மொழிபெயர்

இராணியின் கோபுரம்

நெடுந்தீவிலுள்ள இராணியின் கோபுரம் (Queen's Tower) குயிண்டாக் கோபுரம் (Quindah Tower) எனவும் அழைக்கப்படும். இது இடச்சுக்காரர்களால் கட்டப்பட்டது. பின்னர் இதனை பிரித்தானியர்களும் பயன்படுத்தினர். இக்கோபுரம் நெடுந்தீவில் தென்கிழக்காக 9°28′30.6″N 79°43′12.3″E என்ற அமைவில் அமையப்பட்டுள்ளது. இதன் உயரம் 23 அடியாகும் (7 மீட்டர்). 

Queen's Tower

இது முன்னர் இடச்சுக்காரர்களாலும் பிரித்தானியராலும் கலங்கரை விளக்காகவும் திசைகாட்டும் இடமானவும் பயன்படுத்தப்பட்டது. இதன் அடியில் வைக்கப்படும் தீ வெற்றிடத்தை உருவாக்கி, காற்றை மேல் நோக்கித் தள்ளும். கோபுரத்தின் புகைபோக்கி போன்ற குழாய் அமைப்பு ஊடாக வெளிச்சம் மேலே கொண்டு செல்லப்படும். இதனால் தூரத்திலுள்ள மாலுமிகளால் பார்க்க முடியும். பிரித்தானியர் ஆட்சியில் அரசரின் கோபுரம் ஒன்றும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அது இன்று அழிவடைந்து விட்டது. இராணியின் கோபுரம் / குயிண்டாக் கோபுரம் தற்போது உல்லாசப் பயணிகளின் கவனத்தை பெறும் ஒரு நினைவுச்சின்னமாக காணப்படுகின்றது. மேலும், இது யாழ்ப்பாணத்திலுள்ள பாதுகாக்கப்படும் தொல்பொருள் நிணைவுச்சின்னமாகவம் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக