மொழிபெயர்

தமிழ்த்தாய்

தமிழ்த்தாய் அல்லது தமிழன்னை (mother of the Tamil language; Tamil Thaai) என்பது தமிழ் மொழிக்கான தாய் உருவமாக தெய்வமாக்கட்ட ஒன்றாகும். இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் அரைவாசியின் பிற்பகுதியில் தமிழ் மறுமலர்ச்சி இயக்க காலத்தில் தமிழ் மொழியின் வேண்டப்பட்ட உருவமாக உருவாக்கப்பட்டது. தமிழ்த்தாயினை வாழ்த்தி மனோன்மணியம் சுந்தரம் பிள்ளையால் (1855 – 1897) எழுதப்பட்டு 1891 இல் வெளியிடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தினைத் தொடர்ந்து தமிழ்த்தாய் எனும் பதம் தமிழ் பேசும் உலகில் முக்கியத்துவம் பெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்து எம். எஸ். விஸ்வநாதனால் இசையமைக்கப்பட்டதிலிருந்து தமிழ்நாடு அரசாங்கத்தின் மாநிலப் பாடலாக உள்வாங்கப்பட்டது.

தமிழ்த்தாய்
தமிழ்த்தாய் அல்லது தமிழன்னை

தமிழ்த்தாய் கோயில்

தமிழ் மொழியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த்தாய் தெய்வத்திற்கான கோயில் தமிழ்த்தாய் கோயில் என அழைக்கப்படுகின்றது. இது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள காரைக்குடியில் அமைந்துள்ளது. இது தமிழுக்காக கடவுளுக்காக உலகில் அமைக்கப்பட்டுள்ள ஒரே கோயிலாகும். இக்கோயில் கம்பன் மணி மண்டப வளாகத்தின்  அமைந்துள்ளது. இது அமைந்துள்ள தெரு தமிழ்த்தாய் கோயில் வீதி என அழைக்கப்படுகின்றது.

தமிழ்த்தாய்க்குக் கோயில் உருவாக்க வேண்டும் என்ற சிந்தனையை கம்பன் கழக நிறுவனர் கம்பன் ஆடிப்போடி சா. கணேசனின் கொண்டிருந்தார்.  23 ஏப்ரல் 1975 அன்று கோயிலுக்குகான கால்கோள் விழா நடைபெற்றது. தமிழக அரசு ஐந்து இலட்சம் ரூபாய் நிதியின ஒதுக்கியது. சா. கணேசன், மாமல்லபுரம் சிற்பக்கல்லூரியின் முன்னாள் முதல்வர் வை. கணபதி ஸ்தபதி என்போரால் தமிழ்த்தாய் சிலைக்கு வடிவம் கொடுத்தனர். இறுதிக் கட்ட வேலைகளுக்காக மீண்டும் தமிழக அரசு ஐந்து லட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கியது. இதனை அன்றைய தமிழக அரசின் முதல்வர் மு. கருணாநிதி 16 ஏப்ரல் 1993 இல் திறந்து வைத்தார். , கம்பன் அறநிலை இக்கோயிலை நிர்வாகம் செய்கிறது.

அமைப்பு

தமிழ்த்தாய்க் கோயில் கம்பன் மணி மண்டபத்தின் வலப்புறத்தில் வடக்குப் பக்கம் நோக்கியவாறு மும்முனை நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இது ஆறு பட்டை, ஆறு நிலை, ஆறு விமானங்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் பரிவார தெய்வங்களாக, வடக்கில் வள்ளுவர், தென்கில் இளங்கோவடிகள், வடமேற்கில் கம்பர் என்போர் தனி விமானங்களுடன் அமைக்கப்பட்டுள்ளனர். நுழைவாயிலின் முன் ஒலித்தாய், வரித்தாய் ஆகியோர் துவார பாலகிகளாக அமைக்கப்பட்டுள்ளனர்.

வழிபாட்டு முறைகள்

இக்கோயிலிலுள்ள தமிழ்த்தாய்ச் சிலை மற்றைய கோயில்களில் உள்ள சிலையைப் போன்று வழிபடுவதில்லை. ஒவ்வொரு வருடமும் ஏப்ரலில் கப்பன் விழாவின்போது இக்கோயில் திறப்படுகின்றது. மற்றக் காலங்களில் இது பூட்டப்பட்டிருக்கும். ஆயினும், இவ்விதியில் மாற்றங்களும் உள்ளன.

மலர், மாலை, நறும்புகை ஆகியவை முற்றத்தில் படைக்கப்படும். திருநீராட்டுச் செய்யும்போது உலோகம், மரம், மண்கலன்கள் ஆகியவை பயன்படுத்தக்கூடாது எனினும் விதிவிலக்கும் உள்ளது. தமிழ்த்தாய் உள்ளிட்ட சிலைகளுக்கு ஆடை, அணி, மாலை முதலியவை அணிதல் கூடாது. ஆனால் தமிழ்த்தாய்க்கு ஆடை அணிவிக்கும் முறையும் உள்ளது. மா, வாழை, பலா, இளநீர், தேங்காய், தேன், பால், சர்க்கரை போன்ற பொருட்கள் படைக்கப்படும். பொது வழிபாட்டின்போது தேங்காய், பழம், மலர் ஆகியவற்றுடனான படையல் மூத்த ஒருவருக்கு வழங்கப்படும். அதன்பின் எல்லோருக்கும் சந்தனம், மலர், சர்க்கரை ஆகியவற்றுடன் பிரசாதம் வழங்கப்பெறும்.

தமிழ்த்தாய்ச் சிலை

தமிழ்த்தாய்ச் சிலை நான்கு கைகளுடன், வலக்கால் கீழே தொங்கியவாறும், இடக்கால் மடித்த நிலையிலும், தாமரைப் பீடத்தில் அமர்ந்தவாறு உள்ளது. வலப்புற பின் கையில் சுடரும், பின்புற இடக்கையில் செங்கேட்டு யாழும் உள்ளன. வலப்புற கீழுள்ள கையில் உருத்திராட்ச மாலையும், இடப்புற கீழுள்ள கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன. கால்களில் சிலம்பும் தண்டையும் அணியப்பட்டுள்ளன. சேர, சோழ, பாண்டிய மூவேந்தர்களின் சின்னங்களான வில், புலி, மீன் என்பன சிலையின் பின்புறத்தை அலங்காரம் செய்யும் திருவாச்சியில் பொறிக்கப்பட்டுள்ளன. தமிழ்த்தாயின் வலப்புறம் அகத்தியர் சிலையும், இடப்புறம் தொல்காப்பியர் சிலையும் அமைக்கப்பட்டுள்ளன.

வேறு வடிவங்கள்

ஆயினும் ஊடகங்களில் பல்வேறு வடிவமைப்பில் தமிழ்த்தாய் உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது. பஞ்சலோகச் சிலை வடிவமைப்பு தமிழ்த்தாய் உலகின் மீது அமர்ந்திருப்பது போன்று, உலகம் முழுவதும் தமிழ் பரவுதல் என்ற கருத்தில் 1940 இல் கணேசனால் உருவாக்கப்பட்டது. ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக 1981 இல் மதுரையில் அமைக்கப்பட்ட சிலை தாமரையில் அபாய முத்திரையுடன் அமர்ந்திருப்பது போன்றும் உருவாக்கப்பட்டது. சில இடங்களில், தமிழ் இலக்கியத்திற்கு செய்த பணிக்காக ஆண்டாள் தமிழ்த்தாய் என கருதப்படுகிறாள். மதுரையில் நிற்கும் நிலையில் தமிழ்த்தாய்ச் சிலை உருவாக்க பரிந்துரைக்கப்பட்டது.

மதுரையில் தமிழ்த்தாய்ச் சிலை

1981 இல், அன்றைய தமிழக அரசின் முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரன் ஜனவரி 1981 இல் ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டுக்காக தமிழ்த்தாயின் சிலை மதுரையில் திறக்கப்படும் என அறிவித்திருந்தார்.

14 மே 2013 இல் அப்போதைய தமிழக அரசின் முதல்வர் ஜெ. ஜெயலலிதா 100 கோடி ரூபா செலவில் மதுரையில் 300 அடி உயர தமிழ்த்தாய் சிலை நிறுவப்படும் என அறிவித்தார். அது நியூயோர்க்கில் அமைந்துள்ள அமெரிக்க சுதந்திர சிலையின் உயரத்திற்கு ஒப்பாகும் என அறிவித்தார். ஆயினும், அச்சிலை அமைக்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அத்திட்டத்திற்காக பரிந்துரைக்கப்பட்ட உருவம் சில விமர்சனங்களைப் பெற்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக