மொழிபெயர்

தமிழ்

தமிழ் என்பது பொதுவாக தமிழ் மொழியைக் குறிக்கப் பயன்படுகிறது. தமிழ் என்பது தமிழ் அரிச்சுவடி (தமிழ் எழுத்து முறை), தமிழர் ஆகிய சொற்களுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. சில வேளைகளில் "தமிழ்" என்பது ஒர் நபரின் பெயராகவும் இருப்பதுண்டு. திராவிட மொழிக் குடும்ப மொழிகளில் ஒன்று ஆன இதனை தமிழர்களும், பிற இனத்தவர்களும் தங்களின் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். தமிழ் பண்டைய காலத்தில் உருவாகிய செம்மொழிகளில் ஒன்றும் ஆகும். இது இந்திய மாநிலங்களாகிய தமிழ்நாடு, பாண்டிச்சேரி, அந்தமான் நிக்கோபர் தீவுகள் என்பனவற்றின் அலுவலக மொழியாகவும், இலங்கையின் தேசிய மொழியாகவும், சிங்கப்பூரின் அலுவலக மொழியாகவும், மலேசியாவில் கல்வி ஊடக மொழியாகவும் உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இந்திய மாநிலங்களில் இரண்டாம் மொழிகளில் ஒன்றாகவும் பேசப்படுகிறது. இதனை இங்கிலாந்து, மெளரிட்டஸ், கனடா, தென்னாப்பிரிக்கா, பிஜி, ஜேர்மனி, பிலிப்பைன்ஸ், ஐக்கிய அமெரிக்கா, நெதர்லாந்து, இந்தோனேசியா, ரீயூனியன் போன்ற நாடுகளில் சிறிதளவில் பேசுகின்றனர். தமிழ் மொழி எழுபது மில்லியன் மக்களின் தாய் மொழியும், எட்டு மில்லியன் மக்களின் இரண்டாம் மொழியும், உலக சனத்தொகையில் ஒரு வீத மக்கள் பயன்படுத்தும் மொழியும் ஆகும். தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இது பதினெட்டாவது இடத்தில் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக