பறந்து சாதனை செய்தது. ஆனால், எக்ஸ்-15 (X-15) என்ற நாசாவின் மனித இயக்க, வலுவூட்டப்பட்ட வானூர்தி 6.72 மாக் வேகத்தில் 102,100 அடி (31,120 மீட்டர்) உயரத்தில் மணிக்கு 4,520 மைல் (7,274 கி.மீ) வேகத்தில் பறந்தது.

ஜே.ஆர்-மக்லெவ் (JR-Maglev) என்ற தொடரூந்து உலகில் மிகவும் வேகமாகச் செல்லும் தொடரூந்து என்ற சாதனைக்குரியது. இதன் வேகம் மணிக்கு 360 மைல்கள் (581 கி.மீ) ஆகும்.

டுவிஸ்டா என்ற ராப் பாடகர் ஒரு நிமிடத்தில் 280 சொற்களைப் பாடி, உலகில் வேகமான ராப் பாடகர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

இரண்டு கின்னஸ் சாதனைகளுக்குச் சொந்தக்காரரான மொரிஸ் கட்ஸ் உலகில் வேகமான ஓவியர் என்ற பெயரைப் பெற்றுள்ளார்.

உலகில் மிக வேகமாக மக்களால் பார்க்கப்பட்ட யூடியூப் கானொளியாக “ஜென்டில்மேன்” (“Gentleman” — PSY) பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்றே நாட்களில் இதற்கு 100 மில்லியன் பார்வைகள் கிடைக்கப்பெற்றது.

உலகில் வேகமான மனிதனான உசேன் போல்ட் உள்ளார். இவர் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் எட்டினார்.

உலகில் வேகமான பெண்ணாக அமெரிக்கரான புளோரென்ஸ் கிரிபித் ஜோய்னர் உள்ளார். 1988 இல் இவர் 100 மீட்டர் தூரத்தை 10.49 வினாடிகளில் அடைந்தார்.

நடுத்தாடி பல்லியோந்தி உலகில் வேகமான ஊர்வனவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மணிக்கு 40 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

உலகில் வேகமான பாலூட்டியாக மெக்சிக்கோ சுயேச்சை வால் வௌவால் உள்ளது. அதனால் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பறக்க முடியும்.

உலகில் வேகமான பெரும் சூறாவளியாக 1919 ஒக்லோகமாவைத் தாக்கிய சூறாவளி பதிவு செய்யப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதன் வேகம் மணிக்கு 318 மைலாக இருந்ததாக பதிவு செய்துள்ளனர்.

உலகில் வேகமான வான்வெளிக் கலமாக நியூ கொரைசன்ஸ் (New Horizons) உள்ளது. நாசாவினால் புளுட்டோவிற்கு அனுப்பப்பட்ட இது, பூமியைவிட்டு விலகுமுன்பே இதன் வேகம் மணிக்கு 58,536 கி.மீ. என பதிவுசெய்யப்பட்டது.

இதைத் தவிர ஒளி மிக மிக வேகமுடையது. ஒளியின் வேகம் மணிக்கு 671 மில்லியன் மைல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக