மலேசியத் தமிழ் |
ஆரம்ப கால வாணிப நடவடிக்கையின்போது, தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ளுமாறு பொதுவான மொழி ஒன்று தேவையாகவிருந்தது. வரலாற்றாசிரியர்களான ஜே. வி. செபஸ்ரியன், கே. ரி. திருநாவுக்கரசு, ஏ. டபிள்யு. ஹமில்டன் போன்றோர் வரலாற்றுக் காலத்தில் மலேசியாவிலும் இந்தோனேசியாவிலும் வாணிபத்திற்கான பொது மொழியாக தமிழ் காணப்பட்டது எனப் பதிவு செய்துள்ளனர். கடல்சார் தமிழ் குறிப்பிடத்தக்கமை சுமத்திரா, மலாய் தீபகற்ப வர்த்தகத்தில் நூற்றாண்டாக தொடர்ந்து, வாணிபச் செயற்பாடுகளினால் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டு வரையாக காலத்தில் தமிழ்ச் சொற்கள் மலாயினுள் உள்வாங்கப்படுதல் அதிகரித்தது. 17 ஆம் நூற்றாண்டில், கிழக்கிந்தியக் கம்பனி தன்னுடைய கடிதப் போக்குவரத்தில் தமிழை கட்டாயமாக உள்வாங்கியது. மலாக்காவிலும் ஏனைய பிற துறைமுகங்களிலும், 19 ஆம் நூற்றாண்டு வரை, வரவு செலவு கணக்கு முறையிலும் கணக்கியலிலும் மலாய் சொற்றொகுதியுடன் தமிழ் பெருமளவில் பயன்படுத்தப்பட்டது.
நாளாந்தப் பாவனையிலுள்ள சொற்கள் சில தமிழிலிருந்து மலாய்க்கு கடன் (தமிழிலுள்ள வடமொழிச் சொற்களும் இதனுள் அடக்கம்) வாங்கப்பட்டுள்ளன. சில எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:
தமிழ் | மலாய் |
கடை | கெடை |
கப்பல் | கபல் |
வகை | பகய் |
நகரம் | நகர |
பூமி | புமி |
சுவர்க்கம் | சுவர்க்க |
அநியாயம் | அநியாய |
ரகசியம் | ரகஷ்ய |
வர்ணம் | வர்ண |
மலேசியத் தமிழுக்கான சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவன மொழிக் குறியீட்டின் மூன்றாம் பகுதிக் குறியீடு (ISO 639-3) mala1467 என்பதாகும். 2006- 2010 கணக்கெடுப்பின்படி மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் 3.9 மில்லியன் பேர் மலேசியத் தமிழைப் பேசுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக