மொழிபெயர்

வழுக்கைப் புல்

வழுக்கைப் புல் என்பது கொமேலினாசியே (Commelinaceae) குடும்ப ஆண்டுத் தாவர இனமாகும். இதன் தாவரவியல் பெயர் சையனோடிஸ் அக்சிலாரிஸ் (Cyanotis axillaris) என்பதாகும். படர்ந்து வளரும் இத்தாவரம் இந்தியா, இலங்கை உட்பட்ட இந்திய துணைக்கண்டம், தென் சீனா, வட அவுஸ்திரேலியா ஆகிய இடங்களைத் தாயகமாக் கொண்டது. இது மழைக்காலக் காடு, கானகம், செறிவான புல்நிலம் ஆகிய இடங்களில் வளருகின்றது. இது மூலிகைத் தாவரமாக இந்தியா, இலங்கை ஆகிய இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் பன்றிகளுக்கு உணவாக சில இடங்களில் கொடுக்கப்படுகிறது. இது ஒரு தீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1) ஆகும்.

வழுக்கைப் புல்
வழுக்கைப் புல்

திணை தாவரம்
உயிரினக் கிளை பூக்கும் தாவரம்
உயிரினக் கிளை ஒருவித்திலை
உயிரினக் கிளை கொமேலினிட்ஸ்
வகுப்பு கொமேலினேல்ஸ்
குடும்பம் கொமேலினேசியா
பேரினம் சையனோடிஸ்
இனம் சை. அக்சிலாரிஸ்


வழுக்கைப் புல் சதைப்பற்றுள்ள ஒரு பூண்டாகும். இது 15-45 செ.மீ உயரமாக வளரக்கூடியதாகவும். நீளமாக, ஒடுக்கமான, வரி போன்ற ஈட்டி அமைப்பை ஒத்த இலைகள் 5-15 செ.மீ வரை வளரக்கூடியது. இதன் ஊதா நிறப்பூக்கள் 5-6 மி.மீ குறுக்களவில் இலையின் உறை அமைப்பில் சாய்வாக வெளிப்பட்டுக் காணப்படும். இதன் பூவிதழ் அகலமாக முட்டை வடிவிலும் இழைகள் நீண்டு நீள நிற உரோமம் போன்ற அமைந்து மயிர்கள் போன்ற தோற்றத்தை அளிக்கின்றன. இப்பூண்டு பொதுவான ஒரு களையாக பயிர்ச்செய்கை நிலங்களில் காணப்படுகின்றது. இதன் பூக்கும் காலம் ஆகஸ்ட் முதல் ஒக்டோபர் வரையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக